இன்று, மகளிர் தினத்தையொட்டி, எல்பிஜி சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்து பிரதமர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான குடும்பங்களின் நிதிச் சுமையை கணிசமாகக் குறைக்கும், குறிப்பாக பெண்களின் சக்திக்கு பயனளிக்கும் இந்த அறிவிப்பை சர்வதேச மகளிர் தினத்தன்று பிரதமர் வெளியிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமையல் எரிவாயுவை மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம், குடும்பங்களின் நல்வாழ்வை ஆதரிப்பதோடு ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக பிரதமர் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.  



பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் அவர்களுக்கு ‘எளிதாக வாழ்வதை’ உறுதிசெய்வது என்ற மத்திய அரசின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப இந்த அறிவிப்பை வெளியிடுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு குடும்பங்களின் நிதிச்சுமையை கணிசமாக குறைக்கும் என பிரதமர் விளக்கம் அளித்துள்ளார்.


இருப்பினும், வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சில தினங்களுக்கு முன்னதாக 25 ரூபாய்க்கு உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.  


முன்னதாக, 2024-25 நிதியாண்டில் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏழைப் பெண்களுக்கு எல்பிஜி சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்க பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (The Cabinet Committee on Economic Affairs (CCEA)) ஒப்புதல் அளித்தது. இது தொடர்பான அறிவிப்பு நேற்று தான் வெளியான நிலையில், பிரதமரின் இன்றைய அறிவிப்பு நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கான சர்வதேச மகளிர் தின பரிசாக பார்க்கப்படுறது.


சென்னையில் தற்போது வீட்டு உபயோக சமையல் ஏரிவாயு விலை ரூ.918.50 என்று விற்பனையாகிவரும் நிலையில், பிரதமர் மோடியின் விலை குறைப்பு அறிவிப்பை அடுத்து, வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் ரூ.818.50-க்கு விற்பனை செய்யப்படும். 


எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களின் அடிப்படையில், மத்திய அரசு மாதந்தோறும் விலையை திருத்தி அமைக்கிறது. அமெரிக்க டாலரின் பரிமாற்ற விகிதம், உலகளாவிய எண்ணெய் விலை ஆகிய இரண்டு காரணிகள் எரிபொருட்களின் விலையை பாதிக்கின்றன. 


சமையலுக்கு எல்பிஜி பயன்படுத்தப்படுவதால் சமையல் எரிவாயு விலையில் ஏற்படும் மாற்றங்கள் அனைவரையும் நேரடியாக பாதிக்கிறது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆண்டுக்கு அதிகபட்சம் 12 சிலிண்டர்களுக்கு அரசு எல்பிஜி விலையை மானியமாக வழங்குகிறது. இந்த நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் நூறு ரூபாய் குறைந்திருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் பரிசாக பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | மத ரீதியான உணர்வுகளை புண்படுத்தும் வகையில் யாரும் நடந்து கொள்ள கூடாது: அமைச்சர் மா. சு


பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ், சமையல் எரிவாயூ சிலிண்டருக்கு ரூ.300 மானியம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது அனைவரும் எதிர்பார்த்தது தான். எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கும் நிதியாண்டான 2024-25க்கு எரிவாயு மானியத்தை நீட்டிக்கும் என்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் (CCEA) முடிவை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று அறிவித்தார்.


இன்னும் சில தினங்களில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளிவர இருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த ஒருசில மாதங்களில் மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருவது தேர்தல் கணக்கு தான் என்று எதிர்கட்சிகள் கூறுகின்றன. 


எதுஎப்படியிருந்தாலும், தேர்தல் முடிந்த பிறகு ஆட்சிக்கு வரும் அரசு, நிதிச்சுமையைக் காரணம் காட்டி மீண்டும் விலையை ஏற்றாமல் இருந்தால் போதும் என்று சாமானிய மக்கள் விரும்புகின்றனர்.


மேலும் படிக்க | பிஎம் உஜ்வாலா திட்டத்தில் எல்பிஜி சிலிண்டருக்கான ரூ 300 மானியம் அடுத்த ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது!  


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ