7வது ஊதியக்குழு புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி கிடைக்கப் போகிறது. ஏஐசிபிஐ புள்ளிவிவரங்கள் வெளிவந்த பிறகு, மத்திய ஊழியர்களின் அகவிலைப்படியை அரசாங்கம் 4% உயர்த்தக்கூடும் என்பது தெளிவாகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருப்பினும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான ஏஐசிபிஐ புள்ளிவிவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. 4% அகவிலைபப்டி அதிகரித்த பிறகு ஊழியர்களின் ஊதியம் எவ்வளவு அதிகரிக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 


4% வரை அதிகரிப்பு இருக்கக்கூடும்
மார்ச் மாதம் வந்த அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டு எண் (ஏஐசிபிஐ) தரவுகளின்படி, ஊழியர்களின் சம்பளம் 4% வரை உயர்வதற்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. முன்னதாக, டிசம்பரில் இருந்து ஏஐசிபிஐ புள்ளிவிவரங்கள் தொடர்ந்து குறைந்து வந்தன. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களிலும் ஏஐசிபிஐயின் புள்ளிவிவரங்களில் சரிவு ஏற்பட்டது. ஆனால் மார்ச் எண் வெளியான பிறகு டிஏ-வை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


டிஏ 38 சதவீதம் வரை உயரக்கூடும்
அரசு 4% அகவிலைப்படி-யை உயர்த்தினால், மத்திய ஊழியர்களின் டிஏ 34 சதவிகிதத்திலிருந்து 38% ஆக உயரும். இப்போது அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தில் எவ்வளவு அதிகரிப்பு இருக்கும் என்பதை காணலாம்.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி, HBA விகிதங்களை குறைத்தது அரசு


அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு
1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ 56,900
2. புதிய அகவிலைப்படி (38%) - ரூ.21,622/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (34%) - ரூ.19,346/மாதம்
4. அகவிலைப்படி அதிகரிப்பு - 21,622-19,346 = ரூ 2,276/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு - 2,276X12 = ரூ 27,312


குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு
1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ.18,000
2. புதிய அகவிலைப்படி (38%) - ரூ.6840/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (34%) - ரூ.6120/மாதம்
4. அகவிலைப்படி அதிகரிப்பு - 6840-6120 = ரூ.720/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு - 720 X12 = ரூ 8,640


மேலும் படிக்க | 7th Pay Commission: 4% அதிகரிக்கிறதா அகவிலைப்படி, ஊழியர்களுக்கு நல்ல செய்தி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR