Aadhaar Card Latest News:  வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) ஆதார் அட்டையைப் பெறுவதற்கான விதிகளை (NRI Aadhaar Card Rule) யுஐடிஏஐ உருவாக்கியுள்ளது. இதன் படி, வெளிநாடுகளில் வசிப்பவர்கள் ஆதார் அட்டையை உருவாக்கிக் கொள்ள விரும்பினால், அவர்கள் அதை உருவாக்கிக் கொள்ளலாம். இதற்கு அவர்கள் இந்திய பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்க வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு ஆதார் (Aadhaar) சேவை வழங்குநர் என்ஆர்ஐ-க்காக ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பை செய்ய விரும்பினால், அவர் கண்டிப்பாக NRI-க்காக உருவாக்கப்பட்ட விதிகளைப் பின்பற்ற வேண்டியது அவசியமாகும் என்று யுஐடிஏஐ (UIDAI) தெரிவித்துள்ளது.


NRI-க்கான ஆதார் அட்டை


ஆதார் அட்டையைப் பெற NRI மக்கள் சில விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று யுஐடிஏஐ தெரிவித்துள்ளது. NRI களுக்கு ஆதார் அட்டை பெற இந்திய பாஸ்போர்ட் கண்டிப்பாக தேவைப்படும். உங்கள் துணைவருக்காக (கணவன் / மனைவி) உங்கள் பாஸ்போர்ட்டை ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டியிருந்தால், உங்கள் கணவரின் / மனைவியின் பெயர் உங்கள் பாஸ்போர்ட்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.


NRI-க்களின் குழந்தைகளுக்கான ஆதார் அட்டை


1. ஒரு NRI, தனது குழந்தைகளுக்கு ஆதார் அட்டையை உருவாக்க விரும்பினால், UIDAI-யின் இந்த விதிகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும்.
2. குழந்தை என்ஆர்ஐ ஆக இருந்தால், அவருக்கு முறையான இந்திய பாஸ்போர்ட் இருக்க வேண்டியது அவசியமாகும்.
3. குழந்தை இந்திய குடிமகனாக இருந்தால், பெற்றோருடனான உறவுக்கு சான்றாக ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
4. இது தவிர, குழந்தையின் சார்பாக தாய் அல்லது தந்தை ஒப்புதல் அளிக்க வேண்டும்.


மொபைல் வெரிஃபிகேஷன்


NRI மக்கள் ஆதார் அட்டைக்காக விண்ணப்பிக்கும்போது கொடுக்கப்படும் விவரங்களில் கண்டிப்பாக இந்திய மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும். ஆதார் அட்டையில் சர்வதேச எண்களுக்கான ஒப்புதல் இதுவரை வழங்கப்படவில்லை என்று யுஐடிஏஐ (UIDAI) தெரிவித்துள்ளது. எனவே NRI-களுக்கு இந்திய மொபைல் எண் இருப்பது அவசியமாகும்.


ALSO READ:Aadhaar - DL link: வீட்டில் இருந்த படியே, ஆதார் - ஓட்டுநர் உரிமத்தை நொடியில் இணைக்கலாம்


ஆதார் அட்டைக்கு NRI விண்ணப்பிக்கும் முறை


1. NRI ஆதார் அட்டையை உருவாக்கிக்கொள்ள, முதலில் அருகில் உள்ள ஒரு ஆதார் மையத்துக்கு செல்ல வேண்டும்.
2. உங்களுடன் உங்களது இந்திய பாஸ்போர்ட்டை எடுத்துச் செல்லவும்.
3. அதன் பிறகு அனைத்து விவரங்களையும் பதிவு படிவத்தில் நிரப்பவும்.
4. ஆதார் பதிவு செய்ய மின்னஞ்சல் ஐடி அவசியமாகும்.
5. பதிவு படிவத்தை கவனமாக படித்து டிக்லரேஷனில் கையெழுத்திடுங்கள்.
6. உங்களை ஒரு NRI ஆக பதிவு செய்யுமாறு உங்கள் ஆபரேட்டரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.
7. உங்கள் பாஸ்போர்ட்டை உங்கள் அடையாள ஆவணமாக கொடுங்கள்.
8. பாஸ்போர்ட் உங்கள் முகவரி மற்றும் பிறந்த தேதிக்கான ஆவணமாக செயல்படும்.
9. உங்கள் பயோமெட்ரிக் செயல்முறையை முடித்து, பதிவுச் சீட்டைப் பெறுங்கள்.
10. ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் உங்கள் ஆதார் அட்டை உங்களுக்கு கிடைத்து விடும்.


ALSO READ: IRCTC New Rule: ஆதார் அட்டையுடன் IRCTC கணக்கை இணைத்தால் மிகப்பெரிய நன்மை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR