ஆதார் அட்டையில் இந்த முக்கியமான அப்டேட்டை செய்யாவிட்டால் ஆபத்து!

ஆதார் அட்டையில் முகவரியை அப்டேட் செய்யும் செயல்முறைக்கு சேவைக்கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும், பின்னர் இதற்கு ரசீது வழங்கப்படும்.  

Written by - RK Spark | Last Updated : Oct 31, 2022, 10:33 AM IST
  • ஆதார் கார்ட் முக்கிய ஆவணமாக உள்ளது.
  • அதில் முகவரியை சரியாக உள்ளிடுவது அவசியம்.
  • முகவரியில் மாற்றங்கள் செய்ய சிறிய கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆதார் அட்டையில் இந்த முக்கியமான அப்டேட்டை செய்யாவிட்டால் ஆபத்து! title=

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் இன்றைய காலகட்டத்தில் ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக மாறிவிட்டது.  அரசாங்கம் வழங்கும் வசதிகளை பெறவும், உங்களது தனிப்பட்ட வேலைகளுக்கும் இப்போது ஆதார் அட்டை முக்கியமானதாகி விட்டது.  பள்ளி, கல்லூரி, வேலை மற்றும் இதர தேவைகளுக்கு அடையாள சான்றாக ஆதார் அட்டை தான் பயன்படுத்தப்படுகிறது.  மற்ற முக்கியமான ஆவணங்களை காட்டிலும் ஆதார் அட்டை ஒன்று மட்டும் இருந்தாலே போதும் என்கிற நிலை ஏற்பட்டுவிட்டது என்றே கூறலாம்.  இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையில் உங்களது முகவரி சரியானதாக இல்லையென்றால் நீங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். 

மேலும் படிக்க | பொது வருங்கால வைப்பு நிதி விதியில் மத்திய அரசு செய்துள்ள அதிரடி மாற்றம்!

சிலர் சொந்த வீடுகளில் வசிப்பார்கள், பலர் வாடகை வீடுகளில் வசிப்பார்கள், அப்படி வாடகை வீடுகளில் வசிக்கும் நபர்கள் சில சமயம் சில காரணங்களால் அடிக்கடி வீடு மாற்றம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.  அப்படி நீங்கள் வீடு மாற்றும் போது உங்களது ஆவணங்களிலும் முகவரியை மாற்ற வேண்டியது கட்டாயம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், ஆதார் அட்டைதாரர்கள் முகவரியை மாற்றாவிட்டால் பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.  ஆதாரில் உள்ள இரண்டாவது முகவரியால் பல நேரங்களில் நாம் வீடு மாறும்போது அல்லது வேறு ஊருக்குச் செல்லும்போது பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.  அதாவது அரசு வழங்கக்கூடிய பல்வேறு வகையான வசதிகளைப் பெறுவதற்கும், வங்கியில் கணக்கு தொடங்குவதற்கும், இன்னும் பலவகையான வேலைகளுக்கும் ஆதார் அட்டையில் நாம் நமது முகவரியை அப்டேட் செய்து வைத்திருப்பது அவசியம்.  இப்போது ஆன்லைன் மூலமாக நாம் நமது முகவரியை ஆதார் அட்டையில் எப்படி அப்டேட் செய்யலாம் என்பதை இங்கு காண்போம்.

1) ஆதார் அட்டையில் முகவரியைப் அப்டேட் செய்ய முதலில் uidai.gov.in என்கிற அதிகாரபூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும், பின்னர் 'மை ஆதார்' என்கிற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

2) அடுத்ததாக ஆதாரை அப்டேட் செய்வதற்கான ஆப்ஷனை தேர்வு செய்யவும், இப்போது முகவரியை அப்டேட் செய்யும் ஆப்ஷனுக்கு செல்ல வேண்டும்.  அதன் பிறகு உங்கள் ஆதார் அட்டையிலுள்ள 12 இலக்க எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும்.

3) அதனையடுத்து மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும், பிறகு முகவரியை மாற்றுவதற்கான ஆப்ஷன் இருக்கும் அதனை தேர்வு செய்து நீங்கள் முகவரியை அப்டேட் செய்யலாம், அதனுடன் நீங்கள் வசிக்கும் முகவரிக்கான ஆதாரத்தையும் இணைக்க வேண்டும்.

4) இதற்கு ரூ.50 சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும், கட்டணம் செலுத்தியதும் ரசீது கிடைக்கும்.  நீங்கள் இதனை செய்த 24 மணிநேரத்தில் உங்கள் ஆதார் அட்டையில் உங்கள் முகவரி அப்டேட் செய்யப்படும்.

மேலும் படிக்க | நவம்பர் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News