தலித் சிறுமிகளை நிர்வாணமாக நிற்க வைத்த ஆசிரியர்கள்!
உத்தர பிரதேசத்தில் ஆரம்பப் பள்ளி ஒன்றில் தலித் சிறுமிகள் இருவர் ஆடையின்றி நிற்க வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டம், உதய்பூர் கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தலித் சிறுமிகள் இருவர் 4 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஜூலை 11 ஆம் தேதி அப்பள்ளியில் புகைப்படம் எடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது 4 ஆம் வகுப்பில் 2 மாணவிகள் பள்ளி சீருடையில் வரவில்லை என தெரிகிறது. இதனால் புகைப்படத்திற்காக அதே வகுப்பைச் சேர்ந்த 2 தலித் சிறுமிகளின் சீருடைகளை கழற்றி தருமாறு அந்த வகுப்பின் ஆசிரியர்கள் கேட்டுள்ளனர்.
இதனால் தலித் சிறுமிகளும் தங்களுடைய சீருடைகளை கழற்றி சக மாணவிகளிடம் கொடுத்துவிட்டு ஆடை இல்லாமல் நின்றுள்ளனர். இவ்வாறு மேல் ஆடை இல்லாமல் சிறுமிகள் இருவரும் சுமார் 1 மணி நேரம் நின்றுள்ளது குறிப்பிடதக்கது. இது குறித்து அச்சிறுமிகள் வீட்டிற்கு சென்று தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர்.
பின்னர் இது தொடர்பாக சிறுமிகளின் பெற்றோர் கபூர்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து ஆசிரியர்கள் இருவர் மீதும் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
மேலும் படிக்க | சர்விகல் கழுத்து வலியால் அவதியா? இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் நிவாரணம் அளிக்கும்
மேலும், எஸ்சி/எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டம் மற்றும் ஐபிசி பிரிவுகள் 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 504 (வேண்டுமென்றே அவமதித்தல்), 166 (பொது பணித்துறையினர் சட்டத்தை அவமதித்தல்) மற்றும் 505 (பொது வெளியில் அத்துமீறல்) ஆகிய சட்டங்களின் கீழ் ஆசிரியர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது என கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) சர்வேஷ் மிஸ்ரா தெரிவித்தார்.
மேலும் இது குறித்து ஆரம்ப கல்வி அதிகாரியான அர்ச்சனா குப்தா கூறுகையில், சம்பந்தப்பட்ட இரு ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும், அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் படிக்க | Weight Loss Tips: தொப்பையை குறைக்கணுமா? இப்படி செஞ்சி பாருங்க, சட்டுனு குறையும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ