முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் பிறந்த நாளில் அவரை புகழ்ந்த பிரதமர் மோடி...!!!
பிரதமர் மோடி அவர்கள், முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் பிறந்த நாளை ஒட்டி, அவரை இந்தியாவின் தலை சிறந்த மகன் என புகழ்ந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவ் அவர்களின் பிறந்த நாளை நினைவு கூர்ந்து, அவர் இந்தியாவின் சிறந்த மகன் என்று புகழ்ந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை அன்று (ஜூன் 28), 'மான் கி பாத்' என்னும் நிகழ்ச்சியில், நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர், முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவரை 'இந்தியாவின் தலை சிறந்த மகன்' என்று அழைத்தார்.
ALSO READ | தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்த காங்கிரஸ்... லடாக் கவுன்சிலர் அதிர்ச்சி தகவல்...!!!
மறைந்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான பி.வி நரசிம்ம ராவை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி (PM Narendra Modi), இந்தியாவின் வரலாற்றில் மிக முக்கியமான நேரத்தில் அவர், நாட்டை வழிநடத்தினார் என்று கூறினார். ராவ் ஒரு சிறந்த அரசியல் தலைவர் மற்றும் அறிஞர் என்று அவர் பாராட்டினார்.
ஒரு எளிமையான குடும்ப பின்னணியில் கடுமையாக உழைத்து அவர் தேசத்தின் பிரதமராக உயர்ந்து, நாட்டிற்கு பெருமை சேர்த்தவர் என அவர் கூறினார். அவர் ஒருபோதும் அநீதியை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் சிறுவயதிலிருந்தே அதற்கு எதிராக போராடினார் என்று பிரதமர் மோடி கூறினார்.
ALSO READ | சீன வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் ட்ராகனை ஒழித்து கட்டும் திட்டம்...!!!
இந்தியாவின் (India) கலாச்சார பெருமையை நன்கு அறிந்து வைத்திருந்ததோடு, மேற்கத்திய சிந்தனைகளை பற்றியும் நன்கு அறிந்தவர் என்றும் வரலாறு, இலக்கியம் மற்றும் அறிவியலில் அதிக ஆர்வம் உள்ள தலைவராக இருந்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் மிகவும் அனுபவம் வாய்ந்த தலைவர்களில் ஒருவர் என்று அவர் மேலும் கூறினார்.
முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் ( Former PM PV narasimha Rao) அவர்கள், பல இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளை அறிந்தவர் என்றும் பரந்த சிந்தனை கொண்டவர் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். பி.வி. நரசிம்ம ராவ் அவர்களை பற்றி கூறினால் நமக்கு உடனே நினைவில் வருவது அவர் ஒரு அரசியல் தலைவர் என்பது தான், ஆனால், அவர் அதையும் தாண்டி பல திறமைகளை கொண்டிருந்தார் என்பது உண்மை! அவர் பல இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளைப் பேசும் திறமையை பெற்றிருந்தார் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமை அன்று பிரதமர் மோடி மக்களிடையே உரையாற்றும் மன் கீ பாத் என்னும் நிகழ்ச்சியில், சீனாவுடனான (China) தற்போதைய எல்லைப் பிரச்சினை குறித்தும் பேசினார். இந்தியா அண்டை நாட்டுடனான பிரச்சினையை திறமையாக சமாளித்து வருவதாகவும், நாட்டின் வலைமை இதன் மூலம் வெளிப்படும் என்றும் கூறினார்.
ALSO READ |அதிர்ச்சி தகவல்... வயிற்று வலியால் தான் ஆண் என்பதை உணர்ந்த மணமான பெண்..!!!
மொழியாக்கம்: வித்யா கோபாலகிருஷ்ணன்.