7வது சம்பள கமிஷன், டிஏ உயர்வு, அடிப்படை சம்பள உயர்வு புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய பரிசு கிடைக்கப் போகிறது. ஒருபுறம், இன்னும் சில மாதங்களில் ஊழியர்களின் அகவிலைப்படி உயர்த்தப்படும். அதே நேரத்தில், அவர்களின் குறைந்தபட்ச ஊதியத்திலும் அதிகரிப்பு இருக்கும். இதன் மூலம் அவர்களின் சம்பளம் சுமார் ரூ.95,000 ஆக உயரும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது மத்திய ஊழியர்களுக்கு மோடி அரசு ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அவர்களது அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. ஜூலை அரையாண்டுக்கான அகவிலைப்படி விரைவில் அதிகரிக்கலாம் என்ற நிலையில் அதன் உத்தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனுடன், அவர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அதிகரிப்பதை பற்றி அரசு யோசிக்கக்கூடும். ஃபிட்மெண்ட் ஃபாக்டரை உயர்த்தி அதன் மூலம் அரசு குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.


ஃபிட்மென்ட் பேக்டர் விகிதங்களின் திருத்தத்துடன் அடிப்படை சம்பளம் அதிகரிக்கும்


தற்போது ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.18000 ஆகும். மறுபுறம், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் விகிதங்களில் திருத்தத்திற்குப் பிறகு, அடிப்படை சம்பளம் ரூ 21,000 அல்லது 26,000 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான ஊழியர்கள் பயன்பெற உள்ளனர். இருப்பினும், தற்போது இது குறித்து அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தல் எதுவும் வரவில்லை. அரசாங்கம் ஃபிட்மென்ட் ஃபாக்டரை 3.68 மடங்கு அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.


ஃபிட்மெண்ட் ஃபாக்டரை 3.68 மடங்கு அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை


தற்போது ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக உள்ளது. 2.57% என்ற விகிதத்தில்தான் இப்போது ஊதியம் வழங்கப்படுகின்றது. எனினும், ஊழியர்கள் ஃபிட்மென்ட் ஃபாக்டரை 3.68 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதே நேரத்தில் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அரசாங்கம் 3 மடங்கு அதிகரிக்கலாம் என அரசு வட்டரங்கள் தெரிவிக்கின்றன.  எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர், குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை உயர்த்துவதற்கு மோடி அரசாங்கம் சில முக்கிய நடவடிக்கைகளை எடுக்கக்கூடும். 


மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலை 1 முதல் ஊழியர்களின் சம்பளம் 4% வரை உயர வாய்ப்பு! 


2024 இல் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், புதிய சம்பள கமிஷன் அமைக்கும் நேரத்தில்தான் ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிக்கப்படும். இத்தகைய சூழ்நிலையில், 2024 ஆம் ஆண்டு தேர்தலைக் கருத்தில் கொண்டு, ஃபிட்மென்ட் ஃபாக்டரை அதிகரிப்பதற்கான அறிவிப்பை அரசு வெளியிடலாம். அதே நேரத்தில் அதை 2026 இல் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளலாம்.


2016 இல் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரித்தது


2016 ஆம் ஆண்டில் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை மத்திய அரசு உயர்த்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனுடன், ஏழாவது ஊதியக் குழுவும் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.6000 லிருந்து ரூ.18000 ஆக உயர்த்தப்பட்டது. அதிகரிப்புக்கான கோரிக்கை மீண்டும் தொடர்கிறது. இது நடந்தால், ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் உயர்வு ஏற்படும். இதன் மூலம் அவர்களின் அடிப்படை ஊதியம் ரூ.35,000க்கு மேல் உயரக்கூடும். ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிப்பின் மதிப்பாய்வின் அடிப்படையில், கொடுக்கப்பட்ட பரிந்துரை அமைச்சகத்திற்கு அனுப்பப்படலாம்.


ஊதியக்குழுக்கள்


1947 முதல் பல ஊதியக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதியக் குழுவை அரசு அமைக்கிறது. இந்த ஊதியக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் உயர்த்தப்படுகிறது.


24 பிப்ரவரி 2014 அன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் ஏழாவது ஊதியக் குழு அமைக்கப்பட்டது. 2006 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில், ஆறாவது மற்றும் ஏழாவது ஊதியக் குழுக்கள், மத்திய ஊழியர்களின் சம்பளத்தை பெரிய அளவில் உயர்த்த பரிந்துரை செய்திருந்தன. அதை ஏற்று அரசுகளும் அரசாங்கத்தின் சம்பளத்தை உயர்த்தின. 


மேலும் படிக்க | 7th Pay Commission ஜாக்பாட் செய்தி: AICPI எண்களில் ஏற்றம், டிஏ 46% அதிகரிக்கும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ