7th Pay Commission: ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி, HBA விகிதங்களை குறைத்தது அரசு

7th Pay Commission: வீடுகளை உருவாக்க வங்கியில் வாங்கும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 7.9 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 13, 2022, 12:34 PM IST
  • மத்திய அரசாங்கம் மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் நிவாரணம் அளித்துள்ளது.
  • வங்கியின் வீட்டுக் கடனை அடைக்க முன்பணம் எடுத்து செலுத்தலாம்.
  • வங்கியில் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான முன்பணம் மொத்தமாக வழங்கப்படும்.
7th Pay Commission: ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி, HBA விகிதங்களை குறைத்தது அரசு title=

7வது ஊதியக்கமிஷன் / எச்பிஏ வட்டி விகிதங்கள்: மத்திய அரசாங்கம் மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் நிவாரணம் அளித்துள்ளது. வீடு கட்ட / வாங்க, பில்டிங் அட்வான்ஸ் (HBA) அதாவது வீடுகளை உருவாக்க வங்கியில் வாங்கும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 7.9 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு அலுவலக குறிப்பாணையும் வெளியிட்டுள்ளது.

ஊழியர்களுக்கு பெரிய நிம்மதி
ஏப்ரல் 1, 2022 முதல் மார்ச் 31, 2023 வரையிலான காலக்கட்டத்தில் வீடு கட்டுவதற்கும், வீடுகள் அல்லது மனைகள் வாங்குவதற்கும் வங்கிகளில் வாங்கிய வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக ஊழியர்களுக்கு வழங்கப்படும் முன்பணம் மீதான வட்டி விகிதத்தை அரசாங்கம் 80 அடிப்படை புள்ளிகள், அதாவது 0.8 சதவீதம் குறைத்துள்ளது. அதாவது, இப்போது மத்திய ஊழியர்களின் சொந்த வீடு கனவு நிஜமாவது இன்னும் எளிதாகிவிடும்.

எந்த விகிதத்தில் முன்பணம் கிடைக்கும்?
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் அலுவலக குறிப்பேடு ஒன்றை வெளியிட்டுள்ளது. முன்பணத்தின் வட்டி விகிதங்களைக் குறைப்பது குறித்து இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, 2023 மார்ச் 31 வரை, பணியாளர்கள் இப்போது ஆண்டுக்கு 7.1 சதவிகித வட்டி விகிதத்தில் முன்பணம் பெறலாம். இது முன்பு ஆண்டுக்கு 7.9 சதவிகிதமாக இருந்தது.

மேலும் படிக்க | 7th Pay Commission: 4% அதிகரிக்கிறதா அகவிலைப்படி, ஊழியர்களுக்கு நல்ல செய்தி 

25 லட்சம் வரை முன்பணம் எடுக்க முடியுமா?
அரசாங்கத்தால் வழங்கப்படும் இந்த சிறப்பு வசதியின் கீழ், மத்திய ஊழியர்கள் இரண்டு வழிகளில் அதாவது, தங்கள் அடிப்படை சம்பளத்தின்படி, 34 மாதங்கள் வரை அல்லது அதிகபட்சமாக ரூ 25 லட்சம் வரை முன்பணமாக எடுத்துக் கொள்ளலாம். மேலும், வீட்டின் தொகை அல்லது ஊழியரின் செலுத்தும் திறன் ஆகியவற்றிலிருந்து, ஊழியர்களுக்கு எது குறைவாக இருக்கிறதோ, அந்தத் தொகையை முன்பணமாக எடுத்துக் கொள்ளலாம்.

எச்பிஏ என்றால் என்ன?
மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு வீடு கட்டுவதற்கான முன்பணத்தை அளிக்கிறது. இதில், பணியாளர் தனது சொந்த அல்லது மனைவியின் நிலத்தில் ஒரு வீட்டைக் கட்டுவதற்கு முன்பணம் வாங்கலாம். இந்த திட்டம் 2020 அக்டோபர் 1 முதல் தொடங்கப்பட்டது. இதன் கீழ், 2023 மார்ச் 31 வரை, மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 7.1% வட்டி விகிதத்தில் வீடு கட்டுவதற்கான முன்பணம் வழங்கப்படுகிறது.

வங்கியின் வீட்டுக் கடனை அடைக்க முன்பணம் எடுத்து செலுத்தலாம்

புதிய வீடு கட்டுவதற்கும், பிளாட் வாங்குவதற்கும் வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியிருந்தால், அதை முன்பணம் எடுத்து திருப்பிச் செலுத்தலாம். இந்த முன்பணம் நிரந்தர மற்றும் தற்காலிக ஊழியர்களுக்கும் கிடைக்கும். ஆனால் தற்காலிக பணியாளர்களின் பணி தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் இருக்க வேண்டும். 

வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிய நாளிலிருந்து பணியாளர்களுக்கு வீடு கட்ட முன்பணம் கிடைக்கும். முன்பு வீடு கட்ட முன்பணம் கேட்டு விண்ணப்பித்திருந்தாலும், கடன் கொடுத்த நாள் முதல் இந்தத் தொகை கிடைக்கும். வங்கியில் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான முன்பணம் மொத்தமாக வழங்கப்படும். எவ்வாறாயினும், முன்பணத்தை வழங்கிய நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள் பணியாளர்கள் எச்பிஏ பயன்பாட்டுச் (HBA Utilization Certificate) சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் செய்தி, விரைவில் அதிகரிக்கிறது ஊதியம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News