ஓய்வூதிய வயதை அரசு அதிகரிக்குமா? பொருளாதார ஆலோசனை கவுன்சில் பரிந்துரைத்தது என்ன?

20250 வாக்கில், நாட்டில் உள்ள முதியோர் தொகை தற்போதைய அளவிலிருந்து  இரட்டிப்பாகும் எனவும் 5 பேரில் ஒருவர் மூத்த குடிமகனாக இருப்பார் என கூறப்படுகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 13, 2021, 12:56 PM IST
  • ஓய்வூதிய வயதை அதிகரிக்க அரசாங்கம் முன்மொழிகிறது
  • பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் அளித்த பரிந்துரை.
  • 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு திறன் மேம்பாட்டு திட்டம்.
ஓய்வூதிய வயதை அரசு அதிகரிக்குமா? பொருளாதார ஆலோசனை கவுன்சில் பரிந்துரைத்தது என்ன? title=

Retirement Age: வேலையின்மை தொடர்பாக தற்போது நாட்டில் பரபரப்பு பேசப்பட்டு வரும் நிலையில், ஓய்வூதிய வயதை அதிகரிப்பதற்கான முன்மொழிவு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் ஓய்வூதிய வயதை அதிகரிக்க பரிந்துரைக்கப்படுகிறது. வரும் காலங்களில், நாட்டில் முதியவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஓய்வூதிய வயதை அதிகரிக்க வேண்டும்

பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் ஓய்வூதிய வயதை அதிகரிக்க  வேண்டும் என அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. சிறந்த சுகாதார உள்கட்டமைப்பு காரணமாக  ஆயுட்காலம் தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கவுன்சில் கூறுகிறது. முதியவர்கள் தங்கள் முந்தைய தலைமுறையை விட அதிக காலத்திற்கு வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறுகிறது.

ஓய்வூதிய வயதை படிப்படியாக அதிகரிக்க வேண்டும்

புதன்கிழமை வெளியிடப்பட்ட பொருளாதார ஆலோசனை கவுன்சில் அறிக்கை, ஓய்வூதிய வயதை படிப்படியாக உயர்த்த வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. ஏனெனில் இந்தியா இளைஞர்களின் நாடு மற்றும் அதிக உழைக்கும் மக்கள் தொகை கொண்டது. பொருளாதார கவுன்சிலின் தலைவர் பிபெக் டெப்ராய் வெளியிட்ட அறிக்கையில், ஓய்வூதிய வயதை உயர்த்துவது தற்போதுள்ள ஊழியர்களின் தேவைகள் மற்றும் வேலைகள் கிடைப்பதில் சமரசம் செய்யாமல், அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முதியவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது.

ALSO READ | பென்ஷன் இல்லையே என டென்ஷன் வேண்டாம்; ₹74,300 ஓய்வூதியம் தரும் அசத்தல் திட்டம்

திறன் மேம்பாட்டிற்கான கொள்கையை உருவாக்குங்கள்

இந்த அறிக்கை 50 வயதுக்கு மேற்பட்ட நபர்களின் திறன் மேம்பாடு பற்றியும் குறிப்பிட்டுள்ளது. இதுபோன்ற கொள்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் உருவாக்க வேண்டும்; அதனால் அவர்களின் திறன் மேம்பாடு செய்ய முடியும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த முயற்சியில் அமைப்பு சாரா துறைகள், தொலைதூர பகுதிகளில் வசிப்பவர்கள், அகதிகள், பயிற்சி பெற வழி இல்லாத புலம்பெயர்ந்தோர் ஆகியோரும் பலன் பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

பொருளாதார ஆலோசனை கவுன்சில் அளித்த அறிக்கையின்படி, முதியோர் அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் ராஜஸ்தான் முதலிடத்திலும், மகாராஷ்டிரா மற்றும் பீகாரில் அதற்கு அடுத்த படியாகவும் உள்ளது. அதே போன்று,  இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் ஹரியானா  ஆகிய மாநிலத்திலும் மூத்த குடிமக்கள் அதிகம் உள்ளனர். 
முதியோருக்காக பணிபுரியும் ஹெல்ப் ஏஜ் இன்டர்நேஷனல் (Help Age International) வெளியிட்ட தகவலின் படி, 2019 வரை, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 10% (சுமார் 13.9 கோடி மக்கள்). 2050 வாக்கில் இந்த எண்ணிக்கை 19.5% ஆக உயரும் என கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், நாட்டில் உள்ள ஒவ்வொரு 5 பேரில் ஒருவர் மூத்த குடிமகனாக இருப்பார்.

ALSO READ: 7th Pay Commission சூப்பர் செய்தி: அகவிலைப்படி 28%-லிருந்து 31 % ஆக உயரும்!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News