Kushboo Sundar Shares Carrot Infused Oil Recipe : ஒரு காலத்தில் தமிழ் ரசிகர்கள் கோவில் கட்டிய நடிகை குஷ்பூ. 90களில் தென்னிந்திய அளவில் பிரபல நடிகையாக இருந்த இவர், தனது திருமணத்திற்கு பிறகு திரையுலகில் தோன்றுவதை நிறுத்திவிட்டார். அவ்வப்போது இவரது புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகும். தன் வயதிற்கு ஏற்றார் போல், வெயிட் போட்டு இருந்த இவர் ஒரு சில ஆண்டுகளுக்கு முன் ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு உடல் எடை மெலிந்து பழைய குஷ்பூவாக மாறிவிட்டார். இது ஒரு புறம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்த, இன்னொரு புறம் சருமத்தை பளபளவென முதன்மையாக வைத்துக் கொள்கிறார். 54 வயதாகும் குஷ்பூவின் முகத்தில் அந்த வயதிற்கு ஏற்ற முதிர்ச்சி பெரிதாக தெரியவில்லை. இதையடுத்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் சில அழகு குறிப்புகளை வெளியிட்டு இருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஷ்பூ வெளியிட்ட பதிவு: 


முகத்திற்கு மசாஜ் செய்து வீடியோ போட்ட இவர், அந்த எண்ணெயை தான் வீட்டிலேயே தயாரிப்பதாக தெரிவித்திருக்கிறார். 



ஆல்மண்ட் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், கொஞ்சம் தேங்காய் எண்ணெய், வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் சேர்த்து, தீயை சிரிதாக வைத்து கேரட் சேர்த்து கொதிக்க வைத்து, அதை ஆற வைப்பாராம். பின்பு, அதை ஒரு மஸ்லின் துணியில் போட்டு வடிக்கட்டி உபயோகிப்பாராம். 


சருமத்திற்கு நன்மை பயக்குமா?


குஷ்பூவின் இந்த எண்ணெய் குறித்து பேசும் மருத்துவர்கள், கேரட் மற்றும் தேங்காய் எண்ணெயில் மட்டும்தான் ஆண்டி ஏஜிங் தன்மைகள் உள்ளது என்பது இல்லை என்று கூற்கின்றனர். கேரட்டில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ ஆகிய சத்துகள் அதிகமாக இருப்பதாக கூறும் அவர்கள், ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற காய்கறிகளில் இந்த சத்துகள் காணப்படுவதாக தெரிவிக்கின்றனர். 


குஷ்பூ பகிர்ந்திருக்கும் பதிவில், தான் உபயோகித்திருப்பதாக கூறியிருக்கும் பொருட்களால் சருமம் பொலிவாகலாம் எனக்கூறும் மருத்துவர்கள், இதனால் மட்டும்தான் சருமம் மினுமினுக்கும் என்ற கட்டாயம் இல்லை, எனக்கூறுகின்றனர். நம் சருமம் பொலிவிழப்பதற்கு நாம் மட்டும் காரணம் இல்லை. நம்மை சுற்றி இருக்கும் மாசு, மன அழுத்தம் போன்றவையும் பெரிய காரணங்களாக அமைகின்றன. இதனால், சருமத்தில் ஃப்ரீ ரேடிக்கல்ஸும் உற்பத்தி ஆகலாம் என்றும் கூறுகின்றனர். 


மேலும் படிக்க | Jyothika : உடல் எடையை குறைக்க ஜோதிகா ‘இதை’ தினமும் குடிப்பாராம்! எளிதான இயற்கை பானம்..


குஷ்பூவின் சரும பராமரிப்புகள்:


குஷ்பூ, முகத்தை பொலிவுடன் வைத்திருக்க தயிர், மஞ்சள், தேன், கடலை மாவு மற்றும் குங்குமப்பூ போட்ட பாலை தேய்ப்பதாக கூறப்படுகிறது. இதை பல சமயங்களில் அவர் இயற்கை ஸ்க்ரப் ஆகவும் உபயோகிக்கிறார். இதனால், இது சோப்பிற்கு நல்ல மாற்றாக உபயோகமாகிறதாம். 


முடி பராமறிப்பு:


முடியை கண்ணும் கருத்துமாக பராமரிக்கும் குஷ்பூ, தயிர், தேன், முட்டை, தேங்காய் எண்ணெய், லாவண்டர் மற்றும் ரோஸ்மேரி சில சொட்டுக்கள் கலந்து உபயோகிக்கிறராம். அதே போல, ஷாம்பூ போட்டு தலைக்கு குளித்த பின்பு, குஷ்பூ கண்டிப்பாக கண்டீஷனர் உபயோகிப்பாராம். இது, அவரது கூந்தலை மென்மையாகவும் ஈரப்பதத்துடனும் வைத்துக்கொள்கிறது. 


மேலும் படிக்க | நயன்தாராவின் அழகிற்கு ‘இந்த’ உணவு காரணமாம்! நீங்களும் செய்யலாம்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ