பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் என்பது இந்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு திட்டம் ஆகும். இந்த திட்டம் கடந்த 2015ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமபுற மற்றும் நகர்புறத்தில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் வீடுகட்டி தரப்படுகிறது. தகுதியுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் மத்திய அரசு சார்பில் வீடு கட்டித்தரப்படுகிறது. இதற்கு முன்பு செயல்படுத்தப்பட்ட திட்டங்களை போல் இல்லாமல் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்காக, இந்த திட்டத்தில் பயன் பெற குடும்பத்தில் உள்ள பெண் வீட்டின் உரிமையாளராக அல்லது இணை உரிமையாளராக இருக்க வேண்டும். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் பயன்பெற இது அடிப்படை விதி ஆகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | நுழைவுத்தேர்வுகளுக்கான வடிவத்தை மாற்றிய NTA !புதிய தேர்வு தேதிககள் அறிவிப்பு!


இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் பிரதமர் ஆவாஸ் கிராமின் யோஜனா திட்டத்தின் முதல் தவணை வந்த பிறகு 11 திருமணமான பெண்கள் அவர்களது காதலர்களுடன் ஓடிவிட்டனர் என்ற செய்தி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் முதல் தவணையான ரூ.40,000 வந்த பிறகு தனது மனைவி சுனியாவை காணவில்லை என்று அவரது கணவர் சஞ்சய் தெரிவித்த பின்பு இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக அந்த பகுதியின் வட்டார வளர்ச்சி அலுவலர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அரசு முதல் தவணையாக ரூ.40,000 வெளியிட்டபிறகு, சுனியா என்ற பெண் தனது காதலனுடன் தப்பி சென்றது தெரியவந்துள்ளது.


உத்தரபிரதேசத்தில் உள்ள மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் சமீபத்தில் சுமார் 2,350 பயனாளிகள் முதல் தவணையைப் பெற்றுள்ளனர். சுனியா காணாமல் போனதை தொடர்ந்து அந்த பகுதியில் இதே போல மேலும் 10 வழக்குகள் பதிவானது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதே போல காணமல் போன மனைவிகளின் கணவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், மீதமுள்ள பணத்தை தனது மகன் சஞ்சய்யின் வங்கி கணக்கிற்கு மாற்றுமாறு சுனியாவின் மாமனார் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார்.


"என மருமகளின் வங்கி கணக்கிற்கு முதல் தவணை பணம் வந்தவுடன் அவள் ஒரு பையனுடன் ஓடிவிட்டாள். விசாரணையில் இது எங்களுக்கு தெரியவந்தது. எனவே மீதமுள்ள தவணை பணத்தை எனது மகனின் வங்கி கணக்கிற்கு மாற்றிவிடுங்கள்" என்று தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வீடு கட்டித்தரும் திட்டத்தை தவறாக பயன்படுத்துவது தவறு என்று மகாராஜ்கஞ்ச் மாவட்ட நீதிபதி அனுனய் ஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் முதல் தவணையை சில பெண்கள் அவர்களின் சொந்த காரணங்களுக்கு பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே, இதே போல பாரபங்கி மாவட்டல் இந்த திட்டத்தில் பணத்தை பெற்ற நான்கு பெண்கள் ரூ. 50,000 பணத்துடன் தங்கள் காதலர்களுடன் ஓடி உள்ளனர்.


மேலும் படிக்க | உச்சநீதிமன்ற விசாரணைக்கு பனியனுடன் வந்த நபர்! வெளியே போக சொன்ன நீதிபதி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ