நிழலுக தாதா தாவூத் இப்ராஹிமின் சகோதரர் போதைப்பொருள் வழக்கில் கைது
நிழலுக தாதா மற்றும் தப்பியோடிய மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் சூத்திரதாரி தாவூத் இப்ராஹிம். அவரது சகோதரர் இக்பால் கஸ்கரை மும்பையில் உள்ள போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு (NCB) கைது வைத்துள்ளது. பல வழக்குகளில் இக்பால் கஸ்கரிடம் முன்னதாக நடத்தப்பட்ட விசாரணைகளில் பல சர்வதேச தொடர்புகள் அம்பலமாகின. இதன் மூலம் போதை பொருள் கட்டுபாட்டு அமைப்பு மும்பையில் பல போதை மருந்து தொடர்புகளை கண்டறிந்தது.
மும்பை: நிழலுக தாதா மற்றும் தப்பியோடிய மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் சூத்திரதாரி தாவூத் இப்ராஹிம். அவரது சகோதரர் இக்பால் கஸ்கரை மும்பையில் உள்ள போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு (NCB) கைது வைத்துள்ளது. பல வழக்குகளில் இக்பால் கஸ்கரிடம் முன்னதாக நடத்தப்பட்ட விசாரணைகளில் பல சர்வதேச தொடர்புகள் அம்பலமாகின. இதன் மூலம் போதை பொருள் கட்டுபாட்டு அமைப்பு மும்பையில் பல போதை மருந்து தொடர்புகளை கண்டறிந்தது.
தாவூத் இப்ராஹிமின் (Dawood Ibrahim) சகோதரர் இக்பால் கஸ்கரை போதைப்பொருள் வழக்கில், போதைப் பொருள் தடுப்பு அமைப்பு கைது செய்துள்ளது என செய்தி நிறுவனமான ANI செய்தி வெளியிட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் இருந்து பஞ்சாபிற்கு கொண்டு வரப்பட்டு வந்த இங்கிருந்து குறைந்தது இருபத்தைந்து கிலோ கஞ்சா பொருட்களை போதை பொருள் கட்டுபாட்டு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த பஞ்சாபில் இருந்து மும்பைக்கு கொண்ட வரப்பட இருந்ததாக, உறுதிபடுத்தப்படாத ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, இக்பால் கஸ்கர் பணமோசடி வழக்கில் சிக்கியிருந்தார், மகாராஷ்டிராவில் (Maharashtra) ஒரு பிரபல கட்டுமான தொழில் அதிபரை மிரட்டி பணம் பறித்ததாகக் கூறப்படும் வழக்கில் அமலாக்க பிரிவு மற்றும் மும்பை காவல்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்திருந்தது.
ALSO READ | விஜய் மல்லையா, நீரவ் மோடியின் ₹9,371 கோடி சொத்துக்கள் வங்கிகளிடம் ஒப்படைப்பு: ED
மும்பை காவல்துறையினர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் மற்றொரு தப்பியோடிய மாபியா கும்பலை சேர்ந்த சோட்டா ஷகீல் மற்றும் பல குண்டர்கள் மீது, மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருக்கும் எதிராக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 384, 386, 387, 34 மற்றும் 120 (பி), மற்றும் மகாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சட்டம் பிரிவு 3 (1) (ii), 3 (2), 3 (4) மற்றும் 3 ( 5), ஆகிய பிரிவுகளின் கீழ் காசர்வதாவளி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக இக்பால் கஸ்கரின் மகன் ரிஸ்வான், நாட்டை விட்டு தப்பியோட முயன்றபோது மிரட்டி பணம் பறித்தல் தடுப்பு பிரிவு கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | மெகுல் சோக்ஸி இந்தியாவிற்கு கொண்டு வரப்படுவது எப்போது; அரசு கூறுவது என்ன
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR