7வது ஊதியக்குழு, அகவிலைப்படி உயர்வு, அகவிலைப்படி நிலுவைத் தொகை: மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி உள்ளது. அவர்கள் மீண்டும் ஒருமுறை அகவிலைப்படி உயர்வின் பலனைப் பெறுவார்கள். ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவை மீண்டும் அதிகரிக்கப்படும். சமீபத்தில்தான் இந்த ஆண்டின் முதல் அகவிலைப்படி அதிகரிப்பு ஏற்பட்டது. அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக ஊழியர்களின் டிஏ 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனுடன், ஓய்வூதியர்களுக்கான அகவிலை நிவாரணமும் 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று தற்போது மீண்டும் அகவிலைப்படியை அதிகரிக்க அரசு தயாராகி வருகிறது.
டிஏ மீண்டும் அதிகரிக்கும்
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஜூலை மாதத்தில் அகவிலைப்படியை மீண்டும் ஒருமுறை உயர்த்தும். 42% அகவிலைப்படியின் பலன் மத்திய ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. ஜூலை முதல் அகவிலைப்படி உயர்வுக்குப் பிறகு, அகவிலைப்படி 46% வரை அடையலாம் என நம்பப்படுகின்றது. இதற்கான அறிவிப்பை அக்டோபரில் அரசு வெளியிடக்கூடும். முன்னதாக, உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜனவரி 1, 2023 முதல் அமல்படுத்தப்பட்டது.
டிஏ ஆண்டுக்கு இருமுறை உயர்த்தப்படும்
அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆண்டுக்கு இருமுறை அதிகரிக்கப்படுகிறது. டிஏ மற்றும் டிஆர் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அரையாண்டு அடிப்படையில் உயர்த்தப்படுகிறது. 2023 ஆம் ஆண்டிற்கான அகவிலைப்படி ஜனவரியில் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏஐசிபிஐ தரவுகளின் அடிப்படையில் டிஏ உயர்வை அரசாங்கம் தீர்மானிக்கிறது.
AICPI புள்ளிவிவரங்கள்
ஏப்ரல் மாத இறுதி வேலை நாளில், மார்ச் மாதத்திற்கான ஏஐசிபிஐ புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட உள்ளன. இவ்வாறான நிலையில் இம்முறை ஊழியர்களின் அகவிலைப்படியில் 4 சதவீத அதிகரிப்பை காணமுடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தொழிலாளர் பணியகம் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. இதில் பிப்ரவரி மாதத்திற்கான AICPI எண்ணிக்கையில் 0.1 புள்ளிகள் குறைவு காணப்பட்டது. இதன் மூலம் இது 132.7 புள்ளிகளாக குறைந்துள்ளது. ஜனவரியில் இந்த எண்ணிக்கை 132.8 ஆக இருந்தது. இத்தகைய சூழ்நிலையில், மார்ச் மாதத்தில் ஏஐசிபிஐ மீண்டும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இதனுடன், ஜூலை மாதத்தில் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு டிஏ மற்றும் டிஆர் -இல் 3 முதல் 4 சதவீதம் வரை திட்டவட்டமான உயர்வு இருக்கும் என கூறப்படுகின்றது.
மேலும் படிக்க | 7th Pay Commission: மீண்டும் ஒரு டிஏ ஹைக், 46% ஆக ஏற்றம், குஷியில் ஊழியர்கள்
சம்பளம் உயரும்
மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 46% ஆக உயர்த்தப்பட்டால், அவர்களின் சம்பளத்திலும் பெரிய உயர்வு காணப்படும். உதாரணமாக, ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ரூபாய் 18000 என்றால், அவர்கள் 42% அகவிலைப்படிக்கான ஆதாயத்தை பெற்று வருகிறார்கள். இதன் அடிப்படையில் அவர்கள் அகவிலைப்படியாக ரூபாய் 7560 பெறுகிறார்கள். டிஏ உயர்வுக்குப் பிறகு, டிஏ 46% ஆக உயர்ந்தால், ஊழியர்களுக்கான டிஏ ரூ.8280 ஆக உயரும். ஊழியர்களுக்கு மாதம் ரூ.720 உயர்வு கிடைக்கும்.
18 மாதங்களுக்கான நிலுவைத் தொகை
தற்போது, ஊழியர்களுக்கான 18 மாத நிலுவைத் தொகை விவகாரம் குறித்து எந்த பேச்சும் இல்லை. கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படிக்கான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஊழியர்கள் 18 மாத நிலுவைத் தொகைக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கலாம் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நிலுவையில் உள்ள அகவிலைப்படியின் பலன் ஊழியர்களுக்கு வழங்கப்பட மாட்டாது என்று முன்னதாக அரசு தெளிவுபடுத்தியது.
கொரோனா தொற்றுநோய்களின் போது, ஊழியர்களின் நிறுத்தப்பட்ட அகவிலைப்படி மூலம் அரசாங்கம் 34402.32 கோடி ரூபாய் பயனடைந்துள்ளது. தற்போது 48 லட்சம் ஊழியர்களும், 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் அந்த நிலுவைத் தவணையை வழங்கக் கோருகின்றனர். தற்போது, டிஏ நிலுவைத் தொகையில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. எனினும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இது குறித்து அரசாங்கம் ஒரு பெரிய முடிவை எடுக்கலாம் என்று நம்பப்படுகிறது.
முன்னதாக, கொரோனா தொற்றுநோய் தொடங்கியவுடன், ஊழியர்களின் மூன்று அகவிலைப்படி தவணைகளை அரசாங்கம் முடக்கியது. இது ஜூன் 2021 இல் மீண்டும் தொடங்கப்பட்டது. முடக்கப்பட்ட அகவிலைப்படியின் அரியர் தொகை கிடைத்தால், லெவல் 13 அதிகாரிகள் ரூ. 1,23,000 முதல் ரூ. 2,15,000 வரை பெறக்கூடும். லெவல் 14 பணியாளர்களுக்கு ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரை கிடைக்கும். தற்போது இது குறித்து அரசு தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
மேலும் படிக்க | 7th Pay Commission: 3 நாட்களில் சூப்பர் செய்தி, மீண்டும் 4% அகவிலைப்படி உயர்வு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ