உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் விஜயகுமார் (32) என்பவர், தீவிர வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு வந்தார். இதைத் தொடர்ந்து, மீரட் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை சோதித்த பார்த்த மருத்துவர்கள், அவரின் வயிற்றில் ஏராளமான ஸ்பூன்களை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவருக்கு, 2  மணிநேரத்திற்கு மேலாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவரின் வயிற்றில் இருந்து தலைகள் இல்லாத 63 ஸ்பூன்களை மருத்துவர்கள் எடுத்துள்ளனர். மேலும், போதை ஒழிப்பு மையத்தில் அவரை கட்டாயப்படுத்தி, ஸ்பூன்களை உட்கொள்ள வைத்ததுள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 


மேலும் படிக்க |கருக்கலைப்பு செய்ய அனைத்து பெண்களும் உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம்


மேலும், விஜயகுமார் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். இதுகுறித்து, விஜயகுமாரின் உறவினர் அஜய் சௌத்ரி கூறியதாவது,"விஜயகுமாருக்கு தீவிர வயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டுவந்தோம். பரிசோதனையில் அவரின் வயிற்றில் ஸ்பூன்கள் இருப்பது தெரியவந்தது அதைத் தொடர்ந்தே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஓராண்டாக்கு முன்னர், அவரை நாங்கள் போதை ஒழிப்பு மையத்தில் அனுமதித்தோம். அங்குதான் அவரை ஸ்பூன்களை உட்கொள்ள கட்டாயப்படுத்தியுள்ளனர்" என்றார். 



அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர், ராகேஷ் குரானா,"15 நாள்களுக்கு முன் அவரை என்னிடம் அழைத்துவந்தனர். எக்ஸ்-ரேவில் அவரையின் வயற்றிலும், பெருங்குடல் பகுதியிலும், உலோகத்திலான சில பொருள்கள் இருப்பது தெரியவந்தது. அவரிடம் கேட்டதற்கு, தன்னை கட்டாயப்படுத்தி ஸ்பூன்களை சாப்பிடவைத்ததாக கூறினார். அவருக்கு 2 மணிநேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டோம். இதற்குமுன், இதுபோன்று எந்த அறுவை சிகிச்சையும் நாங்கள் செய்ததில்லை" என்று கூறினார். 


அவர் உட்கொண்ட அனைத்து ஸ்பூன்களிலும், அதன் தலைகள் எடுக்கப்பட்டு, ஸ்பூன் தண்டுகள் மட்டும் உள்ளன. இதுவரை இதுதொடர்பாக, எந்த வழக்கும் பதிவுசெய்யப்படவில்லை. மேலும், விஜயகுமார் எப்போது இந்த ஸ்பூன்களை உட்கொண்டார் என்பதை உறுதியாக கூற இயலாது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.   


மேலும் படிக்க | Heart Day 2022: டேஸ்டுக்கு சாப்பிட்டால் ஹார்டுக்கு ஆபத்து: இதயம் விரும்பாத 5 உணவுகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ