மனைவியின் தொந்தரவால் திருமணமான 1 வாரத்தில் தற்கொலை செய்த வாலிபர்!

மனைவியின் தொந்தரவால் திருமணமான 1 வாரத்தில் உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள ஒரு கிராமத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.  

Written by - ZEE Bureau | Last Updated : Nov 20, 2021, 09:15 PM IST
மனைவியின் தொந்தரவால் திருமணமான 1 வாரத்தில் தற்கொலை செய்த வாலிபர்!

உத்தரபிரதேசம்: பொதுவாக திருமணமான சில நாட்களில் கணவன் கொடுமையாலும், புகுந்த வீட்டில் ஏற்படும் வரதட்சணை கொடுமையாலும் புது மணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தான் நாம் அதிகளவில் கேள்விப்பட்டிருப்போம்.   ஆனால் திருமணமான சில நாட்களிலேயே, அதாவது 1 வாரத்திலேயே மனைவியின் கொடுமையால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை கேள்விப்பட்டதுண்டா ?  அது போன்ற ஒரு சம்பவம் தான் உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள ஒரு கிராமத்தில் நிகழ்ந்துள்ளது.

ALSO READ நீங்கள் இன்னும் பல சீசன்களுக்கு CSK-ஐ வழிநடத்த விரும்புகிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்

உத்தரப்பிரேதேச மாநிலம், ஷாம்லி மாவட்டத்திலுள்ள சோன்சா கிராமத்தை சேர்ந்தவர் ப்ரயாசா(23) என்பவர் கடந்த 14-ம் தேதியன்று கோமல் என்கிற பெண்ணை இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.  இதனையடுத்து, பிரயாசின் மனைவி கோமல் மற்றும் அவரது சகோதரர், பிரயாசை துன்புறுத்தியதாக தெரிகிறது.  இதனால் மனமுடைந்த அவர் வெள்ளிக்கிழமையன்று விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.  இந்த சம்பவத்தை தொடர்ந்து பிரயாசின் சகோதரி சீமா போலீசில் புகார் அளித்தார். 

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.  அப்போது தான் பிரயாசின் மனைவி மற்றும் அவரது சகோதரர் பிரயாசை துன்புறுத்தியது தெரியவந்தது.  இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தெரியவந்தது.  இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிப்பு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இதே போல் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு சூரத்தில் மனைவி கொடுமையால் கணவன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ காதலன் பேசவில்லை என்று காவல்துறைக்கு போன் செய்த பெண்! சேர்த்து வைத்த காவல்துறை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News