ஆதார் அட்டை பயோமெட்ரிக் லாக்/அன்லாக் அம்சம்: இன்றைய காலகட்டத்தில், ஆதார் அட்டை நமது மிக முக்கியமான மற்றும் அவசியமான ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. ஆதார் இல்லாவிட்டால், நமது பல பணிகள் முடங்கிவிடும். இது தவிர, ஆதார் இல்லாமல் நாம் எந்த அரசாங்கத் திட்டத்தையும் பயன்படுத்திக் கொள்ள முடியாது. ஆதார் அட்டை நமது அடையாளத்திற்கும் முகவரிக்கும் வலுவான சான்றாகும். ஆதாரை பயன்படுத்தி மோசடி செய்வது மிகவும் கடினம் என்றாலும் இன்றைய காலகட்டத்தில் எதுவுமே அசாத்தியம் இல்லை. மோசடிக்காரர்கள் ஏதாவது ஒரு வழியை கண்டுபிடித்தே விடுகிறார்கள்.
ஆகையால், நாம் அனைவரும் நமது ஆதார் அட்டையின் பாதுகாப்பு மற்றும் அதில் உள்ளிடப்பட்ட தனிப்பட்ட தகவல்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஆதார் அட்டையை வழங்கும் நிறுவனமான யுஐடிஏஐ, இதற்கான பல வசதிகளை நமக்கு வழங்குகிறது. இவற்றின் கீழ் நமது ஆதார் பயோமெட்ரிக்ஸை நாம் லாக் செய்யலாம். இதன் மூலம் நமது தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். இதன் சிறப்பம்சம் என்னவென்றால், தேவைப்படும்போது எப்போது வேண்டுமானாலும் இதை அன்லாக் செய்துகொள்ளலாம்.
ஆதாரின் பயோமெட்ரிக் லாக்-அன்லாக் அம்சம் எப்படிப்பட்டது?
பயோமெட்ரிக் லாக்-அன்லாக் என்பது ஆதார் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் தங்கள் பயோமெட்ரிக்ஸைப் லாக் செய்யவும் அன்லாக் செய்யவும் அனுமதிக்கும் அம்சமாகும். இந்த அம்சத்தின் முக்கிய நோக்கம் உங்கள் பயோமெட்ரிக்ஸ் தரவு, கைரேகைகள் மற்றும் கருவிழி ஸ்கேனின் தனியுரிமையை வலுப்படுத்துவதாகும்.
மேலும் படிக்க |ஆன்லைனில் ஆதார் - வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பது எப்படி?
பயோமெட்ரிக்ஸை லாக் செய்த பிறகு, உங்கள் ஆதார் பயோமெட்ரிக்ஸை அங்கீகாரத்திற்காக யாரும் பயன்படுத்த முடியாது. இதை ஒரு முறை லாக் செய்துவிட்டால், நீங்கள் கூட இதை சுய அங்கீகாரத்திற்காகப் பயன்படுத்த முடியாது. இதை அன்லாக் செய்த பிறகே உங்களாலும் இதை பயன்படுத்த முடியும்.
உங்கள் ஆதார் பயோமெட்ரிக்ஸை லாக் செய்ய இந்த செயல்முறையைப் பின்பற்றவும்
- உங்கள் ஆதாரை பயோமெட்ரிக் லாக்கிங் செய்ய, முதலில் ஆதார் அதிகாரப்பூர்வ இணையதளமான https://resident.uidai.gov.in/bio-lock க்குச் செல்லவும்.
- வலைத்தளத்திற்கு சென்ற பிறகு, நீங்கள் திரையில் உள்ள ஒரு தேர்வுப்பெட்டியைக் (செக் பாக்ஸ்) கிளிக் செய்ய வேண்டும். அதில் உங்கள் பயோமெட்ரிக்கைத் அன்லாக் செய்யும் வரை உங்கள் பயோமெட்ரிக்கை அங்கீகரிக்க முடியாது என்று எழுதப்பட்டிருக்கும்.
- செக் பாக்சில் கிளிக் செய்த பிறகு, Lock/Unlock Biometrics என்பதைக் கிளிக் செய்யவும்.
- Lock/Unlock Biometrics என்பதைக் கிளிக் செய்த பிறகு, உங்கள் திரையில் புதிய பக்கம் திறக்கும்.
- இந்தப் புதிய பக்கத்தில், உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட்டு கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு Send OTP என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP வரும். இந்த OTPயை உள்ளிட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும். நீங்கள் சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்தவுடன் உங்கள் ஆதார் பயோமெட்ரிக்ஸ் லாக் செய்யப்படும்.
மேலும் படிக்க | ஆதார் தொலைபேசி எண்ணை ஆன்லைனில் தெரிந்து கொள்வது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ