7th Pay Commission: 4% அதிகரிக்கிறதா அகவிலைப்படி, ஊழியர்களுக்கு நல்ல செய்தி

7th Pay Commission: ஜூலை 2022 முதல் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மீண்டும் உயரக்கூடும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 11, 2022, 03:05 PM IST
  • வழக்கமாக ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி அதிகரிக்கப்படும்.
  • அரசாங்கம் அகவிலைப்படியை 4% அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • மத்திய அரசு கடைசியாக 2022 மார்ச் மாதத்தில் டிஏ-வை 3 சதவீதம் உயர்த்தியது.
7th Pay Commission: 4% அதிகரிக்கிறதா அகவிலைப்படி, ஊழியர்களுக்கு நல்ல செய்தி title=

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி!! ஜூலை 2022 முதல் அவர்களது ஊதியம் மீண்டும் உயரக்கூடும். ஊடக அறிக்கைகளின்படி, மத்திய அரசு தனது ஊழியர்களின் அகவிலைப்படியை (டிஏ) ஜூலை 2022 இல் அதிகரிக்கக்கூடும்.

உயர்த்தப்பட்ட சம்பளம் மத்திய அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்கில் வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் வரலாம் என கூறப்படுகிறது. அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இரண்டு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உயர்வின் சதவீதம் சில்லறை பணவீக்கத் தரவைப் பொறுத்தது. ஏப்ரல் 2022க்கான சில்லறை பணவீக்கம் குறித்த அறிக்கை வரும் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 2022 இல், பணவீக்க விகிதம் 7 சதவீதமாக இருந்தது, பிப்ரவரி 2022 இல் 6.1 சதவீதமாக இருந்தது. உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவதன் பின்னணியில் பணவீக்கத்தில் கூர்மையான உயர்வு ஏற்பட்டுள்ளது.

தற்போது நிலவும் பணவீக்க விகிதத்தை கருத்தில் கொண்டு, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை அரசாங்கம், 4%, அதாவது 34% இல் இருந்து 38% ஆக அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிஏ 38 சதவீதத்தை தாண்டலாம்

ஜனவரி மற்றும் பிப்ரவரியில் எஐசிபிஐ-இல் ஏற்பட்ட சரிவினால் ஜூலை-ஆகஸ்ட் மாதத்திற்கான அகவிலைப்படி அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும் என தோன்றியது. எனினும், தற்போது மார்ச் மாத எண் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் டிஏ 4 சதவீதம் அதிகரிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயரும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் செய்தி, விரைவில் அதிகரிக்கிறது ஊதியம் 

மத்திய அரசு கடைசியாக 2022 மார்ச் மாதத்தில் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தியது. அப்போது, ​​அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த நடவடிக்கையால் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைந்துள்ளனர்.

மத்திய அரசு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் டிஏ மற்றும் டிஆர் உயர்வு மீதான முடக்கத்தை நீக்கியது. அதன் பின்னர், ஊழியர்களின் அகவிலைப்படி பல சந்தர்ப்பங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அகவிலைப்படியுடன், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணமும் கடந்த சில மாதங்களில் அதிக அளவிலான உயர்வைப் பெற்றுள்ளது. அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தின் உயர்வு, அதிகரித்து வரும் பணவீக்கத்தின் தாக்கத்தை அரசு ஊழியர்கள் சமாளிக்க உதவுகிறது.

மேலும் படிக்க | 7th Pay Commission மகிழ்ச்சி செய்தி: ஜூலையில் மீண்டும் டிஏ அதிகரிப்பு, விவரம் இதோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News