Electric Scooter-களை அறிமுகம் செய்யவுள்ளன Hero, Honda: 5 மடங்கு செலவு குறையும்!!

பெட்ரோல் விலை இந்தியாவில் பல இடங்களில் ரூ .100-ஐ தொட்டு விட்டது. பெட்ரோல் விலை உயர்வு மக்களை வெகுவாக பாதித்துள்ளது. ஆகையால் இரு சக்கர வாகன நிறுவனங்கள் இப்போது தங்கள் கவனத்தை மின்சார இரு சக்கர வாகனங்கள் பக்கம் செலுத்தி வருகின்றன. 

Written by - ZEE Bureau | Last Updated : Jun 22, 2021, 12:30 PM IST
  • Hero MotoCorp மற்றும் Gogoro-வின் கூட்டணியில் வரவுள்ளது ஒரு புதிய மின்சார ஸ்கூட்டர்.
  • ஜப்பானிய கார் நிறுவனமான ஹோண்டாவும் விரைவில் ஒரு மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்யவுள்ளது.
  • மின்சார ஸ்கூட்டர்களுக்கான செலவு பெட்ரோல் ஸ்கூட்டரைக் காட்டிலும் மிகக் குறைவாகும்.
Electric Scooter-களை அறிமுகம் செய்யவுள்ளன Hero, Honda: 5 மடங்கு செலவு குறையும்!!

Upcoming Electric Scooters: பெட்ரோல் விலை இந்தியாவில் பல இடங்களில் ரூ .100-ஐ தொட்டு விட்டது. இதன் காரணமாக ஸ்கூட்டரை ஓட்டுவதற்கும் நீங்கள் பல முறை சிந்திக்க வேண்டியுள்ளது. ஆகையால் இரு சக்கர வாகன நிறுவனங்கள் இப்போது தங்கள் கவனத்தை மின்சார இரு சக்கர வாகனங்கள் பக்கம் செலுத்தி வருகின்றன. பெட்ரோலுடன் ஒப்பிடும்போது இதில் செலவுகள் மிகக்குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. 

Hero-Gogoro-வின் மின்சார ஸ்கூட்டர் Viva

சில நாட்களுக்கு முன்பு Hero MotoCorp மற்றும் Gogoro ஒரு கூட்டணியை அறிவித்தன. இதன் கீழ் அவர்கள் 2022 ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் தங்கள் முதல் மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய உள்ளனர். ஊடக அறிக்கையின்படி, இந்த மின்சார ஸ்கூட்டருக்கு Viva என்று பெயரிடப்படக்கூடும்.

Gogoro-வின் பேட்டரி ஸ்பேப்பிங் நெட்வர்க் இதில் இருக்கும் 

தைவானை தளமாகக் கொண்ட கோகோரோ, பேட்டரி மாற்றம் மற்றும் ஸ்மார்ட் இயக்கத்திற்கான தீர்வுகளை வழங்கும் நிறுவனமாகும். ஹீரோ அதிக மின்சார இரு சக்கர வாகனங்களை உருவாக்கும், கோகோரோ அவற்றுக்கான பேட்டரி மாற்றும் வலையமைப்பை அமைக்கும். இதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு கோகோரோ நெட்வொர்க்கிலிருந்து பேட்டரிகளை மாற்றுவதற்கான தளம் கிடைக்கும்.

விவா 85 கி.மீ. ரேஞ்சைக் கொண்டிருக்கும்

கோகோரோ ஏற்கனவே விவா என்ற பெயருக்கான வர்த்தக முத்திரையை பெற்றுள்ளதாகவும், இந்தியாவுக்கான காப்புரிமையையும் பெற்றுள்ளதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. Gogoro Viva இருக்கைக்கு அடியில் ஒரு பேட்டரி பேக் உடன் வரும். இந்த பேட்டரி டிஸ்சார்ஜ் ஆனவுடன் உடனடியாக மற்றொரு பேட்டரியை மாற்றிவிடலாம். இதன் ரேஞ்ச் 85 கி.மீ. இருக்கும் என கூறப்படுகின்றது.

Honda, எலக்ட்ரிக் ஸ்கூட்டர் Benly-E -ஐ அறிமுகம் செய்யவுள்ளது 

Hero Motocorp-ஐ தவிர, ஜப்பானிய கார் நிறுவனமான ஹோண்டாவும் (Honda) விரைவில் ஒரு மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்யவுள்ளது.  இந்திய சாலைகளில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பென்லி-இ சோதனை செய்வதையும் காண முடிந்தது. 2019 ஆம் ஆண்டில், ஹோண்டா தனது பென்லி இ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடரை முதல் முறையாக அறிமுகப்படுத்தியது. இப்போது இந்த ஸ்கூட்டரை இந்திய தானியங்கி ஆராய்ச்சி சங்கம் (ARAI) சோதனை செய்துள்ளது. எனவே, அதன் அறிமுகம் விரைவில் செய்யப்படலாம் என்ற ஊகங்கள் உள்ளன. எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறப்படவில்லை.

ALSO READ:Electric Vehicle: பெட்ரோல் கவலை வேண்டாம், பட்ஜெட்டுக்குள் அசத்தலான ஸ்கூட்டர்கள் இதோ

பென்லி-இ-யின் ரேஞ்ச் 87 கி.மீ. ஆக இருக்கும்
இரண்டு வெவ்வேறு மோட்டார் விருப்பங்களுடன் ஹோண்டா அதை வழங்குகிறது. Benly-E I மற்றும் I Pro-வில் நிறுவனம் 2.8kW திறன்கொண்ட எலக்ட்ரிக் மோட்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 13 Nm டார்க்கை உருவாக்குகிறது. இந்த ஸ்கூட்டர் ஒரே சார்ஜில் மணிக்கு 30 கி.மீ வேகத்தில் இயக்கும்போது 87 கி.மீ வரையிலான வரம்பைக் கொடுக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. பென்லி இ II மற்றும் II ப்ரோவில், நிறுவனம் 4.2 கிலோவாட் மின்சார மோட்டாரைப் பயன்படுத்தியது. இது 15 என்எம் டார்க்கை உருவாக்குகிறது. இது 60 கி.மீ வேகத்தில் இயக்கும்போது 43 கி.மீ. வரையிலான ரேஞ்சை அளிக்கின்றது.

மின்சார ஸ்கூட்டரில் மிகக் குறைந்த செலவு

எந்த மின்சார ஸ்கூட்டர் அல்லது இரு சக்கர வாகனத்திலும் பொதுவாக 3.5 கிலோவாட் முதல் 4 கிலோவாட் திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். அதை முழுமையாக சார்ஜ் செய்ய 3-4 யூனிட் மின்சாரம் தேவைப்படுகிறது. உங்கள் நகரத்தில் உள்ள மின்சார கட்டணத்தை பொறுத்து இவற்றை முழுமையாக சார்ஜ் செய்வதற்கான செலவும் நிர்ணயிக்கப்படும். 

உங்கள் மாநிலத்தில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ .7 என்று வைத்துக்கொண்டால், 4 யூனிட்டுகள் என்ற கணக்கில், முழு சார்ஜிங்கிற்கான கட்டணம் 7x4 = ரூ 28 ஆகும். ஒரு ஸ்கூட்டர் 85 கிமீ வரம்பைக் கொடுத்தால், 28 ரூபாயில் நீங்கள் 85 கிமீ ஓட்ட முடியும் என்று அர்த்தம். இதுதான் மின்சார ஸ்கூட்டரின் கணக்கு!!

இப்போது பெட்ரோலில் ஆகும் செலவைக் கணக்கிடலாம். இப்போது கிடைக்கும் ஸ்கூட்டர்களின் சராசரி மைலேஜ் பொதுவாக லிட்டருக்கு 50-60 கிலோமீட்டர் ஆகும். இன்று டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .97.22 ஆக உள்ளது. அதாவது, ஒரு கிலோமீட்டருக்கு ரூ .1.63 செலவாகிறது. அதாவது, 85 கி.மீ.க்கு ரூ .139 (1.63x85) செலவாகும்.

எனவே மின்சார ஸ்கூட்டரால் (Electric Scooter) ஏற்படும் மொத்த சேமிப்பு 139-28 = ரூ 111 ஆகும். அதாவது, பெட்ரோல் ஸ்கூட்டருக்கு ஆகும் விலையில் நீங்கள் உங்கள் மின்சார ஸ்கூட்டரை 4 முறை அதிகமாக சார்ஜ் செய்யலாம். அதன்படி நீங்கள் 336 கி.மீ தூரம் அதிகமாக செல்லலாம்.

ALSO READ:ரூ .18,000 வரை மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் Electric Scooters

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News