7th Pay Commission: DA, DR குறித்து அரசின் தலையீட்டை நாடிய ஓய்வூதியர் சங்கம், விவரம் இதோ
அகவிலைப்படி, அகவிலை நிவாரணம் குறித்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என்று இந்திய ஓய்வூதியதாரர்கள் மன்றம் வலியுறுத்தியுள்ளது.
7th Pay Commission Latest News: புதுடெல்லி: ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பெரிய செய்தி வந்துள்ளது. இந்திய ஓய்வூதியதாரர்கள் மன்றம் (BMS) மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) ஆகியவற்றின் நிலுவைத் தொகையை விரைவில் வெளியிடுமாறு அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) தலையிட வேண்டும் என்றும் இந்த மன்றம் வலியுறுத்தியுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிதி அமைச்சகம்ம் 2021 ஜூன் 30 வரை அகவிலைப்படி அதிகரிப்பை நிறுத்தியது.
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, இந்த ஆண்டு ஜூலை மாதம், அரசு, அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை 28 சதவீதமாக அதிகரித்துள்ளது. 48 லட்சம் ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் மத்திய அரசின் இந்த முடிவால் பயனடைவார்கள். எனினும், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தின் நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. எனவே ஓய்வூதியதாரர்கள் பிரதமரின் தலையீட்டிற்காக கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரதமர் மோடிக்கு கடிதம்
பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், பிஎம்எஸ், 'இந்த விஷயத்தில் நீங்கள் தலையிடுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறோம். ஜனவரி 1, 2020 முதல் ஜூன் 30, 2021 வரையிலான காலகட்டத்திற்கான டிஏ/டிஆர்-ஐ விரைவில் வெளியிடுமாறு நீங்கள் நிதி அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும். இது தொடர்பான உடனடி நடவடிக்கைக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.’ என்று கூறியுள்ளது.
ALSO READ: 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி! முக்கிய தகவல் வெளியீடு
ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இன்னும் பணம் கிடைக்கவில்லை
"DA/DR தடை செயப்பட்டிருந்தபோது, சில்லறை பணவீக்கம் அதிகரித்துள்ளது. வாகன எரிபொருள்கள், சமையல் எண்ணெய் மற்றும் பருப்பு வகைகளின் விலைகள் இது வரை இல்லாத அளவு சாதனை உச்சத்தை எட்டியுள்ளன" என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அகவிலைப்படி / அகவிலை நிவாரணம் (DA / DR) அளிப்பதன் நோக்கம், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் செலவு அதிகரிப்பை ஈடுசெய்வதாகும் என்றும் மன்றம் கூறியது. இப்போது இந்த செலவுகள் அதிகரித்துள்ளதால், அதை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்காமல் இருப்பது நியாயமற்றது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஓய்வூதியதாரர்களுக்கு நிதித் தேவை உள்ளது
'ஓய்வூதியதாரர்களில் (Pensioners) பெரும்பாலானோர் வயதானவர்கள். இத்தகைய சூழ்நிலையில், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது. மேலும், கோவிட் -19 நெருக்கடியால், பெரும்பாலான பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. பெரும்பாலான ஓய்வூதியதாரர்களின் வருமானம் அவர்களது உணவு தேவைக்கு மட்டுமே போதுமானதாக இருக்கிறது.” என்று அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது.
"நாடு நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது என்பதில் சந்தேகமில்லை. பெரும்பாலான ஓய்வூதியதாரர்கள் பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசர நிவாரண நிதிக்கு (PM-CARES) ஒரு நாள் ஓய்வூதியத்தை வழங்கியுள்ளனர்.” என்பதையும் மன்றம் சுட்டிக்காட்டியது.
ALSO READ: 7th Pay Commission: ஓய்வூதியதாரர்களுக்கான முக்கிய தகவலை அளித்தது அரசு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR