ஆதார் விவரங்கள் leak ஆனால் ஆபத்தா? குழப்பத்தை தீர்த்தது UIDAI
ஆதார் எண்ணை அளிக்கும் UIDAI, உங்கள் ஆதார் எண் மற்றவர்களுக்குத் தெரிந்தால், அதனால், வங்கி கணக்கு ஹேக் செய்யப்படும் ஆபத்து இல்லை என்று மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.
ஆதார் எண்ணை அளிக்கும் UIDAI, உங்கள் ஆதார் எண் மற்றவர்களுக்குத் தெரிந்தால், அதனால், வங்கி கணக்கு ஹேக் செய்யப்படும் ஆபத்து இல்லை என்று மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.
ஆதார் எண் அல்லது அது தொடர்புடைய தகவல்களைப் பெறுவதன் மூலம் மட்டுமே ஒருவர் வங்கியில் இருந்து பணத்தை எடுக்க முடியாது என்று UIDAI கூறுகிறது. இதற்கு OTP, Debit Card, PIN போன்ற பல தகவல்கள் தேவைப்படுகின்றன.
ஆதார் பற்றிய கட்டுக்கதை
ஆதார் பற்றி மக்களின் மனதில் பல வகையான கட்டுக்கதைகள் உள்ளன. UIDAI அவ்வப்போது மக்களின் குழப்பத்தை தெளிவுபடுத்தி குழப்பத்தை அகற்ற முயற்சி செய்து வருகிறது. ATM கார்டு எண்ணை அறிந்து கொண்டால் மட்டும் ATM-லிருந்து பணத்தை எடுக்க முடியாது. அதேபோல் ஆதார் எண்ணை (Aadhaar Number) மட்டும் அறிந்துகொண்டு ஒருவரால் உங்கள் வங்கிக் கணக்கை ஹேக் செய்ய முடியாது என்று UIDAI கூறுகிறது.
ஆதார் எண்ணை மட்டுமே பயன்படுத்தி ஹேக் செய்ய முடியாது
நீங்கள் உங்கள் PIN / OTP எண்ணை யாருடனும் பகிர்ந்து கொள்ளாமல் இருந்தால், உங்கள் வங்கிக் கணக்கு எப்போதும் பாதுகாக்கப்பாக இருக்கும். ஆதார் காரணமாக இதுவரை யாருக்கும் நிதி இழப்பு ஏற்படவில்லை என்று UIDAI கூறுகிறது. ஆதார் (Aadhaar) எண்ணை மட்டுமே வங்கி அல்லது வேறு எந்த சேவைக்கும் பயன்படுத்த முடியாது.
ALSO READ: ஒரு நாளைக்கு 30 ரூபாய் சேமித்து கோடீஸ்வரராகும் Formula இதுதான்!!
நீங்கள் வங்கிக் கணக்கு, பங்குகள்,மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் மொபைல் எண்ணை ஆதாருடன் இணைக்கும் போது, UIDAI-க்கு இவற்றின் தகவல் கிடைக்கிறதா? அப்படிப்பட்ட எந்த தகவலும் கிடைப்பதில்லை என UIDAI தெரிவிக்கின்றது. உங்கள் ஆதார் எண்ணை வங்கிகள், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அல்லது மொபைல் போன் நிறுவனங்களுக்கு நீங்கள் கொடுக்கும்போது, அவர்கள் உங்கள் அடையாளத்தை சரிபார்க்க ஆதார் எண், பெயர் மற்றும் பயோமெட்ரிக்ஸ் ஆகியவற்றை மட்டுமே அனுப்புவார்கள். அவர்கள் உங்கள் வங்கிக் கணக்கின் விவரங்களை UIDAI க்கு அனுப்புவதில்லை.
UIDAI ஐப் பொருத்தவரை, அது ஆம் அல்லது இல்லை என்ற அளவில்தான் சரிபார்ப்புக்கான கோரிக்கைக்கு பதிலளிக்கிறது. சில சந்தர்ப்பங்களில் உங்கள் அடிப்படை KYC விவரங்கள் (பெயர், முகவரி, புகைப்படம் போன்றவை) சேவை வழங்குநருக்கு அனுப்பப்படுகின்றன. உங்கள் வங்கி, முதலீடு, காப்பீடு போன்ற விவரங்களை UIDAI ஒருபோதும் பெறாது.
ஆகையால் உங்கள் ஆதார் எண் மற்றவர்களுக்குத் தெரிந்தால் அதனால் உங்களுக்கு எந்த வித நிதி இழப்போ, அல்லது வங்கிக் கணக்கு (Bank Account) ஹேக் செய்யப்படும் அபாயமோ ஏற்படாது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
ALSO READ: Home loan அடைந்து விட்டதா? இந்த முக்கிய வேலையை செய்ய மறக்காதீர்கள்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR