இன்றைய காலகட்டத்தில், ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணமாகக் கருதப்படுகிறது. மேலும் பல ஆவணங்களும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளன. அடையாள அட்டையாகவும் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில், சிம் கார்டு (Sim Card) வாங்குவதற்கும் ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது என்பது முக்கியமான விஷயம். இது போன்ற சூழ்நிலையில், ஆதார் அட்டை பல விஷயங்களுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை வைத்திருப்பவர்களின் பெயரில் பல சிம்கள் பதிவு செய்யப்படுவது குறித்து செய்திகள் வருகின்றன.  இதன் மூலம் மோசடி நடக்கும் வாய்ப்பு உள்ளதால், பயனர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு நபரின்  பெயரில், ஆதார் கார்டு மூலம் அதிகபட்சமாக 9 மொபைல் எண்கள் பெறலாம் என்பது குறிப்பிடத்தககது. அந்த வகையில் உங்கள் ஆதார் எண் மூல  பெறப்பட்ட போலி சிம் கார்டுகளை கண்டறிவது என்பதை அறிந்து கொள்ளலாம். ஆதார் அட்டை மூலம் போலி சிம் பதிவு செய்வதால், பல நேரங்களில்,  பெரிய மோசடிகளுக்கு சிலர் பலியாகிறார்கள். அது பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாத காரணத்தினால், மோசடியில் மாட்டிக் கொள்கிறார்கள். உங்கள் ஆதார் அட்டையில், எத்தனை சிம் எண்ணை எவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிவது மிகவும் எளிது. இதனை அறிந்து கொண்டால் மோசடியில் இருந்து தப்பிக்கலாம்.


ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்ட சிம் எண்ணை கண்டுபிடிக்கும் முறை


இதற்கு அரசு இணையதளத்தின் உதவியை நாட வேண்டும். இந்த இணையதளம் DoT துறையினால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போர்டல் மோசடி மேலாண்மை மற்றும் நுகர்வோருக்கான டெலிகாம் அனலிட்டிக்ஸ் அல்லது TAFCOP என்று அழைக்கப்படுகிறது. முதலில் பிரவுசருக்குச் சென்று https://tafcop.dgtelecom.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.


மேலும் படிக்க | Post Office: போஸ்ட் ஆஃபீஸில் 100 ரூபாய் முதலீடு .. ரூ.26 லட்சம் ரிட்டன்: சேமிப்புக்கு உத்திரவாதம்


இணையதளத்திற்கு சென்ற பிறகு, அதில் உங்கள் முதன்மை எண்ணைக் கொடுக்க வேண்டும். அதன் பிறகு உங்கள் போனுக்கு OTP வரும். பின்னர் இந்த OTP ஐ உள்ளிடவும். OTP சரிபார்க்கப்பட்டதும், உங்கள் ஆதார் அட்டை (Aadhar Card)  எண்ணுடன் இணைக்கப்பட்ட அனைத்து மொபைல் எண்களும் இங்கே திரையில் தோன்றும். இங்கு நீங்கள் உபயோக்கிக்காத அல்லது தெரியாத  மொபைல் எண்அல் ஏதேனும் பதிவு செய்யப்பட்டிருந்தால், அந்த எண்களை ரத்து செய்வதற்கான கோரிக்கையையும்  பதிவு செய்யலாம்.


மேலும் படிக்க | சிபில் ஸ்கோர் பாதிக்கப்படாமல் க்ரெடிட் கார்டுகளை ரத்து செய்ய வழிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ