ஏர்டெல் நிறுவனமானது ஏர்டெல் பிளாக் என்கிற அம்சத்தின் கீழ் இலவச ஓடிடி சந்தாவுடன் போஸ்ட்பெய்டு, பிராட்பேண்ட் மற்றும் டிடிஹெச் அணுகளுக்கான நன்மைகளை வழங்குகிறது. ஏற்கனவே ப்ரீபெய்ட் அல்லது போஸ்ட்பெய்டு இணைப்பில் ஃபைபர், டிடிஹெச் போன்ற சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் பிளாக் வழங்குகிறது.  ஏர்டெல் பிளாக் அதன் வாடிக்கையாளருடன் நல்லுறவை கொண்டுள்ளது. பராமரிப்பு, தவறுகள் மற்றும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்கிறது.  ஏர்டெல் பிளாக், ஏர்டெல் வாடிக்கையாளர்களை டிடிஹெச், லேண்ட்லைன், ஃபைபர் மற்றும் மொபைல் இணைப்பு ஆகியவற்றை ஒரே பில் சுழற்சியில் இணைக்க அனுமதிக்கிறது.  இப்போது பல்வேறு நன்மைகள் கிடைக்கப்பெறும் வகையில்   ஏர்டெல் தரக்கூடிய திட்டங்கள் பற்றி பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | BSNL பயனார்களே..அருமையான 2 பிளான்கள்; உடனே ரீசார்ஜ் செய்யுங்க



1) ஏர்டெல் பிளாக் திட்டம் ரூ.699 : இது ஏர்டெல் பிளாக் வழங்கும் ஆரம்ப நிலை திட்டமாகும். இந்த திட்டம் லேண்ட்லைன், ஃபைபர் வழியாக 40எம்பிபிஎஸ் வரை அன்லிமிடெட் டேட்டா மற்றும் டிடிஹெச் இணைப்பில் ரூ.300 மதிப்புள்ள டிவி சேனல்களுக்கான அணுகலை வழங்குகிறது.  மேலும் இந்த திட்டத்தில் டிஸ்னி ஹாட்ஸ்டார், சோனி லிவ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப்ஸ் மற்றும் மேலும் 12 ஓடிடிகளுக்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது. ஆனால் இந்த திட்டம் போஸ்ட்பெய்டு இணைப்பை வழங்காது.


2) ஏர்டெல் பிளாக் திட்டம் ரூ.899 : இந்த திட்டம் 105 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புடன் 2 போஸ்ட்பெய்ட் இணைப்புகளை வழங்குகிறது.  அமேசான் ப்ரைம் வீடியோக்கள், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் மற்றும் 12 ஓடிடிகளுக்கான இலவச சந்தாவையும், டிடிஹெச் இணைப்பில் ரூ.350 மதிப்புள்ள டிவி சேனல்களுக்கான அணுகலை வழங்குகிறது.


3)  ஏர்டெல் பிளாக் திட்டம்  ரூ. 1098 : இந்த திட்டம் ஃபைபர் மற்றும் லேண்ட்லைன் இணைப்புடன் 100எம்பிபிஎஸ் வேகத்துடன் 75 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புடன் போஸ்ட்பெய்ட் திட்டத்துடன் வருகிறது.  அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டாருக்கான இலவச சந்தாவையும் இது வழங்குகிறது.


4) ஏர்டெல் பிளாக் திட்டம் ரூ. 1099 :  இது லேண்ட்லைன் மூலம் அன்லிமிடெட் அழைப்பை வழங்குகிறது,  ஃபைபரில் 200எம்பிபிஎஸ் வரை அன்லிமிடெட் டேட்டாவை வழங்குவதுடன் அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் 13 ஆப்ஸ் உள்ளிட்ட ரூ.350 மதிப்புள்ள OTT சேனல்களுக்கான அணுகலையும் வழங்குகிறது.


5)  ஏர்டெல் பிளாக் திட்டம் ரூ.1599 :  இந்த திட்டம் ஃபைபர் மற்றும் லேண்ட்லைன் இணைப்புடன் அன்லிமிடெட் அழைப்பு மற்றும் 300எம்பிபிஎஸ் வேக டேட்டா வரை வருகிறது.  இதில் ரூ.350 மதிப்புள்ள டிவி சேனல்களுடன் டிடிஹெச் இணைப்பும் உள்ளது, மேலும் இது நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் வீடியோ, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் போன்ற பல ஓடிடி நன்மைகளையும் வழங்குகிறது.


6) ஏர்டெல் பிளாக் திட்டம் ரூ.1799 :  இந்த  திட்டத்தில் ஃபைபர், லேண்ட்லைன், 200எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கிறது.  இந்த திட்டம் 190ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புடன் 4 போஸ்ட்பெய்ட் இணைப்புகளையும் வழங்குகிறது.  மேலும் அமேசான் பிரைம் வீடியோக்கள், டிஸ்னி ப்ளஸ்  ஹாட்ஸ்டார், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் போன்ற பல நன்மைகளை வழங்குகிறது.


7) ஏர்டெல் பிளாக் திட்டம் ரூ.2299 :  இது ஏர்டெல் பிளாக் வழங்கும் விலையுயர்ந்த திட்டமாகும், இது ஃபைபர் மற்றும் லேண்ட்லைன் இணைப்புடன் அன்லிமிடெட் அழைப்பு மற்றும் 300 எம்பிபிஎஸ் வரை டேட்டாவை வழங்குகிறது.  இது 240 ஜிபி டேட்டாவுடன் 4 போஸ்ட்பெய்ட் இணைப்புகள் மற்றும் அன்லிமிடெட் அழைப்பு மற்றும் ரூ.350 மதிப்புள்ள டிவி சேனல்களுடன் டிடிஹெச் இணைப்பையும் வழங்குகிறது. மேலும் நெட்ப்ளிக்ஸ், ப்ரைம் வீடியோஸ், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் போன்ற ஓடிடி நன்மைகளையும் வழங்குகிறது.


மேலும் படிக்க | ஜியோ 5ஜி நெட்வொர்கை 5ஜி மொபைலில் யூஸ் பண்ண முடியாது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ