ஆதார் அட்டை சமீபத்திய செய்தி: ஆதார் அட்டை பயன்படுத்துவோருக்கு மகிழ்ச்சியான செய்தி. இப்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இல்லாமலும் உங்கள் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்யலாம். ஆதாரை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) இதனை அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறிப்பாக தங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்யாதவர்களுக்கு உதவ UIDAI இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. முன்னர் பயனர்கள் ஆதார் அட்டையைப் பதிவிறக்கம் செய்ய ஆதாருடன் இணைக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் தேவைப்பட்டது. எனினும், இப்போது அது தேவையில்லை. பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இல்லாமல் ஆதார் அட்டையை எவ்வாறு பதிவிறக்கம் செய்யலாம் என்பதை இந்த பதிவில் காணலாம். 


ஆதாரை பதிவிறக்கம் செய்வதற்கான எளிதான செயல்முறை:


1. இதற்கு முதலில் யுஐடிஏஐ-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று 'மை ஆதார்' என்பதை டேப் செய்யவும்.


2. இப்போது 'ஆர்டர் ஆதார் பிவிசி கார்டு' என்பதைக் கிளிக் செய்யவும்.


3. இப்போது இங்கே 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள்.


4. இங்கே நீங்கள் ஆதார் எண்ணுக்குப் பதிலாக 16 இலக்க மெய்நிகர் அடையாள எண்ணையும் (VID) உள்ளிடலாம்.


5. இந்த செயல்முறைக்குப் பிறகு, உங்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அல்லது கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.


6. பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இல்லாமல் கார்டை பதிவிறக்கம் செய்ய விரும்பினால், 'எனது மொபைல் எண் பதிவு செய்யப்படவில்லை' என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.


மேலும் படிக்க | ஸ்மார்ட் போன் தேவையில்லை... சாதாரண போனிலும் இனி பணப் பரிவர்த்தனை செய்யலாம்! 


7. இப்போது உங்கள் மாற்று எண் அல்லது பதிவு செய்யப்படாத மொபைல் எண்ணை உள்ளிடவும்.


8. பிறகு, 'Send OTP' என்பதைக் கிளிக் செய்யவும்


9. இப்போது நீங்கள் உள்ளிட்ட மாற்று எண்ணில் ஒரு முறை கடவுச்சொல் (OTP) வரும்.


10. அடுத்து, 'விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்' தேர்வுப்பெட்டியைக் கிளிக் செய்து, இறுதியாக 'சப்மிட்' என்பதைக் கிளிக் செய்யவும்.


11. இப்போது நீங்கள் ஒரு புதிய பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள்.


12. ரீபிரிண்டிங்கின் சரிபார்ப்புக்கு, இங்கே ’ப்ரிவ்யூ ஆதார் லெட்டர்’ என்ற ஆப்ஷன் கிடைக்கும். 


13. இதற்குப் பிறகு, 'மேக் பேமண்ட்’ என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.


மேலும் படிக்க | இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்: எஃப்.டி வட்டி விகிதங்களில் ஏற்றம் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR