Andhra Pradesh: ஆந்திர பிரதேச மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு வரும் 12 ஆம் தேதி காலை 11.27 மணிக்கு பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நான்காவது முறையாக ஆந்திர முதல்வராக பதவியேற்கவுள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் மற்றும் அவரது மகன் லோகேஷ் ஆகியோருக்கு மாநில அமைச்சரவையில் இடம் வழங்குவது குறித்து ஆலோசனை செய்து வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி?


டிவி9 தெலுங்கு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், 'ஜன சேனா தலைவர் பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவியும், ஆந்திர அமைச்சரவையில் அமைச்சர் பதவியும் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.


ஆந்திர பிரதேச அமைச்சரவையில் ஜன சேனா கட்சிக்கு இடம்


175 உறுப்பினர்களை கொண்ட ஆந்திர பிரதேச சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட 21 இடங்களில் வெற்றி பெற்ற ஜன சேனாவுக்கு 4 அமைச்சர் பதவிகளும், பாஜகவுக்கு 2 அமைச்சர் பதவிகளும் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஜன சேனா கட்சியை சேர்ந்த கல்யாண் எஸ்சி, கபு மற்றும் ஓபிசி சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் பாஜகவில் இருந்து சுஜனா சவுத்ரி, விஷ்ணு ராஜு பெயர்கள் அடிபடுகின்றன.


இன்று (ஜூன் 11, செவ்வாய்கிழமை) மாலைக்குள் அமைச்சரவை குறித்த முழு விவரம் வெளியிடப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது மற்றும் இன்று மாலைக்குள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை சந்திரபாபு நாயுடு அழைப்பார்.


மேலும் படிக்க - சந்திரபாபு, நிதிஷ் சண்டைப் போட்டு வாங்கிய இலாகாக்கள் என்னென்ன?! முக்கிய துறையே இல்லையே...!


ஜன சேனா சட்டமன்றக் கட்சியின் தலைவராக பவன் கல்யாண் தேர்வு


இதற்கிடையில், செவ்வாய்கிழமை, மங்களகிரியில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஜனசேனா கட்சியின் சட்டமன்றக் கட்சியின் தலைவராக பவன் கல்யாண் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


என்டிஏ கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு தேர்வு


விஜயவாடாவில் நடைபெற்ற என்டிஏ கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் டிடிபி-ஜேஎஸ்பி-பிஜேபி எம்எல்ஏக்கள் ஒன்றாகக் கூடி, சந்திரபாபு நாயுடுவை முதல்வர் வேட்பாளராக அறிவித்தனர். சந்திரபாபு நாயுடுவின் பெயரை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் முறைப்படி முன்மொழிவார்கள். அதன் பிறகு தீர்மானம் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படும்.


சந்திரபாபு நாயுடு முதல் அமைச்சராக எப்பொழுது பதவி ஏற்கவுள்ளார்?


சந்திரபாபு நாயுடு ஜூன் 12 ஆம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளார், இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் கன்னவரம் கேசரப்பள்ளி ஐடி பார்க் அருகே நடைபெற்று வருகிறது. இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்கவுள்ளனர்.


ஆந்திர பிரதேசத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்டிஏ கூட்டணி


ஆந்திர சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 175 இடங்களில் என்டிஏ கூட்டணி 164 இடங்களை (டிடிபி-135, ஜனசேனா-21 மற்றும் பாஜக-8) கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அதேபோல ஆந்திர பிரதேசத்தில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 21 இடங்களையும் என்டிஏ கூட்டணி கைப்பற்றியது. 


மேலும் படிக்க - PM Modi: பிரதமர் மோடி போட்ட முதல் கையெழுத்து... எதற்கு தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ