புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 13, 2021) வீடியோ கான்பரன்சிங் மூலம் குஜராத்தில் முதலீட்டாளர் உச்சிமாநாட்டில் உரையாற்றினார். தன்னார்வ  அடிப்படையில் வாகனங்களை நவீனமயமாக்கல் திட்டம் அல்லது பழைய வாகனங்களை அப்புறப்ப்படுத்துவதற்கான கொள்கையின் கீழ் பழைய வாகனங்களை அப்புறப்படுத்துவதற்கான உள்கட்டமைப்பை அமைப்பதற்கான முதலீட்டை வரவேற்பதே  உச்சிமாநாட்டின் நோக்கமாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜராத்தில் முதலீட்டாளர் உச்சி மாநாடு பழைய வாகனங்களை அப்புறப்படுத்தும் கட்டமைப்பு வசதிகளை அமைப்பதற்காக புதிய சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தியுள்ளது என பிரதமர் மோடி நம்பிக்கை வெளியிட்டார்


பழைய வாகனங்களை அப்புறப்படுத்தும் கொள்கை நாட்டின் ஆட்டோமொபைல் துறைக்கு ஒரு புதிய அடையாளத்தை வழங்கும். சாலைகளில் ஓட பிட் ஆக இல்லாத வாகனங்களை அகற்றுவதில் இது பெரும் பங்கு வகிக்கும். மேலும் ஆட்டோமொபைல் துறை மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் இது நேர்மறையான மாற்றத்தை கொண்டு வரும் "என்று குஜராத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் கூறினார்.


ALSO READ | பென்ஷன் இல்லையே என டென்ஷன் வேண்டாம்; ₹74,300 ஓய்வூதியம் தரும் அசத்தல் திட்டம்


நாங்கள் சுதந்திரத்தின் 75 வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும்  இந்த தருணத்திலிருந்து, அடுத்த 25 ஆண்டுகள் நாட்டிற்கு மிகவும் முக்கியமானவை. இந்த 25 ஆண்டுகள், நமது வேலை செய்யும் விதத்திலும், நமது அன்றாட வாழ்க்கையிலும், எங்கள் தொழில்களிலும் மாற்றங்கள் நடக்கப் போகின்றன, ”என்று பிரதமர் மோடி கூறினார்.


"தொழில்நுட்பம் மாறும் விதம், அது நம் வாழ்க்கை முறை அல்லது நமது பொருளாதாரம் - இரண்டிலும் நிறைய மாற்றங்கள் இருக்கும். இந்த மாற்றங்களுக்கு மத்தியில், நமது சுற்றுச்சூழல், நமது நிலம், நமது வளங்கள், நமது மூலப்பொருட்களைப் பாதுகாப்பதும் முக்கியம், ”என்று பிரதமர் நரேந்திர மோடி மேலும் கூறினார்.


நிலையான வளர்ச்சியின் அவசியத்தை வலியுறுத்தும் அதே வேளையில், தொழில்நுட்பமும் புதுமையும் எதிர்காலம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். "எதிர்காலத்தில் நாம் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளில் பணி செய்யலாம். ஆனால் அன்னை பூமியிலிருந்து நாம் பெறும் இயற்கை வளங்களை நம்மால் தயாரிக்க முடியாது. எனவே இதனை மனதில் வைத்துக் கொண்டு அரசு செயல்படுகிறது ”என்று பிரதமர் மோடி கூறினார்.


ALSO READ | ஓய்வூதிய வயதை அரசு அதிகரிக்குமா? பொருளாதார ஆலோசனை கவுன்சில் பரிந்துரைத்தது என்ன?


 


"நீடித்த வளர்ச்சிக்கு, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் நாம் மாற வேண்டும் என்பதற்கான முயற்சி இது. காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்ளும் நிலையில், குடிமக்களின் நலன் கருதி, இந்தியா முக்கிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், ”என்று பிரதமர் மோடி மேலும் கூறினார்.


வாகன ஸ்கிராப்பிங் கொள்கை, சாலையில் ஓட்டுவதற்கு பாதுகாப்பாக இல்லாத வகையிலும் சுற்றுசூழலை பாதிக்கும் வகையிலும்  உள்ள பழைய  வாகனங்களை படிப்படியாக அகற்றுவதற்கான கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் தானியங்கி சோதனை நிலையங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட பழைய வாகனங்களை  அப்புறப்படுத்துவதற்கான உள்கட்டமைப்பை உருவாக்க விரும்புகிறது.


தன்னார்வ அடிப்படையில்,  வாகனங்களை நவீனமயமாக்கல் திட்டம் அல்லது பழைய வாகனங்களை அப்புறப்படுத்துன் கொள்கையின் கீழ் வாகன ஸ்கிராப்பிங் உள்கட்டமைப்பை நிறுவுவதற்கான முதலீட்டை வரவேற்க முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் (PMO) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. உச்சிமாநாடு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மற்றும் குஜராத் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்படுகிறது.


ALSO READ: 7th Pay Commission சூப்பர் செய்தி: அகவிலைப்படி 28%-லிருந்து 31 % ஆக உயரும்!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR