புதுடெல்லி: இன்று இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாமின் பிறந்தநாள். ஒவ்வொரு ஆண்டும் ஏபிஜே அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15 அன்று   உலக மாணவர் தினம் கொண்டாடப்படுகிறது. நமது சமூகத்தில் கல்வி வளர்ச்சிக்கு கலாமின் தன்னலமற்ற பங்களிப்பை போற்றும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. அப்துல் கலாம் அவர்கள் கற்பிப்பதில் அதிக ஆர்வம் காட்டி மிகவும் அர்ப்பணிப்புடன் இருந்தார். அவர் இந்தியாவின் 11 வது ஜனாதிபதியாக தனது பதவிக் காலத்தை முடித்த அடுத்த நாளே மீண்டும் தனது ஆசிரியர் பணிக்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டாக்டர் கலாம் எப்போதும் தனது மாணவர்களை மிகச்சிறந்த நிலைக்கு முன்னேறி வரவும், விடா முயற்சியுடன் பல நல்ல செயல்களை செய்யவும் ஊக்குவித்தார். "நீங்கள் எடுக்கும் பணிகளில் தோல்வியுற்றாலும், அதை ஒருபோதும் கைவிடாதீர்கள். ஏனென்றால் F.A.I.L என்றால் First Attempt In Learning (கற்றலில் முதல் முயற்சி) என்று பொருள். E.N.D என்றால் 'Effort Never Dies (முயற்சி ஒருபோதும் இறக்காது) என்று பொருள்' என்று கூறி அவர் மாணவர்களை ஊக்குவிப்பார். 


உலக மாணவர் தின வரலாறு
கல்வித் துறையில் கலாம் அவர்களின் பங்களிப்பை நினைவு படுத்திப் பார்ப்பதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும். அவருடைய நுண்ணறிவுமிக்க விரிவுரைகளும், கற்பிப்பதில் அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பும் மாணவர்களுக்கு வாழ்க்கைக்கு தேவையான பாடத்தையும் மிகப்பெரிய ஊக்கத்தையும் அளித்தது. 


மேலும் படிக்க | சிந்திக்கலாம், சாதிக்கலாம்: டாக்டர் அப்துல் கலாமின் கனவை நிஜமாக்கலாம்!!


அப்துல் கலாம் எப்போதும் மாணவர்களே நாட்டின் எதிர்காலம் என்றும், நம் நாட்டை ஒவ்வொரு துறையிலும் வெற்றியின் புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லும் முற்போக்கு மனதைக் கொண்டவர்கள் மாணவர்கள் என்றும் நம்பினார். அப்துல் கலாமின் மாணவர்கள் மீதான அன்பைக் கொண்டாடும் வகையில் உலக மாணவர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 


கற்பித்தல் அவரது இதயத்திற்கு நெருக்கமான பணியாக இருந்தது. அவர் அதை மிகவும் விரும்பினார். அவர் ஒரு ஆசிரியராக நினைவுகூரப்பட விரும்பினார். ஐஐஎம் ஷில்லாங் மாணவர்களிடையில் சொற்பொழிவு ஆற்றும் போதுதான் டாக்டர் கலாம் இறுதி மூச்சு விட்டார். அவர் தனது வாழ்வின் 40 ஆண்டுகளை ஒரு விஞ்ஞானியாகவும், அறிவியல் நிர்வாகியாகவும் முக்கியமாக டிஆர்டிஓ (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு) மற்றும் இஸ்ரோ (ISRO) (இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்) ஆகியவற்றுக்காக அர்ப்பணித்தார். அந்த ஆண்டுகளில், டாக்டர் கலாம் இந்தியாவின் சிவில் விண்வெளித் திட்டம் மற்றும் இராணுவ ஏவுகணை வளர்ச்சியில் முழுமையாக ஈடுபட்டார்.


உலக மாணவர் தினம் 2022: கருப்பொருள் 
இந்த ஆண்டு உலக ஆசிரியர் தினத்தின் கருப்பொருள் "கல்வியின் மாற்றம் ஆசிரியர்களிடம் இருந்து தொடங்குகிறது" என்பதாகும்.


உலக மாணவர் தினத்தின் முக்கியத்துவம்
முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் உலக மாணவர் தினம் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகக் கருதப்படுகிறது. இந்த நாள் முக்கியமானதாகக் கருதப்படுவதற்கான பிற காரணங்கள் பின்வருமாறு:


- இது கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
- கல்விக்கான அடிப்படை உரிமையை அங்கீகரிக்கும் நாளாக இது கருதப்படுகின்றது.
- இது டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் சிறந்த பணியை நினைவுகூரும் நாளாக இருக்கிறது.
- இந்த நாளில், மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதில் கலாமின் நேசம் நினைவுகூரப்படுகிறது.


டாக்டர் கலாம் இந்தியாவின் உயரிய குடிமகன் விருதான பாரத ரத்னா விருது பெற்றார். இந்திய அரசின் அறிவியல் ஆலோசகராக பணியாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷண் விருதும் வழங்கப்பட்டது. அவரது மறைவுக்குப் பிறகும், நாட்டின் சிறந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகளில் அவரது பங்களிப்புகள் இன்னும் நினைவுகூரப்படுகின்றன.


மேலும் படிக்க | ISRO Recruitment: இஸ்ரோவில் பணிபுரிய ஆசிரியர்களுக்கு வாய்ப்பு! விவரம் உள்ளே


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ