கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்ப இதை பின்பற்றினால் போதும்..!
பயம் வேண்டாம்... கொரோனா வைரஸைத் தவிர்க்க பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்..!
பயம் வேண்டாம்... கொரோனா வைரஸைத் தவிர்க்க பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்..!
உலகம் முழுவதும் கொரோனா தொற்றுநோயுடன் போராடுகிறது. இருப்பினும், கொரோனா வைரஸ் மற்றும் பருவகால நோய்களின் அறிகுறிகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. இதனால், கொரோனா தொற்று இல்லாதவர் கூட பருவநிலை கால அறிகுறிகளை கண்டு குழப்பமடைகிறார்கள். மக்களில் கொரோனா தொற்று ஏற்படும் அபாயமும் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த தொற்றுநோயைத் தவிர்ப்பதற்காக, KGMU மருத்துவரின் முன்முயற்சி உங்கள் சிரமங்களை சிறிது குறைக்கலாம்.
இந்த மருத்துவர் ஒரு கொரோனா வைரஸ் கிட்டை தயாரித்துள்ளார். இந்த கிட் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவ பராமரிப்புத் துறையின் தலைவர் டாக்டர் வேத் பிரகாஷ் கூறுகையில்... "மருத்துவர்கள் டெலிமெடிசின் மூலம் ஆலோசனை வழங்குகிறார்கள். நோயாளிகள் கோவிட் மருத்துவ கிட் வைத்திருக்கக்கூடிய மருந்துகளுக்காக நோயாளிகள் சுற்றித் திரிய வேண்டும். ஆனால், இது மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பெரியவர்களுக்கு வழங்கப்படலாம். குழந்தைகளுக்கு மருத்துவரிடம் காட்டாமல் மருந்துகளை கொடுக்க வேண்டாம்.
READ | தினமும் உடலுறவு கொள்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?
டாக்டர் வேத் பிரகாஷின் கூற்றுப்படி, அதிக ஆபத்து உள்ளவர்களை வீட்டில் ஒரு தனி இடத்தில் வைத்திருங்கள். இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதயம், சுவாச நோயாளிகள் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளவர்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்களும் இதை கவனித்துக் கொள்ள வேண்டும்.
கீழே கொடுக்கபட்டுள்ள மருந்துக்களை கொரோனா கிட்டில் வைக்கவும்....
- பராசிட்டோமா மாத்திரை (Tablet Parasitoma)
- விட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் பி, வைட்டமின் டி போன்ற மருந்துக்களை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்துக் கொள்ளுங்கள்.
- தினமும் பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வெயிலில் இருபது நல்லது.
- சத்துள்ள மற்றும் சூடான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
- தினமும் 7 முதல் 8 மணி நேரம் நிம்மதியாக உறங்க வேண்டும்.
- தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் பருக வேண்டும்.
- தினமும் மூன்று நிமிட நடைபயணம் மற்றும் தினசரி உடற்பயிர்சி செய்வது அவசியம்.
- வெந்நீரில் தினமும் இரண்டு முறை ஆவிபிடிப்பது நல்லது.
- எப்போதும் கைவசம் தேர்மோமீட்டர் மற்றும் ஒக்ஸிமீட்டர் வைத்து கொள்ளுங்கள்.
- எப்போதும் நம்பிக்கையுடனும் மன தைரியத்துடனும் இருக்க வேண்டும்.