இந்திய (India) சீனா எல்லையில் பதற்றம் நிலவும் இந்த சூழ்நிலையில் (India China Border Issue) , லடாக் கவுன்சிலர் காங்கிரஸ் மீது பெரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 2004 முதல் 2014 வரை லே-மணாலி சாலையை நிர்மாணிக்க காங்கிரஸ் அனுமதிக்கவில்லை என்று அவர் கூறினார். இந்த திட்டத்திற்கு வாஜ்பாய் அரசு ஒப்புதல் அளித்தது.
சில நாட்களுக்கு முன்னதாக சோனியா காந்தி தலைமையிலான ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு 2006 ஆம் ஆண்டில், 10 லட்சம் ரூபாயை சீனா நன்கொடையாக அளித்தது அம்பலமாகியது. இதற்கு பதிலாக சீனா என்ன விதமான ஆதாயத்தை பெற்றது என்று பல விதமான அச்சங்களும் கேள்விகளும் மக்கள் மத்தியில் எழுந்தன.
Zee News உடன் உரையாடிய லடாக் ( Ladak) கவுன்சிலர் திரு, ஸ்டாஜின் லப்பா, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ( UPA) தேசிய பாதுகாப்பில் மிக முக்கிய அங்கம் வகிக்கும் இந்த சாலையை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டது என்றும் 2004 முதல் 2014 வரை எந்த விதமான முக்கியமான சாலை அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டார். லே-மணாலி சாலை அமைப்பதில் காங்கிரஸ் அலட்சியம் காட்டியது என்றும் 2007 ஆம் ஆண்டில், லே-மணாலி சாலை முடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றார்.
மேலும் படிக்க | அதிர்ச்சி தகவல்... வயிற்று வலியால் தான் ஆண் என்பதை உணர்ந்த மணமான பெண்..!!!
காங்கிரஸ் ( Congress) தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை விட, மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சியில், இந்தியா பலமாகிவிட்டது என்றால் மிகையில்லை. 2008 முதல் 2014 வரை யுபிஏ ஆட்சியில், எல்லைக்கு அருகே 1 சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது, 7,270 மீட்டர் நீளமுள்ள பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. 3,610 கி.மீ சாலைகள் கட்டப்பட்டுள்ளன. அதே சமயம், பாஜக (BJP) ஆட்சி காலத்தில், 2014 முதல் 2020 வரை 6 சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன, சுமார் 19 சுரங்கப்பாதைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர, மோடி அரசின் கடந்த 6 ஆண்டுகளில் 14,450 மீட்டர் நீள பாலங்கள் கட்டப்பட்டு, 4,764 கி.மீ சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
UPA ஆட்சியின் போது, உள்கட்டமைப்பை நிர்மாணிப்பதற்கான பட்ஜெட்டில், குறைந்த அளவு நிதி ஒதுக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டிற்குப் பிறகு, உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான கட்டுமானத்தை மோடி அரசு துரிதப்படுத்தியதுடன், அதற்கான பட்ஜெட்டையும் அதிகரித்தது. 2008 முதல் 2016 வரை, உள்கட்டமைப்புக்கு, ரூ .3,300 முதல் 4,600 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டிற்குப் பிறகு, 2017-18 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் ரூ.5,450 கோடி உள்கட்டமைப்பிற்காக வழங்கப்பட்டது. இதன் பின்னர், 2018-19 ஆம் ஆண்டில் 6,700 கோடியும், 2019-20 ஆம் ஆண்டில் 8,050 கோடியும், இந்த ஆண்டு, அதாவது, 2020-21 பட்ஜெட்டில் ரூ.11,800 கோடி நிதி ஒதுக்கப்பட்டன.
ALSO READ | சீன வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் ட்ராகனை ஒழித்து கட்டும் திட்டம்...!!!
2018 ஆம் ஆண்டில் CAG வெளியிட்ட அறிக்கையின்படி, 2012 ஆம் ஆண்டு வரை 61 சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் 2016 ஆம் ஆண்டு வரை 22 சாலைகள் மட்டுமே அமைக்கப்பட்டன. இந்த 22 சாலைகளுக்கு 4,536 கோடி செலவிடப்பட்டது, ஆனால், இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி 4,622 கோடி ஆகும், அதாவது இதற்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் 98% செலவிடப்பட்டது, ஆனால் பாதிக்கும் குறைவான எண்ணிக்கையிலான மட்டுமே சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து எல்லை பகுதிகளில் சாலை கட்டமைப்பை வலுப்படுத்த, காங்கிரஸ் முக்கியத்துவம் எதுவும் கொடுக்கவில்லை என்பது தெளிவாகிறது.
மொழியாக்கம்: வித்யா கோபாலகிருஷ்ணன்