ஆதார் கார்ட் தரவுகளை பாதுகாக்க அதை லாக் / அன்லாக் செய்யலாம்: செயல்முறை இதோ
Aadhaar Card Biometric Lock/Unlock Feature: ஆதார் அட்டை வைத்திருக்கும் அனைவரும் தனது அட்டையில் உள்ள தகவல்களை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது என்பதை கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும்.
ஆதார் அட்டை: ஆதார் அட்டை என்பது இந்தியாவில் உள்ள மக்களின் அடையாளமாக இருக்கும் ஒரு ஆவணமாகும். கார் முதல் வீடு வரை, எதை வாங்க வேண்டுமானாலும், ஆதார் அட்டை தேவைப்படுகிறது. இது தவிர, வங்கிகளில் கணக்கு தொடங்கவும், நிறுவனங்களில் சேர்க்கை பெறவும் ஆதார் கட்டாயமாக உள்ளது. இத்துடன் இந்திய அரசின் அனைத்து வசதிகளையும் பெற ஆதார் அட்டை கண்டிப்பாகத் தேவை. குடிமக்களின் பாதுகாப்பை மனதில் வைத்து UIDAI (Unique Identification Authority of India) ஆதார் அட்டையை லாக் மற்றும் அன்லாக் செய்யும் வசதியையும் வழங்கியுள்ளது.
தரவு தனியுரிமைக்காக கார்டைப் லாக் செய்வது நல்லது
தரவு தனியுரிமை மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, உங்கள் ஆதார் அட்டையில் இருக்கும் பயோமெட்ரிக் தரவுகளின் பாதுகாப்பை நீங்கள் முழுமையாகக் கவனிக்க வேண்டும். மக்களின் ஆதார் அட்டை தவறாகப் பயன்படுத்தப்படும் பல நிகழ்வுகள் பற்றி நாம் தினமும் கேள்விப்படுகிறோம். ஆகையால் ஆதார் அட்டை வைத்திருக்கும் அனைவரும் தனது அட்டையில் உள்ள தகவல்களை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது என்பதை கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும்.
பயோமெட்ரிக் லாக்-அன்லாக் என்பது ஆதார் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் தங்கள் பயோமெட்ரிக்ஸைப் லாக் செய்யவும் அன்லாக் செய்யவும் அனுமதிக்கும் அம்சமாகும். இந்த அம்சத்தின் முக்கிய நோக்கம் உங்கள் பயோமெட்ரிக்ஸ் தரவு, கைரேகைகள் மற்றும் கருவிழி ஸ்கேனின் தனியுரிமையை வலுப்படுத்துவதாகும்.
சில வழிமுறைகளை அறிந்துகொள்வதன் மூலம், மக்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
மேலும் படிக்க | ஆதார் அட்டையை வைத்து பேங்க் பேலன்சை எவ்வாறு சரிபார்ப்பது?
ஆதார் கார்ட் பயனர்கள் ஆதார் அட்டையை லாக் செய்துவிட்டால், யாரும் இதை தவறாக பயன்படுத்த முடியாது. அதார் பயனர்கள் தங்கள் ஆதார் அட்டையை லாக் செய்தால், அதை அவர்களே உபயோகிக்க வேண்டுமானாலும், அன்லாக் செய்த பின்னரே செய்ய முடியும்.
ஆதார் அட்டையை லாக் / அன்லாக் செய்வது எப்படி? முழு செயல்முறையை இங்கே காணலாம்:
- அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.uidai.gov.in-க்கு செல்லவும்.
- இங்கே 'My Aadhaar'-ஐ செலக்ட் செய்து, பின்னர் 'Aadhaar Services' -ல் கிளிக் செய்யவும்.
- அதன் பிறகு Lock/Unlock Biometrics என்பதைக் கிளிக் செய்யவும்.
- இப்போது இங்கே உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணையும் கொடுக்கப்பட்ட கேப்ட்சா குறியீட்டையும் உள்ளிடவும்.
- இதனுடன், Send OTP விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP வரும், அதை உள்ளிடவும்.
- இப்போது நீங்கள் தேர்வுசெய்யக்கூடிய பயோமெட்ரிக் தரவை லாக் / அன்லாக் செய்யும் வசதியைப் பெறுவீர்கள்.
- லாக் பொத்தானைக் கிளிக் செய்த உடனேயே உங்கள் பயோமெட்ரிக் தரவு லாக் செய்யப்படும். அன்லாக் பொத்தானைக் கிளிக் செய்த உடன் அது திறக்கப்படும்.
மேலும் படிக்க | எச்சரிக்கை: நீங்கள் வைத்திருக்கும் ஆதார் அட்டை உண்மையானது தானா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ