புது டெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா (Priyanka Gandhi) இன்று (புதன்கிழமை) மீண்டும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசிடம், காங்கிரஸ் கட்சி (Congress) ஏற்பாடு செய்த பேருந்துகளை புலம்பெயர்ந்த தொழிலாளர்களை (Migrant Workers) தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர் கூறியது, "எங்கள் புலம்பெயர்ந்த சகோதர சகோதரிகள் மோசமான வானிலை மற்றும் வெயிலில் உணவு இல்லாமல் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வீடு திருபிக்கொண்டு இருக்கிறார்கள்" என்று அவர் கூறினார்.


மேலும் படிக்க: புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தை காங்கிரஸ் ஏற்கும்: சோனியா காந்தி அதிரடி


"எங்கள் சகோதரிகளில் சிலர் கர்ப்பமாக உள்ளனர். ஆனால் அவர்கள் நடந்தே செல்ல வேண்டியிருக்கிறது. அவர்களில் சிலர் தங்கள் குழந்தைகளையும் சுமந்து செல்கிறார்கள்" என்று பிரியங்கா (Priyanka Gandhi) கூறினார்.


"எங்கள் பேருந்துகள் நேற்று முதல் அவர்களுக்காக காத்திருக்கின்றன. தயவுசெய்து நீங்கள் விருப்பப்பட்டால் உங்கள் கொடிகளை (பாஜக கொடி -BJP Flag) பேருந்துகளின் மேல் நிறுவிக்கொள்ளலலாம்,  ஆனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.


மேலும் படிக்க:  குஜராத்தில் கொரோனா பரவுவதற்கு ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சி தான் காரணம் -காங்கிரஸ்!


"நமது தேசத்தை உருவாக்கிய அவர்கள், இன்று தெருக்களில் நடப்பதும், சிரமங்களை எதிர்கொள்வதும் பெரும் கவலையாக உள்ளது. அவர்கள் அனைவரையும் பாதுகாப்பது நாம் அனைவரின் பொறுப்பாக இருக்கிறது. இது அரசியல் செய்ய வேண்டிய நேரம் அல்ல, அவர்களுக்கு உதவ வேண்டும்" என்று அவர் கூறினார்.


புலம்பெயர்ந்த தொழிலாளர்களை (Migrant Workers) அவர்களின் வீடுகளுக்கு அழைத்து செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட 1,000 பேருந்துகள் குறித்து காங்கிரஸ் கட்சி மற்றும் உத்தரப்பிரதேச அரசாங்கம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. 


யோகி அரசாங்கம் அந்த பேருந்துகளை எல்லைக்குள் நிறுத்தி வைத்திருப்பதாக காங்கிரஸ் (Congress) குற்றம் சாட்டியுள்ள நிலையில், அந்த பேருந்துகள் பதிவு செய்யப்படவில்லை என்றும் அவற்றில் சில ஆட்டோக்கள், ஆம்புலன்ஸ் மற்றும் லாரிகளின் பதிவு எண்களை கொண்டுள்ளன என உ.பி அரசு தெரிவித்துள்ளது. 


மேலும் படிக்க:  இதுதான் கடைசி ஊரடங்கு உத்தரவா அல்லது இன்னும் இருக்கா..? காங்கிரஸ் கேள்வி


பிரியங்கா (Priyanka Gandhi) செவ்வாயன்று பதிவிட்ட ஒரு ட்வீட்டில், யோகி அரசாங்கம் குறைந்தபட்சம் 879 வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். மேலும் இந்த பெருந்துகளின் தகவல் துல்லியமானது என்று கண்டறியப்பட்டது, எனவே புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வீட்டிற்கு கொண்டு செல்ல அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார். 


மற்றொரு ட்வீட்டில், அடுத்த நாள் தனது கட்சி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக (Migrant Workers) மேலும் 200 பேருந்துகளை ஏற்பாடு செய்யும் என்று பதிவிட்டிருந்தார்.


முன்னதாக, உத்தரப்பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு, யோகி ஆதித்யநாத் அரசாங்கம் தனது கட்சி ஏற்பாடு செய்த பேருந்துகளுக்கு அனுமதி வழங்கக் கோரி தர்ணாவில் ஈடுபட்டார், அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.


மேலும் செவ்வாய்க்கிழமை அன்று லல்லு மற்றும் பிரியங்கா காந்திக்கு (Priyanka Gandhi) எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.