சீர்திருத்தம் இல்லாமல் ஐநாவின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிறது.. பிரதமர் மோடி..!!!
ஐ.நா. சபை உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் உலக நாடுகளின் தலைவர்கள் காணொலி வாயிலாகப் பங்கேற்கும் கூட்டம் நடைபெறுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் 75 வது ஆண்டுவிழாவிற்காக திங்களன்று, ஐநா வெளியிட்ட பிரகடனத்தில், ஐநா பாதுகாப்பு சபையில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும் என ஐநா கூறியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ( PM Narendra Modi) இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
ஐ.நா. (UN) சபை உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் உலக நாடுகளின் தலைவா்கள் காணொலி வாயிலாகப் பங்கேற்கும் கூட்டம் நடைபெறுகிறது.
அதில் காணொலி மூலம் பங்கேற்ற பிரதமர் மோடி, சீர்திருத்தங்களை மேற்கொள்ளாததால் ஐக்கிய நாடுகள் சபை நம்பிக்கையை இழந்து வருகிறது. இன்றைய உலகின் யதார்த்த நிலைக்கு ஏற்ப, அனைத்து உறுப்பு நாடுகளின் நலனிற்காகவும், மனித குலத்தில் நலனிற்காகவும் கவனம் செலுத்தும் பன்முக தன்மையை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் சீர்திருத்தம் தேவை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
ALSO READ | டிஜிட்டல் இந்தியா.... பீகார் மக்களுக்கு மாபெரும் பரிசை வழங்கும் PM Modi....
75 ஆண்டுகளுக்கு முன்பு, போர் சூழ்நிலையில் ஒரு புதிய நம்பிக்கை உணர்வை ஊட்டும் வகையில், மனித வரலாற்றில் முதல்முறையாக, ஒரு உலகம் முழுவதற்குமான ஒரு நிறுவனமாக ஐநா உருவாக்கப்பட்டது. ஐ.நா. சாசனத்தின் கையொப்பமிட்ட, இந்தியா அந்த உன்னத தொடக்கத்தின் ஒரு பகுதியாக இருந்தது. உலகத்தை ஒரே குடும்பமாகப் பார்க்கும் 'வசுதைவ குடும்பகம்' என்னும் இந்தியாவின் தத்துவத்தை ஐநா பிரதிபலிக்கிறது என”பிரதமர் மோடி தனது உரையில் கூறினார்.
மோடியின் பதிவு செய்யப்பட்ட உரை, இந்திய நேரப்படி இன்று காலை 3 மணி ஒலிபரப்பபட்டது. ஐநாவிற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான டி.எஸ். திருமூர்த்தி முன்னதாக வரவேற்பு உரை நிகழ்த்தினார்.
தனது வழக்கமான ஆடையான குர்தா ஒரு இலை பச்சை நிற உடை அணிந்திருந்த மோடி, இந்திய தேசிய கொடி அருகே நின்று தனது பதிவு செய்யப்பட்ட உரை ஒளிபரப்பப்பட்டது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதலில் பேசுவதாக இருந்தது. ஆனால், அவர் உரை நிகழ்த்தாமல் கூட்டத்தை புறக்கணித்தார்.
ஈரான் பொருளாதாரத் தடைகள் தொடர்பாக அமெரிக்காவிற்கும் ஐ.நாவிற்கும் இடையில்
பிரச்சனை தொடங்கிய 24 மணி நேரத்திற்குள் ஐநா சபையின் பொது கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு கவுன்சிலிடமிருந்து அனுமதி அளிக்கும் அமெரிக்காவின் கோரிக்கைகளின் அடிப்படையில் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை ஐக்கிய நாடுகள் சபை ஆதரிக்காது என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிரான ஐ.நா.வின் அனைத்து பொருளாதாரத் தடைகளும் நீக்கப்பட்டுள்ள விவகாரம், ஐநாவின் உயர் மட்ட கூட்டத்தில், சந்தேகத்திற்கு இடமின்றி சர்ச்சையை தூண்டும் என டிரம்ப் நிர்வாகம் சனிக்கிழமை முதல் மீண்டும் மீண்டும் கூறி வந்தது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஐக்கிய நாடுகள் சபை தனது 75 வது ஆண்டு நிறைவு விழாவை, சிறிய அளவில் நடத்தியது குறிப்பிடத்தக்கது. ஜூன் 26, 1945 இல் சான் பிரான்சிஸ்கோவில் சுமார் 50 நாடுகள் ஐநா சாசனனத்தின் கையெழுத்திட்டனர்.
மேலும் படிக்க | Ladakh-ல் வலுவாக கால் ஊன்றியுள்ள இந்திய ராணுவம்.. அஞ்சி நடுங்கும் சீனா...!!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR