தேசிய இளைஞர் தினம்: 100 இளைஞர்களை கொடுங்கள், இந்தியாவை மாற்றி காட்டுகிறேன்
`100 இளைஞர்களை கொடுங்கள், இந்தியாவை மாற்றி காட்டுகிறேன்` என்று வீரமாய் கோரிக்கை விடுத்த சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம் இன்று...
"100 இளைஞர்களை கொடுங்கள், இந்தியாவை மாற்றி காட்டுகிறேன்" என்று வீரமாய் கோரிக்கை விடுத்த சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம் இன்று...
இளைஞர்களே, ஒரு நாட்டின் எதிர்காலம என்று அணித்தரமாய் நம்பிய சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளான ஜனவரி 12ம் தேதி, நாட்டின் எதிர்காலமாகிய இளைஞர்களுக்கு ஊக்கம் தரும் வகையில், தேசிய இளைஞர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
சரியான திட்டமிடலும், விடாமுயற்சியும் இருந்தால், எவ்வித சூழ்நிலையிலும் சாதனை என்பது, எட்டக்கூடிய இலக்கே என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்பதை என்றென்றும் நினைவூட்டிக் கொண்டிருக்கிறார் சுவாமி விவேகானந்தர்.
சுவாமி விவேகானந்தர் 1893ஆம் ஆண்டு நிகழ்த்திய உரை, வரலாற்றின் பொன்னேடுகளில் பதிக்கப்பட்டவை. தலைமுறை தலைமுறையாக எதிரொலிக்கும் இந்த மாபெரும் சிந்தனைகளால், என்றென்றும் ஊக்கமளிக்கும் இளைஞராக பார்க்கப்படுகிறார் சுவாமி விவேகானந்தர்.
ALSO READ | ரயில் பயணிகளின் கவனத்திற்கு! பயணிகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள்
இந்திய மண்ணில் உதித்த ஞான சூரியனான சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் (Swami Vivekananda) நரேந்திரநாத் தத்தா. இராமகிருஷ்ண பரமஹம்சரின் பரம சீடரான இவர் இந்தியாவில் மட்டுமல்ல மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றி இளைஞர்களை ஈர்த்துள்ளார்.
தேசிய மறுமலர்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்டது சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை என்றால் அது மிகையாகாது. நாட்டின் இளைஞர்களை தேசத்தைக் கட்டியெழுப்ப உழைக்கத் தூண்டியவர் சுவாமி விவேகானந்தர்.
தேசத்திற்காக அவர் கண்ட கனவுகளை நனவாக்க நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம் என சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
ALSO READ | இன்னும் 2 நாட்களில் இந்த 3 ராசிக்காரர்களின் தலைவிதி தலைகீழாக மாறும்
1893-ம் ஆண்டு சிகாகோவில் உலகச் சமய மாநாட்டில் நிகழ்த்திய சொற்பொழிவு இந்தியாவை (India) திரும்பி பார்க்க வைத்தது. காவி உடை அணிந்த அந்த இந்து துறவி ஆற்றிய உரை அங்கிருப்பவர்களை கட்டிப்போட்டது.
1863 ஜனவரி 12ஆம் நாள் கொல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த சுவாமி விவேகானந்தரின் தாய் மொழி வங்காளம்.
அமெரிக்காவின் (America) சிகாகோவில் 1893ஆம் ஆண்டு உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து, சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்த கருத்துக்களை பரப்பினார் விவேகானந்தர்.
லண்டன் மற்றும் நியூயார்க் நகரங்களில் வேதாந்த மையங்களை நிறுவிய விவேகானந்தர், கொல்கத்தாவில் ராமகிருஷண மிஷன் மற்றும் மடத்தையும் நிறுவினார். 1899ஆம் ஆண்டு ஜனவரி முதல் 1900ஆம் ஆண்டு டிசம்பர் வரை இரண்டாம் முறையாக மேலை நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.
உலகில் இந்து மதத்தின் புகழை பரப்பிய துறவியான விவேகானந்தர் 1902-ம் ஆண்டு ஜூலை 4-ம் நாள், தனது 39-ம் வயதில் பேலூரில் காலமானார். சுவாமி விவேகானந்தர் பெருமையை உலகெங்கிலும் எடுத்துச் சென்ற சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை, நாடு, தேசிய இளைஞர் தினமாக நினைவுகூர்கிறது.
ALSO READ | மேற்கு வங்க மண்ணில் உதித்த ஞான சூரியன் விவேகானந்தர்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR