புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மோடி அரசு நற்செய்தியை வழங்கக்கூடும். அரசாங்கம் இந்த மாதம் தீபாவளி போனஸுடன் அகவிலைப்படி மற்றும் பயணப்படி ஆகியவற்றை அதிகரித்தது. தற்போது அரசு மீண்டும் ஒரு கொடுப்பனவை அதிகரிக்கக்கூடும் என்ற பேச்சு எழுந்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் அதன் பலன் கிடைக்கும் என்று ஊகங்கள் உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீட்டு வாடகை கொடுப்பனவு உயரும்


தகவலின்படி, ஊழியர்களுக்கு (Central Government Employees) கிடைக்கும் வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) அதிகரிக்கப்படலாம். இதன் காரணமாக ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் உயர்வு ஏற்படும். இது தொடர்பாக 11.56 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களின் வீட்டு வாடகைப்படியை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நிதி அமைச்சகம் பரிசீலிக்கத் தொடங்கியுள்ளது.


இதற்கான முன்மொழிவை ரயில்வே வாரியத்துக்கு அமைச்சகம் அனுப்பியுள்ளது. இந்த திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்த பிறகு, ஜனவரி 2021 முதல் பணியாளர்களுக்கு இது கிடைக்கத் துவங்கும், இதற்குப் பிறகு, ஊழியர்களின் சம்பளத்தில் அதிக உயர்வு இருக்கும். குறிப்பிடத்தக்க வகையில், இந்திய ரயில்வே டெக்னிக்கல் சூப்பர்வைசர்ஸ் அசோசியேஷன் (ஐஆர்டிஎஸ்ஏ) மற்றும் நேஷனல் ஃபெடரேஷன் ஆஃப் ரயில்வே மேன் (என்எஃப்ஐஆர்) ஆகியவை ஜனவரி 1, 2021 முதல் எச்ஆர்ஏவை அமல்படுத்தக் கோரியுள்ளன.


ALSO READ:7th Pay Commission: மீண்டும் அதிகரிக்கிறதா அகவிலைப்படி? 34% ஆக ஏற்றமா? 


வீட்டு வாடகை கொடுப்பனவு கிடைக்கும் முறை என்ன?


நகரத்திற்கு ஏற்ப வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) கிடைக்கும். நகரங்கள் X, Y மற்றும் Z வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. X பிரிவில் வரும் பணியாளர்களுக்கு இப்போது மாதம் ரூ.5400-க்கு மேல் HRA கிடைக்கும். Y வகுப்பைச் சேர்ந்தவர்கள் மாதம் ரூ. 3600 மற்றும் Z வகுப்பைச் சேர்ந்தவர்கள் மாதம் ரூ.1800 எச்.ஆர்.ஏ பெறுவார்கள். 


50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் X பிரிவில் வருகின்றன. இந்த நகரங்களின் பணியாளர்களுக்கு 27% HRA கிடைக்கும். Y வகை நகரங்களுக்கு 18% மற்றும் Z பிரிவுக்கு 9% கிடைக்கும்.


ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கக்குடும்


மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் பல பரிசுகள் கிடைக்கப் போகின்றன. சில துறைகளின் ஊழியர்களுக்கு இந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதால், அவர்களது சம்பளத்தில் 2022 ஜனவரியில் அதிக உயர்வு இருக்கும். அதேபோல, அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டுக்கு முன், மத்திய அரசு ஃபிட்மெண்ட் ஃபாக்டரையும் அதிகரிக்கக்கூடும். இது மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை (Basic Salary) அதிகரிக்கும்.


மொத்தத்தில் வரும் புத்தாண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு பலவித அதிகரிப்புகளை அளிப்பதோடு சம்பள உயர்வுக்கான செய்தியையும் கொண்டு வரும் என நம்பப்படுகின்றது.


ALSO READ: 7th Pay Commission சூப்பர் செய்தி: மீண்டும் நல்ல செய்தி அளிக்க தயாராகும் மத்திய அரசு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR