ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். வங்கி, நிலச் சொத்து மற்றும் அரசு அலுவலகம் தொடர்பான பணிகளுக்கு ஆதார் அட்டை அவசியம். பல நேரங்களில், வேலை இடமாற்றம் அல்லது வேறு ஏதேனும் காரணங்களால், நம் வீட்டை ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு அல்லது அதே நகரத்தில் கூட மாற்ற வேண்டியிருக்கும். அப்போது, நீங்கள் ஆதார் அட்டையில் முகவரியை மாற்ற வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆதார் அட்டையில் உங்கள் முகவரியையும் மாற்ற ஆதார் மையத்திற்குச் சென்று வரிசையில் நிற்க வேண்டியதில்லை. வீட்டில் இருந்தபடியே ஆதார் அட்டையில் உங்கள் முகவரியை எளிதாக மாற்றலாம்.  கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறையை பின்பற்றி, வீட்டில் இருந்தபடியே ஆதார் அட்டையில் (Aadhaar Card) உங்கள் முகவரியை எளிதாக மாற்றலாம். 


ALSO READ | eSign Aadhaar: ஆதார் மூலம் டிஜிட்டல் கையொப்பம் செய்வது எப்படி..!!


ஆதாரில் முகவரியை புதுப்பிப்பது எப்படி:


1. முதலில் நீங்கள் UIDAI அதிகாரப்பூர்வ வலைத்தளமான uidai.gov.in க்குச் செல்லவும்.


2. இதற்குப் பிறகு, முகப்புப் பக்கத்தில் உள்ள 'MY Aadhaar' பகுதிக்குச் செல்லவும்.


3. இப்போது நீங்கள் இங்கு 'Update Your Aadhaar' என்ற பகுதியை காண்பீர்கள், இதில் நீங்கள் Update Demographics Data Online என்பதை கிளிக் செய்க.


4. இந்த ஆப்ஷனை கிளிக் செய்த பிறகு, UIDAI செல்ப் சர்வீஸ் அப்டேட் போர்டல் (SSUP) ssup.uidai.gov.in பக்கம் தோன்றும்.


5. இங்கே நீங்கள் Proceed to Update Aadhaar என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.


ALSO READ | Baal Aadhaar: குழந்தைகளுக்கான ஆதார் அட்டை பெறுவது எப்படி? முழு விபரம்..!!


6. இதற்குப் பிறகு, ஆதார் அட்டை எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள். 


7.இதற்குப் பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். OTP ஐ உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.


8. OTP ஐ உள்ளிட்ட பிறகு, ஒரு புதிய பக்கம் உங்கள் முன்தோன்றும், அங்கு உங்களுக்கு முன் இரண்டு ஆப்ஷன்கள் தோன்றும். இப்போது நீங்கள் Update Demographics Data என்பதைக் கிளிக் செய்க.


9. இப்போது நீங்கள் 'Address' ஆப்ஷனை கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு, சரியான ஆவணத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலைச் சமர்ப்பிக்கவும். 


10. அதன் பிறகு Proceed என்பதைக் கிளிக் செய்யவும்.


11. இதற்குப் பிறகு, உங்கள் பழைய முகவரியைக் காண்பீர்கள். மேலும் நீங்கள் சில தனிப்பட்ட தகவல்களை கீழே நிரப்ப வேண்டும். பிறகு சரியான ஆவணங்களையும் பதிவேற்ற வேண்டும். அதை முன்னோட்டம் (Preview) மூலமும் சரி பார்க்கலாம்.


12. முன்னோட்டத்திற்குப் பிறகு,  இறுதியாக சமர்ப்பித்த பிறகு, அப்டேட் ரெக்வெஸ்ட் நம்பர் (URN) கிடைக்கும். அதன் உதவியுடன் UIDAI இணையதளத்தில் அப்டேட் நிலையைச் சரிபார்க்கலாம். இவ்வாறு உங்கள் ஆதார் முகவரி புதுப்பிக்கப்படும். ஆதார் அட்டையைப் எத்தனை தடவை புதுப்பிக்கலாம் என்பதற்கான வரம்பு இல்லை. ஏனென்றால் வீடு அல்லது இடம் மாறிய பிறகு, தகவலை புதுப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. 


ALSO READ | Post Office சூப்பர் திட்டம், ரூ10,000 வீதம் முதலீடு; ரூ16 லட்சம் ரிட்டன்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR