‘குழந்தைகள் குறித்த ஆபாச பட மோகத்திற்கு’ 16-லிருந்து 22 வயதுடைய மாணவ, மாணவிகள் அதிகளவில் அடிமையாகி இருப்பது ஒரு ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாணவ மாணவயரிடையே பாலியல் குறித்த கணக்கெடுப்பை மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று நடத்தியது. இந்த ஆய்வில் 30 ஆங்கில பள்ளிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் மாணவ, மாணவியரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கிடைத்த பதில்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இந்த ஆய்வில் கிடைத்த முடிவுகளின் படி குறைந்தது 33% மாணவர்களும், 24%  மாணவிகளும் ஆபாச பட மோகத்திற்கு அடிமையாகி உள்ளனர். தங்களின் நிர்வாண படங்களை செல்போனில் பகிர்ந்துள்ளனர்.


40% கல்லூரி மாணவர்கள் தங்களின் லேப்டாப் கம்பயூட்டர் மூலம் வன்முறை , ஆபாச வீடியோக்களை பார்ப்பதாகவும், ஒரு மாணவ - மாணவியர் ஒரு வாரத்தில் குறைந்த பட்சம் 40 ஆபாச வீடியோக்களை பார்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அதாவது நாள் ஒன்றுக்கு மும்பையில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆபாச வீடியோக்கள் பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தவிர 25% மாணவர்கள் ஆபாச வீடியோக்களை பார்த்து அது போன்ற செயலை செய்ய தங்களை தூண்டுவதாக ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் 46% மாணவர்கள் ஆபாச பட மோகத்திற்கு அடிமையாகிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.


தொடர்ந்து நடத்திய ஆய்வில் கல்லூரி மாணவியர்களில் 10% பேர் ஆபாச படம் பார்த்து தவறான உறவால் கருக்கலைப்பு வரை செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளதாகவும், மும்பையில் மாதம் ஒன்றிற்கு குறைந்தபட்சம் 4 ஆயிரம் கல்லூரி மாணவிகள் கருக்கலைப்பு செய்வதாகவும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.


இது குறித்து உளவியலாளர்கள் தெரிவிக்கையில்,, இது போன்ற சம்பவங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க, பெரியவர்கள் குழந்தைகளின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். இது போதை பொருளை போன்றது, இது பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும் சம்பவங்களுக்கு வழி வகுக்கும் என அறிவுறத்துகின்றனர்.


Read in English