Aadhaar: பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இல்லாமலும் ஆதாரை பதிவிறக்கலாம், செயல்முறை இதோ
Aadhaar: உங்கள் 12 இலக்க ஆதார் விவரங்களை வழங்க விரும்பவில்லை என்றால், அதற்குப் பதிலாக 16 இலக்க மெய்நிகர் அடையாள எண்ணையும் (VID) பயன்படுத்தலாம்.
புதுடெல்லி: ஆதார் அட்டைகளை வழங்கும் அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) இப்போது பயனர்களிடம் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இல்லாவிட்டாலும், யுஐடிஏஐயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கிறது.
பயனர்கள் இப்போது யுஐடிஏஐ இணையதளத்தில் இருந்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இல்லாமல் ஆதார் பிவிசி கார்டை பதிவிறக்கம் செய்யலாம். இதை செய்ய கீழே குறிப்பிடப்பட்டுள்ள செயல்முறையை பயனர்கள் பின்பற்றலாம்:
1. https://residentpvc.uidai.gov.in/order-pvcreprint என்ற யுஐடிஏஐ-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று 'எனது ஆதார்' அதாவது ‘My Aadhaar' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
2. 'ஆர்டர் ஆதார் பிவிசி கார்டு' ஆப்ஷனைக் கிளிக் செய்து, உங்களின் 12 இலக்க ஆதார் அட்டை எண்ணை உள்ளிடவும்.
3. கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்
மேலும் படிக்க | Aadhaar Verification: புதிய விதியை உருவாக்கியது அரசாங்கம், விவரம் இதோ
4. 'எனது மொபைல் எண் பதிவு செய்யப்படவில்லை' ( 'My mobile number is not registered' ) விருப்பத்தை கிளிக் செய்யவும்
5. மாற்று மொபைல் எண்ணை உள்ளிட்டு 'OTP அனுப்பு' ( 'Send OTP' ) பொத்தானைக் கிளிக் செய்யவும். இது நீங்கள் OTP எண்ணைப் பெறுவதற்குத் தேர்வு செய்யும் எந்த மொபைல் எண்ணாகவும் இருக்கலாம்.
6. 'விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்’ தேர்வுப்பெட்டியைக் கிளிக் செய்து, ஓடிபி எண்ணை அழுத்திய பின் 'சப்மிட்' பொத்தானைத் தேர்ந்தெடுக்கவும்.
7. நீங்கள் இப்போது ஆதார் கடிதத்தின் ப்ரெவ்யூவைப் பார்க்கலாம்.
8: இப்போது விவரங்களைச் சரிபார்த்து, ஆன்லைனில் பணம் செலுத்த 'பணம் செலுத்து' ('Make Payment' ) விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
உங்கள் 12 இலக்க ஆதார் விவரங்களை வழங்க விரும்பவில்லை என்றால், அதற்குப் பதிலாக 16 இலக்க மெய்நிகர் அடையாள எண்ணையும் (VID) பயன்படுத்தலாம். சில செயல்முறைகள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதையும் பதிவு செய்யாத மொபைல் எண் பயனர்களுக்கு கிடைக்காது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட மொபைலைப் பயன்படுத்தினால் மட்டுமே ஆதார் ப்ரெவ்யூ கிடைக்கும். பதிவு செய்யப்படாத மொபைல் அடிப்படையிலான ஆர்டருக்கு ஆதார் அட்டை விவரங்களின் முன்னோட்டம், அதாவது ப்ரிவ்யூ கிடைக்காது.
மேலும் படிக்க | Aadhaar Card உண்மையானதா, போலியானதா? கண்டுபிடிப்பது எப்படி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR