கொல்கொத்தா: நீதிமன்றங்களில் வித்தியாசமான வழக்குகள் வரும்போது, அவை மிகப் பெரியவையாக இல்லாவிட்டாலும், அதன் தீர்ப்பு பேசுபொருளாகும். அந்த வகையில் ’சீதா’ என்ற பெயர் வைத்ததற்காக கொல்கத்தா நீதிமன்றம் எதிர்கொண்ட வழக்கு விசாரணையில், பெயர்களை மாற்றச் சொல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கல்கத்தா ஜல்பைகுரி உயர் நீதிமன்றத்தின் சர்க்யூட் நீதிமன்ற அமர்வின் வழங்கிய தீர்ப்பு மற்றும் வழக்கு விவரங்களைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர், மத குருக்கள் மற்றும் மரியாதைக்குரியவர்களின் பெயர்களை இனி விலங்குகளுக்கு மாற்றுங்கள் என நீதிமன்றம் தெளிவாக அறிவுறுத்தல்களை வெளியிட்டது.


அக்பர் என்ற ஆண் சிங்கத்திற்கும், சீதா என்ற பெண் சிங்கத்திற்கும் வேறு பெயர் வைக்குமாறு மேற்கு வங்க அரசிற்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.'சீதா' மற்றும் 'அக்பர்' சிங்கங்களை ஒரே இடத்தில் அடைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் விஷயம் என விஷ்வ இந்து பரிஷத் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.


வழக்கு விசாரணையின்போது, சீதாவை இந்துக்கள் கடவுளாக வணங்குகின்றனர். அவர் கோயிலில் இருக்க வேண்டும். காட்டுக்குள் இருக்கக்கூடாது என விஷ்வ ஹிந்து பரிஷித் தரப்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.


இந்துக்களின் புனிதக் கடவுளான ராமனின் மனைவி சீதாவுக்கு சிங்கத்திற்கு பெயர் வைப்பது தவறு என்றால், அதைவிடக் கொடுமை, அந்த பெண் சிங்கத்தை அக்பர் என்ற ஆண் சிங்கத்துடன் ஜோடி சேர்ப்பது என்று விஷ்வ ஹிந்து பரிஷத் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.


மேலும் படிக்க | இப்படி ஒரு பஞ்சாயத்தா? பெயரில என்ன இருக்கு? சிங்கமா இருந்தாலும் பேர் பிரச்சனை தான்!


துர்கா பூஜாவில் சிங்கத்தை வழிபடவில்லையா?


இந்துக் கடவுளை அவமதிப்பது மற்றும் அனைத்து இந்துக்களின் மத நம்பிக்கையின் மீதான நேரடித் தாக்குதல் நடத்தும் விதமாக இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது என விஷ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்தது. இது தொடர்பாக தனது கருத்தை தெரிவித்த நீதிபதி, சீதா என்ற பெயரை அன்பினால் வைத்திருக்கலாம். துர்கை பூஜையின் போது நாம் சிங்கத்தை வழிபடுகிறோம். பெயர் வைப்பது என்பது ஒவ்வொருவரின் மனநிலையைப் பொறுத்தது என்று தெரிவித்தார்.


விஷ்வ ஹிந்து பரிஷத் வாதம்


நீதிபதியின் கருத்துக்கு பதில் சொன்ன விஷ்வ ஹிந்து பரிஷத் தரப்பு, சிங்கத்திற்கு பெயரை வைப்பார்கள் என்று விட்டுவிட்டால், நாளை ஒரு கழுதைக்கு தெய்வத்தின் பெயர் வைப்பார்கள். மனதை புண்படுத்தும் இதுபோன்ற விஷயங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் தரப்பு வாதிட்டது.


திரிபுரா மாநிலத்தில் இருந்து மேற்குவங்கத்தில் உள்ள சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு சுமார் பத்து நாட்களுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட சிங்கத்தின் பெயரால் சர்ச்சைகள் எழுந்தன.


சங்கீர் கோஜோ அஸ்தர் சீதா


’சங்கீர் கோஜோ அஸ்தர் சீதா’ அதாவது கூட்டாளியை தேடி அலையும் அமைதியற்ற சிங்கம் என்ற தலைப்பின் கீழ் உத்தரபங்கா சம்பத் (Uttar Banga Sambad) என்ற பத்திரிகை, செய்தி வெளியிட்டு இருந்தது. தற்செயலாகவே சிங்கங்களுக்கு சீதா, அக்பர் என பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், சீதா, அக்பரை தேடி அலைகிறாள் என்ற பொருள் தரும் கட்டுரை மனதை புண்படுத்துவதாக விஷவ ஹிந்து பரிஷத் சுட்டிக்காட்டியது.


வழக்கு விசாரணையின் இறுதியில், உங்களின் சொந்த செல்லப்பிராணிகளுக்கு அக்பர், சீதா பெயர்களை சூட்டுவீர்களா? என அரசு தரப்பு வழக்கறிஞரை நோக்கி கேள்வி எழுப்பிய நீதிபதி, சிங்கங்களுக்கு வேறு பெயரை வையுங்கள் என மாநில அரசிற்கு அறிவுறுத்தி வழக்கை முடித்துவைத்தார்.


மேலும் படிக்க | Hindutva: இந்துத்வா எதிர்ப்பு அவசியமா? எதிர்கட்சிகளின் வெற்றிக்கு வியூகம் அமைக்கும் பிரசாந்த் கிஷோர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ