Varalaxmi Sarathkumar Weight Loss Tips : தமிழ் திரை உலகில் முக்கிய நடிகைகளும் ஒருவராக இருப்பவர் வரலட்சுமி சரத்குமார். போடா போடி படம் மூலம் அறிமுகமான இவர், வேகமாக டைலாக் பேசுவதற்கு பெயர் போனவர். கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கும் மேல் திரையுலகில் இருக்கும் இவர் இப்போது ஹீரோயினாக நடிப்பதை விட்டுவிட்டு அவ்வப்போது வில்லியாக அவதாரம் எடுத்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு, இவருக்கு திருமணம் நடைப்பெற்றது. இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் உடல் எடையை குறைத்தார். அதுவும், வெறும் 4 மாதங்களில். இதற்காக அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அவை என்னென்ன என்பதையும், அதில் எதையெல்லாம் பின்பற்றலாம் என்பதையும் இங்கு பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வர்க் அவுட்: 


உடல் எடையை குறைக்க அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பது அவசியம். அதனை வரலக்‌ஷ்மி சரத்குமாரும் பின்பற்றினார். இவர், High-Intensity workoutகளை செய்வார். இதை 15 முதல் 20 நிமிடங்கள் வரை செய்யலாம். இது, உடலில் இருக்கும் கொழுப்புகளை வேகமாக எரிக்க உதவும் வர்க்-அவுட் ஆகும். தசைகளை டோன் செய்து, உடலில் ஸ்டாமினா வளரவும் இந்த உடற்பயிற்சிகள் உதவும். இதில் ஜம்பிங் ஜாக்ஸ், ஹை நீஸ் உள்ளிட்ட வர்க்-அவுட்களை சேர்த்துக்கொள்ளலாம்.


தினசரி செயல்பாடுகள்: 


நம்மில் பலர், உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைத்தாலும் பல சமயங்களில் தினசரி பயிற்சிகளை செய்ய தவறி விடுகிறோம். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, பெரிதாக உடலுக்கு உழைப்பு கொடுக்காமல் இருப்பது போன்ற விஷயங்களை செய்கிறோம். ஆனால், வரலட்சுமி அதை செய்யவில்லை. இவர், தனக்கான வேலைகளை தானே செய்து கொண்டாராம். தினசரி உடற்பயிற்சி செய்தது மட்டுமன்றி ஆக்டிவான வாழ்க்கை முறையையும் பின்பற்றினார்.


யோகா: 


உடல் எடையை குறைக்க வேண்டுமென்றால் நாம் உடற்பயிற்சியை செய்வதை தாண்டி வேறு சில விஷயங்களையும் செய்ய வேண்டும். அதில் ஒன்று யோகாசனம். இதனை தினமும் செய்யும் அவர் தியானமும் செய்ய தனது உடலை பழக்கிக்கொண்டார். இது உடலை ஃபளெக்ஸிபில் ஆக வைத்திருக்க உதவும். தியானம் செய்வதால் உடல் நலம் மேம்படுவதோடு மன நலனும் மேம்படுவதாக கூறப்படுகிறது. மன அழுத்தம் வருவதையும் உடலில் தேவையற்ற அழுத்தம் வருவதையும் குறைக்கலாம். 


மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க நயன்தாரா ‘இதை’ குடிப்பாராம்! என்ன தெரியுமா?


அளவான சாப்பாடு: 


உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி செய்வது மட்டும் போதாது. நாம், அதற்கு ஏற்ற அளவு சாப்பாட்டையும் சாப்பிட வேண்டியது அவசியம். இதை பின்பற்றிய வரலட்சுமி ஹெல்தி உணவுகலை அளவு சாப்பாட்டாக மட்டும் சாப்பிட்டு வந்தாராம். புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும் இவர் எண்ணெய் இல்லாத உணவுகளை தன் டயட்டில் சேர்த்துக்கொள்கிறார். இது உடலில் தேவையற்ற கொழுப்பு சேருவதையும் தவிர்க்கிறது.


ஹெல்தியான ஸ்னாக்ஸ்:


வரலட்சுமி ஸ்மார்ட்டாக ஸ்னாக்ஸ்களையும் உட்கொள்கிறார். தனது தினசரி டயட்டில் நட்ஸ், விதைகள் மற்றும் பழங்களை உட்கொள்ளும் இவர் அதனை சரியான இடைவேளையில் உட்கொள்கிறார்.  இது, நாள் முழுவதும் அவரது எனர்ஜியை உடலில் தக்க வைக்க உதவுகிறது. 


மேலும் படிக்க | 18 கிலோ குறைந்த நீடா அம்பானி-உதவிய டிரைனர் கொடுக்கும் 3 முக்கிய வெயிட் லாஸ் டிப்ஸ்!


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ