7th Pay Commission: ஆகஸ்ட் மாத ஊதியத்தில் கிடைக்கும் இரட்டை பொனான்சா!!
அகவிலைப்படி அதிகரித்துள்ளதோடு மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவையும் (HRA) அதிகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. விதிகளின்படி, அகவிலைப்படி 25%-ஐ விட அதிகமாகிவிட்டதால் எச்.ஆர்.ஏ அதிகரிக்கப்பட்டுள்ளது.
7th Pay Commission Latest News: ஜூலை 1 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 28% அகவிலைப்படி கிடைக்கும் என்று இப்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிட்டது. அதாவது ஆகஸ்ட் முதல் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கும். இது மட்டுமல்லாமல், அரசாங்கம் ஊழியர்களின் எச்.ஆர்.ஏ-வையும் அதிகரித்துள்ளது. ஆகையால், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாத சம்பளம் இரட்டை பொனான்சாவாக இருக்கும்.
அகவிலைப்படியைத் தவிர, ஊழியர்களின் எச்ஆர்ஏ-வும் அதிகரித்துள்ளது
அகவிலைப்படி அதிகரித்துள்ளதோடு மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவையும் (HRA) அதிகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. விதிகளின்படி, அகவிலைப்படி 25%-ஐ விட அதிகமாகிவிட்டதால் எச்.ஆர்.ஏ அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அகவிலைப்படி 25% ஐ தாண்டியுள்ளது. எனவே, மத்திய அரசு வீட்டு வாடகை கொடுப்பனவையும் 27% ஆக உயர்த்தியுள்ளது.
செலவினத் திணைக்களம் 7 ஜூலை 2017 அன்று ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது. அதில் அகவிலைப்படி 25% ஐத் தாண்டினால் எச்.ஆர்.ஏ திருத்தப்படும் என்று கூறப்பட்டது. ஜூலை 1 முதல், அகவிலைப்படி 28% ஆக அதிகரித்துள்ளதால், HRA-வும் திருத்தப்பட்டது.
நகரத்தின் அடிப்படையில் HRA மாறுபடும்
அரசாங்க உத்தரவின்படி, எச்.ஆர்.ஏ நகரங்களின்படி மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது - X, Y மற்றும் Z. திருத்தத்திற்குப் பிறகு, X வகை நகரங்களுக்கான எச்ஆர்ஏ அடிப்படை ஊதியத்தில் 27% ஆக இருக்கும். அதேபோல் Y வகை நகரங்களுக்கான எச்ஆர்ஏ அடிப்படை ஊதியத்தில் 18% ஆகவும், Z வகை நகரங்களுக்கு இது அடிப்படை ஊதியத்தில் 9% ஆகவும் இருக்கும்.
ALSO READ: 7th Pay Commission: அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பான முக்கிய விதிகளில் மாற்றம்
HRA எவ்வளவு உயரும்
ஒரு நகரத்தின் மக்கள் தொகை 5 லட்சத்தைத் தாண்டினால், அது Z பிரிவில் இருந்து Y வகைக்கு மேம்படுத்தப்படும். அதாவது, 9% க்கு பதிலாக, 18% HRA அங்கு கிடைக்கும். 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள், X பிரிவில் அடங்கும். மூன்று பிரிவுகளுக்கும் குறைந்தபட்ச வீட்டு வாடகை கொடுப்பனவு ரூ 5400, 3600 மற்றும் ரூ .1800 ஆகும். செலவினத் திணைக்களத்தின்படி, அகவிலைப்படி 50% ஐ எட்டும்போது, எச்ஆர்ஏ X, Y மற்றும் Z நகரங்களுக்கு 30%, 20% மற்றும் 10% ஆகக் குறைக்கப்படும்.
DA, HRA சேர்த்து சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்
7 வது ஊதியக்குழு (7th Pay Commission) ஊதிய மேட்ரிக்ஸின் படி, மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ .18,000 ஆகும். இதில் அடிப்படை ஊதியம், கழித்தல் மற்றும் கொடுப்பனவுகள் அடங்கும். 18,000 அடிப்படை சம்பளத்தில் 17%-ன் படி, ஊழியர்களுக்கு 2021 ஜூன் வரை ரூ .3060 டி.ஏ. கிடைத்துக்கொண்டிருந்தது. ஜூலை 2021 முதல், இப்போது 28% அகவிலைப்படி என்ற அளவில், மாதத்திற்கு ரூ .5040 கிடைக்கும். அதாவது ரூ. 1980 (5040-3060 = 1980) மாத சம்பளத்தில் அதிகமாக வரும். அதன்படி, ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியமும் முடிவு செய்யப்படும். டிஏ அதிகரித்த பிறகு எவ்வளவு சம்பளம் அதிகரிக்கும் என்பதை ஊழியர்கள் தங்கள் அடிப்படை ஓய்வூதியத்தின் படி கணக்கிடலாம்.
அதாவது, குறைந்தபட்ச டிஏ அதிகரிப்பு (DA Hike) ரூ .5040 ஆகவும், குறைந்தபட்ச எச்ஆர்ஏ அதிகரிப்பு ஒவ்வொரு மாதமும் ரூ .1800 ஆகவும் இருக்கும். அதாவது, ஆகஸ்டில் வரும் சம்பளத்தில் ரூ .6840 (5040 + 1800) அதிகரிப்புஇருக்கும்.
ALSO READ: 7th pay commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் 28% DA உயர்வு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR