7th Pay Commission latest news: மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி காத்துக்கொண்டிருக்கிறது. 2021 ஜூலை மாதத்தில் அகவிலைப்படியில் இருந்த முடக்கம் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி முடக்கம் நீக்கப்பட்டவுடன், 7 வது ஊதியக் குழுவின் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மூலம் மாத சம்பளத்தில் பெரிய அளவில் அதிகரிப்பு ஏற்படும். ஏனெனில் தற்போதுள்ள 17 சதவீத அகவிலைப்படி இந்த அதிகரிப்புக்குப் பிறகு 28 சதவீதமாக (17 + 3 + 4 + 4) அதிகரிக்கும். இந்த டிஏ கணக்கீடு 2021 ஜனவரி முதல் ஜூன் வரை எதிர்பார்க்கப்படும் 4 சதவீத டிஏ மற்றும் 2020 ஜூலை முதல் டிசம்பர் வரை அறிவிக்கப்பட்ட 4 சதவீத டிஏ மற்றும் ஜனவரி முதல் ஜூன் 2020 வரையிலான 3 சதவீத டிஏ ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இதனுடன் 2.57 இன் 7 வது சிபிசி காரணியும் உள்ளது. இது மாத சம்பளத்தின் உயர்வைக் கணக்கிடும்போது நினைவில் கொள்ளளப்பட வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏழாவது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை ஃபிட்மெண்ட் ஃபாக்டர் எவ்வாறு தீர்மானிக்கிறது
7 வது ஊதியக்குழு ஊதிய மேட்ரிக்ஸ் விதிப்படி, மத்திய அரசு ஊழியரின் மாத சம்பளம் அடிப்படை ஊதியத்தைப் பொறுத்தது. ஒரு மத்திய அரசு ஊழியரின் மாதாந்திர அடிப்படை சம்பளம் ரூ .21,000 என்றால், அவரது மாதாந்திர 7 வது சிபிசி சம்பளம் ரூ .53,970 (ரூ. 21,000 x 2.57) ஆக இருக்கும்.


7 வது ஊதியக்குழு அகவிலைப்படி 


இது தவிர, மத்திய அரசு ஊழியர் அகவிலைப்படி (DA), ஹெச்.ஆர்.ஏ, பயணப்படி, மருத்துவ கொடுப்பனவு போன்ற பல்வேறு 7 வது ஊதிய கமிஷன் சலுகைகள் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் தற்போதைய டி.ஏ. 17 சதவீதமாக உள்ளது. ஒருவரது அடிப்படை சம்பளம் ரூ .21,000 ஆக இருந்தால், அவரது அகவிலைப்படி 3,570 ரூபாயாக இருக்கும். அகவிலைப்படி 28 சதவிகிதமாக இருந்தால், அதன் தொகை ரூ .5,880 ஆக மாறும்.


ALSO READ: வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெரிய அடி: ஏப்ரல் 1 முதல் OTP பெறுவதில் பிரச்சனை வரும்


வருங்கால வைப்பு நிதி (PF) 


DA முடக்கம் நீக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் பாஸ்புக் இருப்பும் அதிகரிக்கும். 7 வது ஊதிய கமிஷன் கட்டண விதிகளின்படி, மத்திய அரசின் பிஎஃப் பங்களிப்பு அடிப்படை சம்பளம் மற்றும் டிஏ அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. எனவே, டிஏ மறுசீரமைப்பிற்குப் பிறகு, ஒருவரின் பிஎஃப் (PF) பங்களிப்பு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சீராக ஊழியர்களின் பாஸ்புக் இருப்பை அதிகரிக்கும். பி.எஃப் இருப்பு என்பது மத்திய அரசு ஊழியர்களுக்கான மிகவும் பொதுவான ஓய்வூதிய நிதி திரட்டும் கருவிகளில் ஒன்றாக உள்ளது. இந்த டிஏ முடக்க நீக்கம், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய நிவாரணத்தை அளிக்கவுள்ளது. 


7 வது ஊதியக்குழு பயணப்படி 


ஒரு மத்திய அரசு ஊழியரின் (Central Government Employees) பயணப்படி நேரடியாக அகவிலைப்படியை சார்ந்துள்ளது. அகவிலைப்படி அதிகரிக்க அதிகரிக்க பயணப்படியும் தானாக அதிகரிக்கும். ஆகையால், அகவிலைப்படி மற்றும் பயணப்படியில் ஒரே சதவீதத்தில்தான் அதிகரிப்பு இருக்கும்.


ALSO READ: டெபிட், கிரெடிட் கார்ட் மூலம் கட்டணம் செலுத்துகிறீர்களா? இந்த விதிகள் மாறவுள்ளன!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR