Ayodhya Verdict: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து Congress கருத்து என்ன? வீடியோ பாருங்கள்
உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்துவிட்டது. ராம் கோயில் கட்டுவதற்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம் என காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சூரஜ்வாலா கூறியுள்ளார்.
புதுடில்லி: அயோத்தி வழக்கு (Ayodhya Case) தொடர்பான உச்சநீதிமன்றத்தின் (Supreme Court) தீர்ப்பை குறித்து கருத்துக் கோரிய காங்கிரஸ் (Congress), ராம் கோயில் கட்டுவதற்கு ஆதரவாக தீர்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராம் கோயில் கட்டலாம் என்று உச்சநீதிமன்றம் தனது இறுதி முடிவில் கூறியுள்ளது. 5 ஏக்கர் நிலம் முஸ்லிம் தரப்புக்கு தனித்தனியாக வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சூரஜ்வாலா, "உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்துவிட்டது. ராம் கோயில் கட்டுவதற்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம். உச்சநீதிமன்றத்தின் முடிவு ராம் கோயில் கட்டுவதற்கான கதவுகளைத் திறந்து உள்ளதால், அது பாஜகவுக்கும், மற்றவர்களும் ராம் கோயில் பிரச்சினையை அரசியலாக்குவதைத் தடுத்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் சிறப்பம்சங்கள்:-
- சர்ச்சைக்குரிய நிலத்தின் மீது தனக்கு ஏகபோகம் இருந்தது என்பதை முஸ்லிம் தனது ஆதாரங்களிலிருந்து நிரூபிக்க முடியவில்லை.
- அயோத்தி தீர்ப்பில் அகழ்வாராய்ச்சியில் இஸ்லாமிய கட்டமைப்பிற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று இந்திய தலைமை நீதிபதி (CJI) கூறினார்.
- பாபர் மஸ்ஜித் கட்டப்படுவதற்கு முன்பு இந்த இடம் தங்களுக்கு உரிமையானது என்பதை நிரூபிக்க முஸ்லிம் தரப்பு தவறி விட்டது.
- ஏஎஸ்ஐ (ASI)அறிக்கையை நிராகரிக்க முடியாது. ஏ.எஸ்.ஐ அறிக்கையில் 12 ஆம் நூற்றாண்டு கோவில்கள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
- அயோத்யா தீர்ப்பில் சர்ச்சைக்குரிய நிலத்தை பிரிக்க முடியாது என்று சி.ஜே.ஐ. கூறினார்.
- மசூதி வெற்று நிலத்தில் கட்டப்படவில்லை என்பதை ஏ.எஸ்.ஐ அறிக்கை நிரூபிக்கிறது.