Baal Aadhaar: குழந்தைகளுக்கான ஆதார் அட்டை பெறுவது எப்படி? முழு விபரம்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கும் 12 இலக்க தனித்துவ அடையாள எண் கொண்ட ஆதார் அட்டை பயோமெட்ரிக் தரவுகளைக் கொண்டிருப்பதால் மிக முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாக உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 4, 2021, 04:46 PM IST
  • ஆதார் அட்டையில் உங்கள் இருப்பிடம் மற்றும் பயோமெட்ரிக் தரவு உள்ளது.
  • புதிதாகப் பிறந்த குழந்தைக்கு கூட ஆதார் அட்டை பெறலாம்
  • இந்த ஆதார் அட்டைகள் பால் ஆதார் என்று அழைக்கப்படுகின்றன.
Baal Aadhaar: குழந்தைகளுக்கான ஆதார் அட்டை பெறுவது எப்படி? முழு விபரம்..!! title=

புதுடெல்லி: இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கும் 12 இலக்க தனித்துவ அடையாள எண் கொண்ட ஆதார் அட்டை பயோமெட்ரிக் தரவுகளைக் கொண்டிருப்பதால் மிக முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. பெரியவர்கள், சிறுவர், சிறுமியர்கள் மட்டுமல்லாது, புதிதாக பிறந்த குழந்தைக்கு கூட ஆதார் அட்டை பெறலாம். இந்த ஆதார் அட்டைகள் பால் ஆதார் என்று அழைக்கப்படுகின்றன.

பால் ஆதார் அட்டைக்கு (Baal Aadhaar card) விண்ணப்பிப்பது எப்படி:

குழந்தைகளுக்கான ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பது என்பது பெரியவர்கள் பின்பற்ற வேண்டிய செயல்முறையைப் போன்றது. பதிவு மையத்தில் கிடைக்கும் விண்ணப்பப் படிவத்தில், அடையாள சான்று (Proof of Identity - PoI), முகவரிச் சான்று (Proof of Address - PoA), உறவுச் சான்று (Proof of Relationship - PoR) மற்றும் பிறந்த தேதி (Date of Birth - DoB) ஆகிய ஆவணங்களுடன் நிரப்ப வேண்டும். UIDAI 31 PoI மற்றும் 44 PoA, 14 PoR மற்றும் 14 DoB ஆவணங்களை ஏற்றுக்கொள்கிறது.

ALSO READ | வங்கி லாக்கர் புதிய விதிகள்; 'இந்த' காரணத்திற்காக லாக்கரை வங்கிகள் உடைக்கலாம்..!!

பால் ஆதார் பற்றிய 5 சுவாரஸ்யமான மற்றும் முக்கியமான தகவல்கள்:

1. 5 வயதிற்குட்பட்ட குழந்தைக்கு நீல நிறத்தில் வழங்கப்படும் பால் ஆதார், குழந்தை 5 வயதை பூர்த்தியானது செல்லாததாகி விடும். அதனால், 5 வயது பூர்த்தியானதும், அதனை புதுபிக்க வேண்டும். 

2. உங்கள் குழந்தையின் பள்ளி அடையாள அட்டையை (அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்ட புகைப்பட ஐடி) குழந்தைகளின் ஆதார் பதிவுக்காக நீங்கள் பயன்படுத்தலாம்.

3. உங்கள் குழந்தையின் பயோமெட்ரிக் ஆதார் தரவை 5 வயதில் புதுப்பிக்கவும், பின்னர் மீண்டும் 15 வயதில் புதுப்பிக்கவும். குழந்தைகளுக்கு, பயோமெட்ரிக் தகவலை புதுப்பிப்பது கட்டாயமாகும். இந்த சேவையை இலவசமாக பெறலாம். ஆதார் அட்டையை மீண்டும் செயல்படுத்த கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு தேவை.

4. குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் அல்லது மருத்துவமனையிலிருந்து நீங்கள் பெற்ற டிஸ்சார்ஜ் சீட்டு, உங்கள் குழந்தைக்கான ஆதார் பதிவு செய்ய போதுமானது.

5. குழந்தையின் ஆதார் தரவில் கைரேகைகள் மற்றும் கண்களின் ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் தகவல்கள் இருக்காது. குழந்தை 5 வயதை பூர்த்தி செய்ததும், பயோமெட்ரிக்ஸ் புதுப்பிக்கப்பட வேண்டும்.

ALSO READ | ரயில் பயணிகளுக்கு டிக்கெட் உடன் கிடைக்கும் முக்கிய வசதிகள்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News