திவாலான நிறுவனங்களில் முதலீடு செய்து விரிவுப்படுத்தும் அம்பானி & அதானியின் சூப்பர் யுத்திகள்!
Investing In Bankrupt Companies: முதலீடு செய்யும் பணத்திற்கு விரைவில் லாபம் கிடைக்க என்ன செய்யலாம்? அம்பானி மற்றும் அதானியின் வெற்றி ரகசியங்களில் ஒன்று...
திவால் நிலையில் இருக்கும் நிறுவனங்களை வாங்க கார்பரேட் நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. இதில் முதலிடத்தில் இருப்பது ரிலையன்ஸ் அம்பானி மற்றும் அதானியும் தான். இதற்கான காரணங்கள் சுவராசியமானவை. ஒரு வணிகத்தின் சொத்துக்களை அவை திவால் நிலையில் இருக்கும்போதும் வாங்கலாம், வணிகம் நிறுத்தப்பட்ட பிறகும் வாங்கலாம்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும், சொத்துக்களின் மதிப்பு, ஒரு கட்டாயக் கலைப்பில் உள்ள சொத்துக்களின் மதிப்பை விட அதிகமாக இருக்கும். நன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிறுவனம் ஏதாவது ஒரு காரணத்தால் திவாலாகிவிட்டால் அது மிகப் பெரிய நஷ்டத்தைக் கொடுக்கும். அந்த நிறுவனத்தில் வேலை செய்தவர்கள் முதல் முதலீடு செய்தவர்கள் வரை பலருக்கும் பிரச்சனைகள் அதிகரிக்கும்.
ஆனால், செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிறுவனம், அதிலும் பெரிய நிறுவனங்கள் என்னும்போது அவை நன்றாக இயங்கும் அளவுக்கு சிறந்த கட்டமைப்புடன் இருக்கும்.ஆனால், ஏதோவொரு நிறுவனத்தை அவை நன்றாக இயங்கிக் கொண்டிருக்கும்போதே விற்பது என்பது அரிது. ஆனால், திவாலான நிறுவனங்களை விற்பது என்பதும் அவற்றை வாங்குவது என்பதும் மிகப் பெரிய கணக்கீடுகளின் அடிப்படையில் செய்யப்படுபவை.
ஒரு பொருளை உற்பத்தி செய்வது அல்லது நிறுவனத்தை தொடங்குவதற்கு சாதாரண மனிதர்கல் திட்டமிடும்போது அது மிகப்பெரிய முயற்சியாக இருக்கும். தொழில் தொடங்க தேவையான மூலப்பொருள் எவை எவை, அவைகளின் தரங்கள், என்னவிலையில், எங்கிருந்தெல்லாம் கிடைக்கிறது, அவற்றை உங்களிடம் தருவிப்பது எப்படி என பல விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும்.
அவற்றை சரியாக செயல்படுத்தி ஒரு நிறுவனத்தைத் தொடங்கி நடத்துவது கடின உழைப்பு, செலவு மற்றும் அதிக சமயம் எடுத்துக் கொள்ளும் விஷயமாகும். உற்பத்தியை எவ்வளவு நேரத்தில் செய்யமுடியுமென்ற கணக்கு முதற்கொண்டு, உற்பத்தி செய்த பொருட்களை எப்படி யாருக்கு விற்பது, லாபம் என்ன என பல விஷயங்கள் திட்டமிடப்பட வேண்டும்.
இவ்வளவு பிரச்சனைகள் வேண்டாம் என்பதால், பல பெருநிறுவன முதலாளிகள் திவாலான நிறுவனங்களை குறிவைத்து, அவற்றை வாங்கி தங்கள் சாம்ராஜ்ஜியத்தை விரிவுப் படுத்திக் கொள்கின்றனர்.
ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனத்தை வாங்குவதற்கு முதலீடு செய்யும் பணத்திற்கு விரைவில் லாபம் கிடைக்கத் தொடங்கிவிடும். அதேபோல, ஏற்கனவே அந்தத் தொழிலுக்கான கட்டமைப்பு, விற்பனை என அனைத்து அடிப்படை விஷயங்களும் இருக்கும்.
மேலும் படிக்க | வெற்றி சைதை துரைசாமியின் மகன் இறந்துவிட்டாரா? டிஎன்ஏ பரிசோதனையில் தடயங்கள்!
இதன் அடிப்படையில் தான், முகேஷ் அம்பானியும் கௌதம் அதானியும் சத்தீஸ்கரில் உள்ள லேன்கோ அமர்கண்டாக் (Lanco Amarkantak) நிறுவனத்தை வாங்க போட்டி போடுகின்றனர்.திவாலான பவர் நிறுவனத்தை வாங்க இருவருமே 4,100 கோடி ரூபாயை கொடுக்க முன் வந்துள்ளனர்.
கோஸ்டல் எனர்ஜென்ஸ் என்ற திவாலான நிறுவனத்தை 3,500 கோடி ரூபாய்க்கு வாங்க அதானி குழுமம் ஒப்புதல் அளித்ததும் குறிப்பிடத்தகது. அதேபோல, கடந்த ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனம் பியூச்சர் ரீடெய்ல் என்ற திவாலான நிறுவனத்தை 24 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தி வாங்குவதற்கு தயாரானது.
ஏற்கனவே தொடாத ஒரு துறையில் எளிதாக கால் பதிப்பதற்கு திவாலாகும் நிறுவனங்களில் முதலீடு செய்வது ஒரு வியாபார தந்திரம். எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும் என்று கணிக்கப்படும் துறைகளில் உள்ள நிறுவனங்களை குறைந்த விலைக்கு வாங்கி அதிக லாபம் ஈட்டுவது தொழில் யுக்தி. இந்த தொழில் தந்திரத்தைப் பயன்படுத்தி அதானியும் அம்பானியும் வெற்றிகரமாக முதலீடு செய்து தொழில் சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்கின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ