Honda Alert: கார் வாங்கப்போறீங்களா? அடுத்த மாதம் கார் விலை அதிகரிக்கும்!!
மூலப்பொருட்களின் விலைகள் மற்றும் பிற உள்ளீட்டு செலவுகள் காரணமாக இந்தியாவில் கார்களின் விலையை அதிகரிக்க ஹோண்டா முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி: மூலப்பொருட்களின் விலைகள் மற்றும் பிற உள்ளீட்டு செலவுகள் காரணமாக இந்தியாவில் கார்களின் விலையை அதிகரிக்க ஹோண்டா முடிவு செய்துள்ளது. சமீபத்திய விலைகள் ஆகஸ்ட் முதல் நடைமுறைக்கு வரும். ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் மூத்த துணைத் தலைவரும், இயக்குநருமான ராஜேஷ் கோயல் கூறுகையில், “எஃகு, அலுமினியம் மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்கள் போன்ற மூலப்பொருட்களுக்கான விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளன. சிலவற்றின் விலைகள் முன் எப்போதும் இல்லாத அளவு அதிகமாக உள்ளன. இதனால் எங்கள் உள்ளீட்டு செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளன” என்றார்.
ஆகஸ்ட் முதல் அமல்படுத்தப்படும் விலை உயர்வு குறித்த விவரங்களை ஹோண்டா (Honda) தற்போது உருவாக்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். "எங்கள் முயற்சி கையகப்படுத்தல் செலவைக் குறைவாக வைத்திருப்பதுதான். ஆகையால், தற்போது நாம் எவ்வளவு கூடுதல் செலவுகளை ஏற்றுக்கொள்ள முடியும் என்பதைப் பற்றி யோசித்து வருகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களைப் பற்றி நாங்கள் சிந்திக்கிறோம். திருத்தப்பட்ட விலைகள் அடுத்த மாதத்திலிருந்து செயலுக்கு வரும்” என கோயல் பி.டி.ஐ-யிடம் தெரிவித்தார்
தற்போது, ஹோண்டா இந்தியாவில் ஹோண்டா சிட்டி, அமேஸ் மற்றும் ஜாஸ் உள்ளிட்ட பல்வேறு கார்களை (Cars) விற்பனை செய்கிறது. இருப்பினும், அடுத்த மாதம் முதல் எந்த கார் மாடல்களின் விலை உயரும் என நிறுவனம் இன்னும் தகவலை வெளியிடவில்லை. ஹோண்டா இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விலைகளை அதிகரித்தது.
ALSO READ: Electric Scooter-களை அறிமுகம் செய்யவுள்ளன Hero, Honda: 5 மடங்கு செலவு குறையும்!!
மூலப்பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவதால் ஹோண்டாவுக்கு முன்னர், மாருதி இந்தியாவும் (Maruti India) தனது கார்களின் விலையை உயர்த்தியுள்ளது. 2021 ஆம் ஆண்டில், இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளரான மாருதி, கார் மாடலைப் பொறுத்து கார்களின் விலையை ரூ .34 ஆயிரம் வரை உயர்த்தியிருந்தது.
ஒரு பி.டி.ஐ அறிக்கையின்படி, “கடந்த சில மாதங்களாக நாட்டில் எஃகு விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஜூன் மாதத்தில், முன்னணி உள்நாட்டு எஃகு தயாரிப்பாளர்கள் ஹாட் ரோல்ட் காயில் (எச்.ஆர்.சி) மற்றும் கோல்ட் ரோல்ட் காடில் (சி.ஆர்.சி) விலையை முறையே டன்னுக்கு ரூ .4,000 மற்றும் ரூ .4,900 வரை உயர்த்தியுள்ளனர். ”
ALSO READ: ஹோண்டா கார்கள் மீது சிறப்பு தள்ளுபடி, விலை, அம்சங்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR