7th Pay Commission: ஓய்வூதியதாரர்களுக்கான முக்கிய தகவலை அளித்தது அரசு

ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. 1 ஜனவரி 2020 முதல் 30 ஜூன் 2021 வரை அகவிலைப்படி வழங்குவது குறித்த தகவல் அரசு மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 10, 2021, 03:19 PM IST
7th Pay Commission: ஓய்வூதியதாரர்களுக்கான முக்கிய தகவலை அளித்தது அரசு title=

7th Pay Commission Update: ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. நிதி அமைச்சகத்தின் செலவுத் துறை, ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு ரொக்கப் பணம் மற்றும் கிராஜுவிட்டியை வழங்கியுள்ளது. சமீபத்தில், ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான காலத்திற்கான கிராஜுவிட்டி பற்றிய தகவல் வெளியிடப்பட்டது.

இது குறித்து அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த குறிப்பில், 1 ஜனவரி 2020 முதல் 30 ஜூன் 2021 வரை அகவிலைப்படி வழங்குவது குறித்த தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

கிராஜுவிட்டி, விடுப்புத் தொகை குறித்த தகவல்

இந்தத் தகவல் ஒரு ட்வீட் மூலம் வழங்கப்பட்டுள்ளது. அதில் செலவினத் துறை 7 செப்டம்பர் 2021 அன்று மத்திய ஊழியர்களுக்கான கிராஜுவிட்டி மற்றும் லீவ் என்காஷ்மென்ட் குறித்து மெமோராண்டத்தை வெளியிட்டுள்ளது. இந்த ஊழியர்கள் ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஆவர்.

அகவிலைப்படி எவ்வளவு கிடைக்கும்

இந்த காலகட்டத்தில் அகவிலைப்படியின் (Dearness Allowance) விகிதம் அடிப்படை சம்பளத்தில் 17 சதவீதமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 1 ஜனவரி 2020-4 சதவீத டிஏ அதிகரிப்பு, 1 ஜூலை 2020 - 3 சதவீதம் டிஏ அதிகரிப்பு மற்றும் 1 ஜனவரி 2021 - 4 சதவீதம் டிஏ அதிகரிப்பு ஆகியவற்றுடன் கூடுதல் தவணைகளை சேர்த்து 28 சதவிகிதமாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.

ALSO READ: 7th Pay Commission சூப்பர் செய்தி: HBA திட்டத்தின் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது

மத்திய சிவில் சர்வீசஸ் (பென்ஷன்) விதிகள், 1972 ல் உள்ள தற்போதைய விதிகளின்படி, ஓய்வூதியம் அல்லது இறப்பு தேதியில் டிஏ, கிராஜுவிட்டி (Gratuity) கணக்கீட்டின் அடிப்படையில் ஊதியமாக கணக்கிடப்படுகிறது. நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி 1, 2020 முதல் ஜூன் 30, 2021 வரை, ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஏற்கனவே ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு விடுப்புக்கு பதிலாக கிராஜுவிட்டி மற்றும் ரொக்கப்பணம் ஒரு முறை ஓய்வூதிய பலன்களாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அகவிலைப்படியின் விகிதம் இதுதான்

1 ஜனவரி 2020 முதல் 30 ஜூன் 2020 வரை - அடிப்படை சம்பளத்தில் 21%

1 ஜனவரி 2020 முதல் 31 டிசம்பர் 2020 வரை - அடிப்படை சம்பளத்தில் 24%

1 ஜனவரி 2021 முதல் 30 மே 2021 வரை - அடிப்படை சம்பளத்தில் 28%

சிசிஎஸ் (CCS) ஓய்வூதிய விதிகள், 1972 இல் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற அனைத்து நிபந்தனைகளும் மற்றும் ஓய்வூதியத் துறையின் உத்தரவுகளும், விடுப்புக்கு பதில் கிராஜுவிட்டி மற்றும் ரொக்கப் பணம் பெறும்போது பொருந்தும்.

ALSO READ: 7th Pay Commission: அகவிலைப்படியுடன் இதுவும் அதிகரிப்பதால் ஊதியத்தில் சூப்பர் ஏற்றம்!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News