புது டெல்லி: மே மாதத்தில் NET தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை இன்று அறிவித்துள்ளது. இந்த தேர்வு மே 2-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் 'நிஷாங்க்' (Ramesh Pokhriyal) செவ்வாயன்று UGC-NET 2021 தேர்வு தேதிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் மூலம் அறிவித்தார். தேசிய சோதனை நிறுவனம் (NTA) ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் மற்றும் உதவி பேராசிரியருக்கான தகுதிக்கான UGC-NET தேர்வுகளை 2021 மே 2 முதல் 17 வரை நடத்துகிறது.


இது குறித்து கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால்., "தேசிய சோதனை நிறுவனம் (@DG_NTA) ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் மற்றும் உதவி பேராசிரியருக்கான தகுதிக்கான அடுத்த UGC-NET தேர்வை 2, 3, 4, 5, 6, 7, 10, 11, 12, 14 & 17 மே 2021 அன்று நடத்துகிறது என்று ட்விட் செய்துள்ளார்.


ALSO READ | CBSE 10, 12 வகுப்புகளுக்கான தேர்வுகள் எப்போது? கல்வி அமைச்சர் அறிவிக்கிறார்


 



 


கணினி அடிப்படையிலான சோதனை (CBT) முறையில் தேர்வு நடத்தப்படும். தேர்வுக்கு ஆஜராகி, UGC NET 2021 தொடர்பான கூடுதல் விவரங்களை சரிபார்க்க விரும்பும் மாணவர்கள் வலைத்தளத்தைப் பார்வையிடலாம் - nta.ac.in.


UGC NET 2021 விண்ணப்ப சாளரம் மார்ச் 2 வரை திறந்திருக்கும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்திற்கான அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR