நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை... ஒப்புக்கொண்ட மத்திய அரசு - உச்ச நீதிமன்றம் உத்தரவு என்ன?

NEET Question Leak Cases: நீட் வினாத்தாள் தேர்வுக்கு முன் கசிந்தது உண்மைதான் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது. அதுதொடர்பான வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தன.  

Written by - Sudharsan G | Last Updated : Jul 8, 2024, 04:19 PM IST
  • 67 மாணவர்கள் 100% மதிப்பெண்கள் பெற்ற விவகாரத்திலும் தலைமை நீதிபதி சந்தேகத்தை எழுப்பி உள்ளார்.
  • வினாத்தாள் கசிவு நடந்த விபரங்கள் அனைத்தையும் சிபிஐயிடம் ஒப்படைக்க உத்தரவு
  • வினாத்தாள் கசிவில் மாணவர்கள் மற்றும் பிறர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் - NTA
நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை... ஒப்புக்கொண்ட மத்திய அரசு - உச்ச நீதிமன்றம் உத்தரவு என்ன? title=

NEET Question Leak Cases: நீட் தேர்வின் வினாத்தாள்கள் லீக்கான விவகாரம் குறித்த வழக்குகளின் விசாரணை தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கோடை விடுமுறைக்கு பின் உச்சநீதிமன்றம் இன்று திறக்கப்பட்ட நிலையில்,  நீர் தேர்வு தொடர்பான அனைத்து வழக்குகளும் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, நீட் மறுதேர்வு என்பது நமது கடைசி ஆப்ஷன்தான் என்றும் வேறு வழியில்லை என்றால் மட்டுமே அதற்கு உத்தரவிட முடியும் எனவும் இந்த வழக்கில் விசாரணையில் தெரிவித்துள்ளது. 

நீட் தேர்வின் வினாத்தாள்கள் சமூக வலைதளங்களிலும் பிரபல மேசேஜிங் செயலிகளான வாட்ஸ்அப், டெலிகிராமில் தேர்வு நடைபெற இருந்த மே 5ஆம் தேதிக்கு 24 மணிநேரத்திற்கு முன் வினாத்தாள்கள் லீக்காகி உள்ளதை உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. அதுமட்டுமின்றி, இந்த லீக்கானது குறித்து போதிய விவரம் இல்லாத நிலையில், அதுகுறித்த விரிவான விசாரணை தேவை என்றார். மேலும், எத்தனை மாணவர்கள் இதுபோல் மோசடி செய்து தேர்வெழுதினார்கள் என்பது தெரியாமால் மறுதேர்வை வைக்கும்போது, அது தவறு செய்யாத பல லட்சக்கணக்கான மாணவர்களையும் பாதிக்கும் என நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும் படிக்க | உச்சநீதிமன்ற விசாரணைக்கு பனியனுடன் வந்த நபர்! வெளியே போக சொன்ன நீதிபதி!

விசாரணையில் தலைமை நீதிபதி சந்திரசூட், நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை ஒப்பு கொள்கிறீர்களா? என கேள்வி எழுப்பினார். அதற்கு தேசிய தேர்வு முகமை (NTA),"ஒரு இடத்தில் மட்டும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்கள் மற்றும் பிறர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களது மதிப்பெண்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது" என பதிலளித்துள்ளது.

தலைமை நீதிபதி, 'நீட் தேர்வுகளை வெளிநாடுகளிலும் எழுதுகிறார்கள் அப்படி என்றால் அந்த மாணவர்களுக்கு நீட் வினாத்தாள்கள் எவ்வாறு அனுப்பி வைக்கப்படுகிறது' என கேள்வி எழுப்பிய நிலையில், 'தூதரகங்கள் வாயிலாக அனுப்பி வைக்கப்படுகிறது' என்றது NTA. தொடர்ந்து தலைமை நீதிபதி, 'தூதரகங்களுக்கு எவ்வாறு அனுப்பி வைக்கப்படுகிறது?' என கேட்க விசாரித்து கூறுவதாக தேசிய தேர்வுகள் முகமை தரப்பு வழக்கறிஞர் பதில் அளித்துள்ளார்.

தொடர்ந்து, "நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நீட் தேர்வின் புனிதத் தன்மை பாதிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டியது இருக்கிறது" என கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி 67 மாணவர்கள் 100% மதிப்பெண்கள் பெற்ற விவகாரத்திலும் தனது சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார். மேலும், "இப்போது வினாத்தாள் கசிவு நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இனி கசிவு ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் பார்க்க வேண்டும். இப்போது வினாத்தாள் கசிவு நடந்த விபரங்கள் அனைத்தையும் சிபிஐயிடம் ஒப்படையுங்கள்" என தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டார். 
மேலும் படிக்க | நுழைவுத்தேர்வுகளுக்கான வடிவத்தை மாற்றிய NTA !புதிய தேர்வு தேதிககள் அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News