8th Pay Commission மாஸ் அப்டேட்: விரைவில் எக்கச்சக்க ஊதிய உயர்வு, குஷியில் ஊழியர்கள்

8th Pay Commission: தேசிய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக நாடு முழுவதும் விவாதங்கள் நடந்து வரும் நிலையில், எட்டாவது ஊதியக் குழுவை நாடு முழுவதும் அரசு விரைவில் அமல்படுத்தக்கூடும் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 28, 2023, 10:21 AM IST
  • தற்போது மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை உள்ளது.
  • புதிய சம்பள கமிஷன் அமலுக்கு வந்த பிறகு, ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் உயரும்.
  • இதனுடன், சம்பள கமிஷன் அறிக்கையில் ஃபிட்மெண்ட் ஃபாக்டரும் அதிகரிக்கலாம்.
8th Pay Commission மாஸ் அப்டேட்: விரைவில் எக்கச்சக்க ஊதிய உயர்வு, குஷியில் ஊழியர்கள் title=

8 ஆவது ஊதியக்கமிஷன் புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து பல நல்ல செய்திகள் வந்த வன்ணம் உள்ளன. அவர்களுக்கு தற்போது மீண்டும் ஒரு நல்ல செய்தி வரவுள்ளது. அரசு ஊழியர்களுக்கு விரைவில் ஊதியம் பன்மடங்கு உயரப் போகிறது. இதற்காக மத்திய அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் காத்திர்க்கிறார்கள். இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம். 

தேசிய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக நாடு முழுவதும் விவாதங்கள் நடந்து வரும் நிலையில், எட்டாவது ஊதியக் குழுவை நாடு முழுவதும் அரசு விரைவில் அமல்படுத்தக்கூடும் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன. தேசிய ஓய்வூதியத் திட்டத்தால் ஊழியர்களுக்கு கிடைக்கும் நன்மைகளை அதிகரிக்க அரசு ஒரு குழுவை அமைத்து. இது குறித்து ஆராய்ந்து வருகிறது. இதனால் தேசிய ஓய்வூதியத் திட்ட விவகாரத்தை பொறுத்தவரை ஊழியர்கள் சற்று நிம்மதியாக உள்ளனர். அதேபோல், எட்டாவது ஊதியக்குழு அமைப்பது தொடர்பாகவும் அரசு ஏதாவது ஒரு நல்ல செய்தியை சொல்லும் என ஊழியர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர். 8வது ஊதியக்குழுவுக்கு மோடி அரசு விரைவில் கிரீன் சிக்னல் கொடுக்கக்கூடும். எட்டாவது ஊதியக் குழு இந்த ஆண்டு அதாவது 2023 இல் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.

புதிய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அமலுக்கு வரும்

2013-ம் ஆண்டு 7-வது ஊதியக் குழு அமைக்கப்பட்டு 2016-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு மத்திய ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் உயர்வு ஏற்பட்டது. இப்போது மீண்டும் அரசு ஊழியர்கள் அடுத்த ஊதியக்குழுவுக்காக காத்திருக்கிறார்கள். புதிய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை செயல்படுத்தப்படுகின்றன. 

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு அரசின் பரிசு, டிஏ அரியர் முக்கிய அப்டேட்

மக்களவைத் தேர்தலுக்கு முன் நல்ல செய்தி கிடைக்கும்

8வது ஊதியக் குழு பற்றிய அறிவிப்பை மத்திய அரசு விரைவில் அறிவிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாடு முழுவதும் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், அதற்கு முன் ஊழியர்களுக்கு பெரிய பரிசை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

தற்போது குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆகும்

தற்போது மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை உள்ளது. புதிய சம்பள கமிஷன் அமலுக்கு வந்த பிறகு, ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் உயரும். இதனுடன், சம்பள கமிஷன் அறிக்கையில் ஃபிட்மெண்ட் ஃபாக்டரும் அதிகரிக்கலாம்.

மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை 

8-வது ஊதியக் குழு கோரிக்கை தொடர்பாக மத்திய அரசுடன் விரைவில் பேச உள்ளதாக மத்திய ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. அதே நேரம், இதற்கான குறிப்பாணையும் அரசுக்கு சமர்ப்பிக்கப்படும். அரசு கோரிக்கைகளை ஏற்க மறுத்தால், மத்திய ஊழியர்கள் மற்றும் முன்னாள் ஓய்வூதியதாரர்கள் பங்கேற்கும் போராட்டத்தை தொழிற்சங்கம் பரிசீலிக்கலாம்.

ஊதியக்குழுக்கள்

1947 முதல் பல ஊதியக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதியக் குழுவை அரசு அமைக்கிறது. இந்த ஊதியக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் உயர்த்தப்படுகிறது.

24 பிப்ரவரி 2014 அன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் ஏழாவது ஊதியக் குழு அமைக்கப்பட்டது. 2006 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில், ஆறாவது மற்றும் ஏழாவது ஊதியக் குழுக்கள், மத்திய ஊழியர்களின் சம்பளத்தை பெரிய அளவில் உயர்த்த பரிந்துரை செய்திருந்தன. அதை ஏற்று அரசுகளும் அரசாங்கத்தின் சம்பளத்தை உயர்த்தின. 

மேலும் படிக்க | 7th Pay Commission: மீண்டும் ஒரு டிஏ ஹைக், 46% ஆக ஏற்றம், குஷியில் ஊழியர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News