7th Pay Commission: சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை அரசு 31 சதவீதமாக உயர்த்தியது. இது ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, அரசு தனது ஊழியர்களுக்கு 4 மாத அகவிலைப்படி நிலுவையையும் வழங்கும்.
ஆனால், 18 மாதங்களாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி நிலுவைத் தொகை குறித்த முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கு முன்னதாக டிசம்பர் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிலுவைத் தொகை குறித்தும் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி
7வது ஊதியக் குழுவின் (7th Pay Commission) கீழ், மத்திய அரசு, ஊழியர்களுக்கு 31 சதவீத அகவிலைப்படியுடன் பல பெரிய சலுகைகளை வழங்கியுள்ளது. எனினும், அகவிலைப்படி அரியர் விவகாரம் 18 மாதங்களாக நிலுவையில் உள்ளது.
நேஷனல் கவுன்சில் ஆப் ஜாயிண்ட் கன்சல்டேடிவ் மெஷினரியின் (JCM) செயலாளர் (பணியாளர் தரப்பு) சிவ கோபால் மிஸ்ரா கூறுகையில், டிஏ முடக்கத்தை நீக்கும்போது, 18 மாதங்களாக நிலுவையில் உள்ள டிஏ அரியருக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார். டிசம்பர் மாதத்தில், டிஏ நிலுவை விவகாரம் குறித்து, அமைச்சரவை செயலாளருடன் பேச்சுவார்த்தை நடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ: 7th Pay Commission: ஊழியர்களுக்கு புத்தாண்டில் கிடைக்கும் குட் நியூஸ், சம்பளம் உயரும்
டிஏ நிலுவைத் தொகை ஒருமுறையில் செலுத்தப்படும்!
நிதி அமைச்சகம் (Finance Ministry), பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை மற்றும் செலவினத் துறை அதிகாரிகளுடன் கூட்டு ஆலோசனை நடைபெறவுள்ளது. இதில், டிஏ நிலுவைத் தொகையை மொத்தமாக வழங்குவது குறித்து ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது. எனினும், இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது அரசு பரிசீலிப்பதாக உறுதி அளித்தது.
அகவிலைப்படி அரியர் எவ்வளவு கிடைக்கும்?
JCM செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா கூறுகையில், லெவல்-1 ஊழியர்களின் டிஏ (Dearness Allowance) அரியர் தொகை ரூ.11,880-லிருந்து ரூ.37,000 வரை இருக்கும். அதே போல் லெவல்-13 ஊழியர்களுக்கு டிஏ நிலுவையாக ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 200 முதல் ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்து 200 வரை கிடைக்கும். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், அகவிலைப்படி (டிஏ) முடக்கம் நீக்கப்படுவதாகக்
கூறப்படுகின்றது.
ALSO READ: 7th Pay Commission: BSNL ஊழியர்களுக்கு நல்ல செய்தி, நவம்பர் மாதம் ஊதியத்தில் ஏற்றம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR