அமெரிக்க நாடாளுமன்றத்தில் குடியேற்ற மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பிடன் (Joe Biden) அமெரிக்க குடியுரிமை சட்டத்தில் கொண்டு வந்த மாற்றங்களுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துவிட்டது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) குடியுரிமை சட்டத்தில் கொண்டுவந்த மாற்றம் காரணமாக கடும் விமர்சனத்துக்கு உள்ளானார் 


மில்லியன் கணக்கான ஆவணமற்ற புலம்பெயர்ந்தோருக்கு சட்டபூர்வமான அந்தஸ்தை வழங்கும் இரண்டு குடியேற்ற மசோதாக்களை அமெரிக்க பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியுள்ளது.


Also Read | Donald Trump அமெரிக்க அதிபராக இருந்தபோது அவரது சொத்து மதிப்பும் குறைந்தது


வெளிநாட்டில் போர் அல்லது இயற்கை பேரழிவுகளை விட்டு வெளியேறிய இளம் சிறார்கள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான குடியுரிமை கொடுப்பதற்கான வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் இரண்டு மில்லியன் மக்களுக்கு சட்டபூர்வமான அந்தஸ்து கிடைக்கும். 228-197 வாக்குகள்  அடிப்படையில் முதல் மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்தது.


இதனால், ஒவ்வொரு நாட்டில் இருந்தும் அமெரிக்காவிற்கு வந்து பணி புரிய பணியாளர்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாடு நீங்குகிறது. அதேபோல வேலை அடிப்படையில் கிரீன் கார்டு வழங்குவது அறிமுகம் செய்யப்படுகிறது.


இதன்மூலம் அமெரிக்காவில் தொழில் ரீதியாக குடியேறியுள்ள ஆயிரக்கணக்கான இந்திய தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கும் ஆசுவாசம் ஏற்பட்டுள்ளது.  
பண்ணை தொழிலாளர் நவீனமயமாக்கல் சட்டம் விவசாயத் தொழிலாளர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் நாட்டில் தங்க அனுமதிக்கிறது. இந்த மசோதா 247 - 174 என்ற வாக்குகளில் வெற்றி பெற்றது.


Also Read | Instagram Filter போல தோற்றமளிக்க 30 லட்சம் ரூபாய் செலவு! 


அதோடு, 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிரீன் கார்டுக்காக காத்திருப்போருக்கு நிரந்தர குடியுரிமை வழங்கவும் புதிய சட்டம் வழிவகை செய்கிறது. 


புலம்பெயர்ந்தவர்களை பாதுகாக்க காங்கிரஸ் தவறியதையடுத்து, அன்றைய அதிபர் பராக் ஒபாமா 2012 இல் Deferred Action on Childhood Arrivals program என்ற திட்டத்தைத் தொடங்கினார்.


DACA எனப்படும் இந்த முன்முயற்சியை டிரம்ப் முடிவுக்கு கொண்டுவந்தார், ஆனால் கடந்த ஆண்டு அமெரிக்க உச்ச நீதிமன்றம் இந்த திட்டத்தை உறுதி செய்தது குறிப்பிடத்தகக்து.


Also Read | Data Theft: OTPகள் பாதுகாப்பாக இல்லை, SMS மூலம் தரவுகள் திருட்டு   


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR